குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்துகள் பகுதி

இதில் நம் அருசுவை தோழிகளின் எல்லாருடையா குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்த்து பகுதியாக இது மலருகிறது. இதில் எல்லா குழந்தைகளின் பிறந்தநாளை தெரியபடுத்தினால் நாம் எல்லாரும் வாழத்த வசதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். வாங்க வாங்க வந்து கலந்துகுங்க.அதே மாதிரி நிற்ய்ய பார்டி மெனு&டிப்ஸ் எல்லாம் சொல்லுங்க வசதியா இருக்கும்.நன்றி.

ஹலோ விஜி,
திவ்யா குட்டிக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.ரொம்ப நல்ல திரெட் ஆரம்பித்திருக்கிறீகள்,அதற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.எனது குழந்தையின் பிறந்த நாளையும் இதனுடன் இணைத்துள்ளேன்
எனது மகள் தர்ஷிணியின் பிறந்த நாள் 28/3/2005

ந்ன்றி,
கவிதா.

kavitha

ஹாய் விஜி,அருமையான திரெட்.belated birthday wishes to divya chellam .என் மகன் ஜனார்த் முதல் பிறந்த நாளை 4th july கொண்டாட இருக்கிறோம்
அன்புடன்
ஜமுனா

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

ஹாய், விஜி உங்க பென் திவ்யா குட்டிக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா சந்தோஷங்களுடனும் ஆயுள் ஆரோக்கியாமா பல்லாண்டு வாழ வாழ்துகிறென்........... http://in.youtube.com/watch?v=yYJPIZ-C-9c&feature=related

naturebeuaty

விஜி,வித்யா,சிஜா,உங்களுடைய குழந்தைகளுக்கு என்னுடைய அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.வாழ்வில் எல்லா நலமும்,வளமும் பெற்று நோய் நொடிகளில்லாமல் நீண்ட ஆயுளோடு வாழ வாழ்த்துகிறேன்.
januma உங்கள் மகனின் முதல் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுங்கள். அவன் வாழ்வில் எல்லா நலமும், வளமும் பெற்று நோய் நொடிகளில்லாமல் வாழ வாழ்த்துகிறேன்.

விஜி நல்ல த்ரெட் ஆரம்பித்ததற்க்கு நன்றிமா.

என் மகனின் பிறந்த நாள் ஆகஸ்ட் 23.

அன்புடன் கதீஜா.

சாரி விஜி நேற்று முழுக்க சிஸ்டம் பக்கமே வரல அதான் விஷ் பண்ண முடியல. உங்க குழந்தைக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற இறைவனிடன் பிரார்த்திக்கிறேன்.
என்ன நேற்று ரொம்ப நல்லா எஞாய் பண்ணாலா? அவளுக்கு பிடிச்சது எல்லாம் செய்தீங்களா? புது ரெஸ் எல்லாம் போட்டு இருந்தாளா?meet later

ஹெல்லொ விஜி திவ்யா செல்லத்திற்கு எனது தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். (Thanks for opening a useful & nice thread)

ஜானுமா, உங்க குட்டி செல்லம் ஜனார்த்துக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

குழன்தைகள் இருவரும் நல்லா ஆரோக்யத்துடன் வாழ வளர எனது ப்ரார்த்தனைகள்.

என்ன வித்யா, சிஜா இரண்டு பேரும் மெனுவெல்லாம் ரெடி செய்தாச்சா? என்ன செய்ய போறீங்கன்னு ப்ளான் எல்லாம் முடிஞ்சாச்சா? குட்டிஸ் இரண்டு பேரும் எப்படி இருக்காங்க? சாப்பிங் எல்லாம் முடிஞ்சதா?

உங்க குழந்தைகள் இருவருக்கும் என்னுடைய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ரஜினி, விஜி, பிரதீபா ஜெயந்தி மாமி, கதீஜா, காயத்திரி.... வாழ்த்து சொன்ன உங்க எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப... நன்றி. என்னோட பையனின் பிறந்த நாள்... ஜூலை 10th.

விஜி... உங்க செல்ல குட்டிக்கு என்னோட belated birthday wishes!! " happy birthday to u.. divya! ! !!
then, என்ன மெனு? கொஞ்சம் ஐடியா சொல்லுங்களேன்....
அப்புறம்... januma!!! my sweet wishes to ur kutti janarth too!! :)

எல்லாரும் எப்படி இருக்கீங்க? ரெண்டு நாளா கொஞ்சம் பிசி... ( ஒன்னும் இல்ல... பகல் ல நானும் என் பையனோட சேர்ந்து தூங்கிட்டேன்... நான் கூட தூங்கின தொடர்ந்து நாலு மணி நேரம் துங்கறான்.. அவன மட்டும் தூங்க வைச்சா, instalment ல தூங்குவான்... என்னத்த பண்ண?? )

பிறந்த நாள் மெனு இன்னும் ரெடி ஆகலை... தமிழ் நாடு அண்ட் ஆந்த்ரா ல, மெனு யோசிச்சிகிட்டு இருக்கேன்... வித்யா!! உங்க மெனு வ கொஞ்சம் சொல்லுங்களேன்...

காயத்ரி... பொதுவா... எங்க பாமிலி ல பிறந்த நாளுக்கு.. கோவிலுக்கு போறது தவிர... பெருசா எதுவும் செய்ய மாட்டங்க.. ( மாமியார் வீட்டிலையும் அப்படி தான்! ). ஆனா... என்னோட மகன் பிறந்த நாளுக்கு எல்லாரும் ஊருல இருந்து வர்றாங்க. சோ, கொஞ்சம் விதயசமா, எல்லாரும் என்ஜாய் பண்ற மாதிரி பண்ணனும் நெனக்கிறேன்.

( பிறந்த நாள் அன்று ஆதரவற்றோர் இல்லதிக்கு போக விருப்பம் இல்லை. அவங்கள பார்த்தா.... மனசு வருத்தமாயிடும். அப்புறம் அத பத்தியே யோசிச்சிகிட்டு இருப்பேன்... எல்லாரும் வந்து இருக்கும் போது, அது நல்ல இருக்காது.. பொதுவா... நான் என்னோட.. பையனுக்கு.... பேரு வைக்கும் போது... மொட்டை போடும்போது... எல்லாம் பெரியவங்க கொடுத்த பணத்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடுத்தேன்.. சோ, பிறந்த நாளுக்கும் அதையே தொடரலாம் நு இருக்கேன். )

அதனால்... உங்களுக்கு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க காயத்ரி...
மர்ழியா.... உங்க பொண்ணு பிறந்த நாளுக்கெல்லாம் என்னப்பா பண்ணினீங்க? கொஞ்சம் சொல்லுங்களேன்... தளிகா! நீங்களும் தான்! எல்லாரும் சீனியர் மம்மிஸ் தானே? கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம் இல்ல??

சிஜா தோட்டா.
life is not wat u think! It is more than that!!!

இபடிலாம் பாடா படுத்துறீங்களே சிஜா சின்ன பொண்ணுதான் இருக்கு அதுக்கு போய் சீனியாரா ஆக்கிட்டீங்களே சிஜா இதை யார்ட்ட சொல்லி அழுக ஆ ஆ..

நான் இரண்டு வருஷமும் கொண்டாடினேன் அதும் காரணம் இருக்கு முதல் பிறந்த நாள் அன்று வாழ்கையில் மறக்க முடியாதுன்னு இறுதி நேரத்தில் சின்ன ஆசை வந்து கொண்டாடினேன்..அடுத்து இங்கு இருக்கும் ஸ்டாப்ஸ்கெல்லாம் மரியத்தை ரொம்ப பிடிக்கும் அவங்கலாம் ஒரே அடம் அதானால் ரிட்டன் கொண்டாட்டம் இரண்டிலும் சிம்பில்தான் சும்மா தெரிஞ்சவங்களை அழைத்து கேக் வெட்டி புட்டிங்,ஸ்டாபெரி ஷேக்,கறி கஞ்சி,கட்லட்,சமோசா,மிக்ஷர்,கோக்கோ,பிரியாணி இவ்லோதான் நியாபகம் இருக்கு சிஜா அடுத்த பிரந்த நாள் க்கு நோ பங்ஷன் ந்னு ஐடியால இருக்கேன்..ஒரு அமோண்ட் எடுத்து ஏழைக்கு கொடுத்துடலாம்னு இன்ஷஅல்லாஹ் அவங்க வேண்டுதலே போதும் நம் பிள்ளைகளுக்கு..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா இதுக்குப் போய் அழுதா எப்டி.சீனியர் மெம்பெர்ஸ்னா வயசானவங்கன்னு அர்த்தமா என்ன.எனக்கு முன்னே இங்கு வந்தவர்கள் சினியர்ஸ் அதானே.
சிஜா நான் என் மகளுக்கு கொண்டாடியது இல்லை..எங்களுடைய சொந்த சந்தோஷத்திற்காக கனவரும் நானும் மகளுகும் வெளியே சென்றோம் அன்று முழுக்க சந்தோஷமாக இருந்தோம்...கடவுளுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி சொல்வேன் அன்று இப்படி ஒரு குடும்பத்தை எனக்கு தந்ததற்காக ஸ்பெஷல் ப்ரேயர் அவ்வளவு தான்.ஆனால் விருப்பபட்டால் அல்லது யாருடைய ஆசைக்காக என்றால் நீங்கள் ஃப்ரென்ட்ஸை கூப்பிட்டு ஒரு பார்குக்கோ ஹோடெலுக்கு போகலாம்.
அதாவது அடைந்து கிடக்கும் ஹோடெலுக்கு போனால் குழந்தைகளுக்கு போர் அடித்து போகும்..திறந்த வெளி ரெஸ்டாரன்டுக்கு போகலாம்..குழந்தைகள் ஓடியாட வசதியாக முன்னயே ரெஸெர்வ் பன்னி வைக்கலாம்.எனக்கு ஒன்னும் யோசனையேற் வர மாட்டேஙுது..இதைத் தான கேட்டிங்கன்னு சரியா படிச்சு பாக்க நேரமும் இல்ல..
பிறகு சமயம் கிடக்கும்பொழுது வந்து நல்ல படிச்சு பதில் போடிகிறேன்.

மேலும் சில பதிவுகள்