தேதி: June 28, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பெரிய வெங்காயம்-3
கடுகு- 1 ஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கை
அரைத்த இஞ்சி விழுது- அரை ஸ்பூன்
அரைத்த பூண்டு விழுது- அரை ஸ்பூன்
உருளைக்கிழங்கு-4
எண்ணெய்- 4 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
தேவையான உப்பு
கீழே உள்ள பொருள்களை கொரகொரப்பாக அரைக்கவும்:
அரை ஸ்பூன் வறுத்த தனியா, அரை ஸ்பூன் சோம்பு, மிளகாய் வற்றல்-3, பட்டை-1, 2 கிராம்பு, பொட்டுக்கடலை- 2 மேசைக்கரண்டி, தேங்காய்த்துருவல்-2 மேசைக்கரண்டி, பொடியாக அரிந்த தக்காளி- முக்கால் கப்
உருளைக்கிழங்குகளை வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்க்கவும்.
அது வெடித்ததும் வெங்காயத்தை அரிந்து கறிவேப்பிலையுடன் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுதை மஞ்சள் தூளுடன் சேர்த்து வதக்கவும்.
அரைத்ததைச் சேர்த்து உப்பு,சிறிது தண்ணீர் கலந்து கொதிக்க விடவும். உருளைக்கிழங்கை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
Comments
இன்று இரவு
இன்று இரவு மனோ ஆன்டியின் உருளைக்கிழங்கு குருமா ( காயெல்லாம் கூட போட்டு) செய்தேன். ரொம்ப நல்லா இருந்தது. சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன்
"If you want to feel rich, just count the things you have that money can't buy."
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
உருளைகிழங்கு குருமா
மனோமேடம் உருளைகிழங்கு குருமா சப்பாத்திக்கு செய்தேன்,குருமா கொஞ்சம் கூட மீதியாகலை அவ்வளவு டேஸ்டா இருந்தது நன்றி மேடம்.
கவி-உருளைக்கிழங்கு குருமா!
அன்புள்ள கவி!
உருளைக்கிழங்கு குருமா, தேங்காய் சட்னி இரண்டையும் செய்து பார்த்து ருசித்து அன்பான பின்னூட்டமளித்த உங்களுக்கு என் அன்பு நன்றிகள்!!
எல்லாரும்
எல்லாரும் எப்படி இருக்கிங்க
very nice receipe
உருளைக்கிழங்கு குருமா
இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த உருளைக்கிழங்கு குருமாவின் படம்
<img src="files/pictures/aa208.jpg" alt="picture" />