குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்துகள் பகுதி

இதில் நம் அருசுவை தோழிகளின் எல்லாருடையா குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்த்து பகுதியாக இது மலருகிறது. இதில் எல்லா குழந்தைகளின் பிறந்தநாளை தெரியபடுத்தினால் நாம் எல்லாரும் வாழத்த வசதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். வாங்க வாங்க வந்து கலந்துகுங்க.அதே மாதிரி நிற்ய்ய பார்டி மெனு&டிப்ஸ் எல்லாம் சொல்லுங்க வசதியா இருக்கும்.நன்றி.

அப்பாடா! இந்த பதிலை வாங்கறதுக்குள்ள..... என்னென்ன டயலாக் சொல்ல வேண்டி இருக்கு!!!! ஹ்ம்ம்... நீங்க சொல்றதும் நல்ல ஐடியா.... விரும்பியதை சாப்பிடும் வசதியுள்ள கூப்பிட்டு பார்ட்டி குடுக்கறதா விட..... இல்லத்வகளுக்கு அந்த அமௌன்ட்-எ கொடுத்த அவங்களுக்கு உதவிய இருக்கும்..... நல்ல சிந்தனை!!! வாழ்த்துக்கள்!

அப்புறம்.... சீனியர் மம்மி தானே சொன்னேன்... என்னவோ சீனியர் சிட்டிசன் நு சொன்ன மாதிரி பீல் பண்ண கூடாது... ஓகே வா? வேணும் ந... பெரிய மம்மி நு சொல்லவா? இல்லேன்னா.. மரியம் மம்மி! இதெப்படி இருக்கு?? ஹா ஹா ஹா!!! (என் பையன் சிரிக்கறான்! )
சிஜா தோட்டா..
life is not wat u think! It is more than that!!!

தளி இல்லைப்பா அவங்க சீனியர் மம்மினு சொன்னான்ங்க சீனியர் மெம்பர் இல்லை..

சிஜா ஆமாம் அப்படி கொடுத்தால் புண்ணியமும் கூட அதோட நமக்கு ஒரு திருப்தி இருக்குமே!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ரஜினி, பிரதீபா, ஜெயந்தி மாமி, கதீஜா தங்கள் வாழ்த்துக்கு நன்றிப்பா. தங்களின் ஆசிர்வாதத்தில் நிச்சயமாக அவர்கள் நற்சுகத்துடன் இருப்பார்கள்.

காயத்திரி ரொம்ப பிசிதான்ப்பா, சாப்பிங் சாப்பிங் ஒண்ணும் முடிந்த பாடு இல்லை.

சிஜா மெனு கேட்டீர்கள் அல்லவா இதோ

Starter - சமோசா (இங்கு ஒரு கடையில் நம்ம தமிழ் நாட்டு ஸ்டைலில் போடுவார்கள்), கிரில் சிக்கன் ( இது நம்ம ஜலீலாக்கா ரெசிபி(http://www.arusuvai.com/tamil/bbq) வீட்டில் செய்கிறோம்)

நாண்

வெஜ் முக்கிய உணவு - தேங்காய் பால் சாதம் (திருமதி. பைரோஜா ஜமால் அவர்களின் குறிப்பு- வீட்டில் செய்கிறோம் http://www.arusuvai.com/tamil/node/3244), சன்னா மசாலா)

மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி( திருமதி. மர்ழியா அவர்களின் குறிப்பு- வீட்டில் செய்கிறோம் http://www.arusuvai.com/tamil/node/8495)

சிப்ஸ், தயிர் பச்சடி, தயிர் சாதம் ஊறுகாய்
ஐஸ் கிரிம், பழம் (ஸ்ட்ரா பேரி, திராட்சை)

மாம் பழ ஜூஸ்

ஹாய் சிஜி,
எப்படி இருக்கீங்க?. குட்டியோட பிறந்தநாளை எப்படி கொண்டாடலாம்னு தலையை பிச்சுக்கிறீங்க போல இருக்கே. ஒவ்வொரு வருஷமும் என் பையனுக்கு இங்கே பிறந்தநாள் கொண்டாடிக்கிட்டுவர்றோம். ஆனாலும் நீங்க சொன்னமாதிரி ஒரு தொகையையும் ஆதரவற்றோர் இல்லத்துக்கும் அனுப்பிடுவோம். சரியா இவன் பர்த்டே சமயம் இந்தியாவுக்கு பணம் அனுப்பிடுவேன். அதுக்கப்புறம், எப்ப இந்தியா போறமோ அப்ப கண்டிப்பா ஆதரவற்றோர் இல்லத்துக்கும் போயிட்டுதான் வருவோம் . என் பையன் பிறந்ததுக்கு அப்புறம் இதை ஒரு வழக்கமாவே செஞ்சுட்டு இருக்கோம். நாம செய்யறச் சின்ன உதவி அவங்களுக்கு [ இல்லத்தில் இருக்கிறவங்களுக்கு] எவ்வளவு பெரிய சந்தோசம்ங்கிறதை என் பையன் உணரனும்ங்கிறதுக்காகவே போறோம். பிறந்தநாளுக்கு நீங்க பசங்களை இன்வைட் செய்யறதா இருந்தா, ஏதாவது ஒரு தீம் செலக்ட் செஞ்சுக்கோங்க. அப்பிடின்னா அதுக்கேத்த மாதிரி சின்ன, சின்ன பொருள்களை வாங்கி டெகரேட் செய்யலாம். ஃபங்சனுக்கு வர்ற பசங்களுக்கு சின்ன கிப்ட்ஸ் கொடுக்கலாம் [ பென்சில் பாக்ஸ், கிரயான்...]. ஏதாவது இன்டராக்டிவ் கேம்ஸ் பண்ணலாம்.

வாங்கிக்கோங்க மெனு,

ஸ்டாட்டர் - சமொசா [அ] கட்லெட்
இட்லி, சாம்பார்
சப்பாத்தி , சிக்கன் குருமா
வெஜ் நூடுல்ஸ் [ பசங்களுக்குப் பிடிக்கும்]
பிரியாணி , ராய்தா
தயிர்சாதம், பொடெடொ கறி
கேக் , ஐஸ் கிரீம்
ஓ.கே. என்ஞ்சாய் செய்யுங்க.
Rajini

ஹாய் வித்யா அண்ட் ரஜினி!
செமத்தியான மெனு தான்! என்னோட கணவரோடு பேசி எங்க மெனு வா முடிவு பண்ணிக்கறேன்...
அப்புறம்.... என்னோட மகனுக்கு இதுதான் முதல் பிறந்த நாள்... சோ, அவனுக்குன்னு நண்பர்கள் யாரும் இல்லை... எனக்கும் house owner மட்டும் தான் பழக்கம்! அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் சீனியர் சிடிசன்ஸ்!!! ரெண்டு வீடு தள்ளி... ஒரு குட்டி பொண்ணு இருக்கா. நைட் சாப்பாடு ஊட்ட... நான் என் பையன தூக்கிட்டு தெருவிற்கு ( நடு தெருவிளவு தான்... சாப்பிடுவார்...) போன... அந்த குட்டி பொண்ணோட ஆயாம்மாவும் வாருவாங்க.. சோ, அவ தான் இப்போதைக்கி ஒரே friend.
என்னோட மற்றும் என் கணவரோட பெற்றோர் வர்றதால... எங்கயாவது.. வெளியில கூட்டிட்டு போகலாமானு யோசிச்சிகிட்டு இருக்கேன்.. பார்க்கலாம்!
சிஜா தோட்டா..
life is not wat u think! It is more than that!!!

உங்கள் குட்டி செல்லங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அன்புடன்
கோதை

ஹாய் வித்யா என்னப்பா பங்ஷனெல்லாம் ஓகேவா?பிள்ளை பிறந்த நாளெல்லாம் நல்ல படியாக கொண்டாடினீங்களா?சகல சந்தோசத்தையும் பெற்று விளங்க என் வாழ்த்துகள்..யப்பப்பா இம்புட்டு ரெஸிபியா என்னை மறந்துடாதீங்கப்பா கொடுத்து விடுங்க அதில் என் ரெஸிபியும் போட்டு இருக்கீங்க ரொம்ப தேங்ஸ்மா..உங்களுக்காகவே நெய் சோறு ரெஸிபி அனுப்புறேன் இன்னொருநாள் செய்து பாருங்க சிக்கன் கிரேவி,நெய் சோறு,கத்திரிக்காய் மாங்காய் ம் ம் சூப்பர் காம்பினேஷன்..நெய் சோறு படம் எடுத்து ஒரு 4 மாசம் இருக்கு அனுப்பதான் இல்லை குறிப்பு எழுத சோம்பல் இப்ப போட்டுடறேன்..உங்க,விஜி செல்லத்தின் பெர்த்டே கிப்ட்டாக

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

எனது பேரன் ஆமிர் பிறந்த நாள் இம்மாதம் இறுதியில் வருகிறது.31.7.08
ஸ்னேகித கண்மனிகள் அனைவரின் வாழ்த்துக்களையும்,பிரார்த்தனைகளையும் எதிர் பார்க்கும் உங்களன்பு ஸ்னேகிதி ஸாதிகா

arusuvai is a wonderful website

உங்க பையனுக்குமா பிறந்தநாள் கம்பை எடுத்துடாதீங்க அதில் உங்க பெயரை சேர்கலன்னு இப்பதான் பார்த்தேன் வாழ்த்துகள்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்