குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்துகள் பகுதி

இதில் நம் அருசுவை தோழிகளின் எல்லாருடையா குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்த்து பகுதியாக இது மலருகிறது. இதில் எல்லா குழந்தைகளின் பிறந்தநாளை தெரியபடுத்தினால் நாம் எல்லாரும் வாழத்த வசதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். வாங்க வாங்க வந்து கலந்துகுங்க.அதே மாதிரி நிற்ய்ய பார்டி மெனு&டிப்ஸ் எல்லாம் சொல்லுங்க வசதியா இருக்கும்.நன்றி.

நான் இப்பதான் உங்க கூட பேசுறேன். நல்லா இருக்கீங்களா? உங்க பேரனுக்கு என்னுடைய வாழ்த்து தான் முதல் வாழ்த்து ரொம்ப சந்தோஷம். அமீர் அவனுடைய வாழ்வில் எல்லா நலன்களையும், செல்வங்களையும், சந்தோஷங்களையும் அடைய நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
very advance birthday wishes ameer

ஹையோ..ஹரி காயத்ரி ரொம்ப தேங்க்ஸ்பா.
நீங்கள் எப்படி இருக்கீங்க?
வாழ்த்துக்களை பறிமாறிக்கொள்ளும் போது உள்ள சந்தோஷம் இருக்கிறதே அது தனி மகிழ்ச்சி தான்.
என்
ஆமிருக்கு உங்கள் வாழ்த்து முதலில் கிட்டி வுள்ளது.
இந்த ஹரி காயத்ரி ஆண்ட்டி பற்றி ஆமிர் இன்னும் கொஞ்சம்
வளர்ந்த்தும் சொல்றேன். ஒக்கேவா?
மீண்டும் என்னுடைய தேங்க்ஸ் காயத்ரி.
மர்ழிமா,
அவசரமாக வெளியில் போகிறேன்.உங்களுக்கு வந்து
பதில் போடுகிறேன்.சரியா..வரட்டா?
---ஸாதிகா

arusuvai is a wonderful website

பாட்டியா நீங்க. எவ்வளவு பெரிய பதவி. ஏன் தெரியுமா? பேரன், பேத்தியோட விளையாட்டு, விஷமம், மழலை எல்லாத்தையும் நல்லா ரசிக்கலாம். நம்ம பிள்ளைகளை ரசிக்க நமக்கு நேரம் இருந்திருக்காது. இல்லையா?
உங்கள் பேரன் நல்ல முறையில் வளர்ந்து சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஆம் ஜெயந்தி மாமி,பாட்டியாகி வருடம் ஒன்றாகிற்து.முதல் குழந்தை பெண் என்றால் சீக்கிரம் பாட்டியாகிவிட வேண்டியதுதான்.நாம் பெற்ற பிள்ளைகளை விட நம் பிள்ளைகள் பெற்ற பேரப்பிள்ளைகள் மீது இன்னும் சற்று வாஞ்சைஅதிகம்தான்.இதை அனுபவிக்கும் நாள் உங்களுக்கு அதிகமில்லை என்று நினைக்கிறேன்.
பெரியவளுக்கும் பையன்களுக்கும் அதிக வித்தியாசம்.பையன்கள் இருவருமே ஆமிருக்குதான் முதலிடம் கொடுக்கின்றீர்கள் என செல்லமாக குறைபட்டுக் கொள்வார்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சாதிகா உங்கள் பிள்ளைகளிடம் உங்களுக்கெல்லாம் மாமா என்ற பட்டத்தைக் கொடுத்தவனே அவன் தான். எனக்கும் பாட்டி பட்டம் கொடுத்திருக்கான். அதனால் அவனுக்குதான் முதலிடம் என்று சொல்லி விடுங்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஹலோ ப்ரெண்ட்ஸ்
என்னோட பையன் முதல் பிறந்த நாள் ஜுலை20.அறுசுவை தோழிகள் என்னோட பையனுக்கு வாழ்த்து சொல்லுங்க.

Think Positive Your THINIKING Will make the THINGS Positive

இன்று ரஸியாவின் மூன்றாவது மகள் ரிஸ்வானாவிற்கு பிறந்த நாள். அறுசுவை தோழிகள் எல்லோரும் வாழ்த்து சொல்ல வாருங்கள்

ரஸியா உங்கள் மகள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று, நோய் நொடின்றி வாழ வாழ்த்துக்கள்.

ஜானகி

இப்போதான் உங்களிடம்chat பன்னும் போது சொன்னேன் உடன் அருசுவையில் சொல்லிட்டீங்களே ரொம்ப நன்றி ஜானகி

ரிஸ்வானா என்ற அழகிய குட்டிக்கு என் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.நீண்ட ஆயுளுடன்,எல்லா வளங்களுடன் வாழ வாழ்த்துக்கள்.ரஸியா,இன்று குழந்தையின் பிறந்தநாள்,என்ன ஸ்பெஷல் என்று வந்து சொல்லுங்க,சரியா?

அன்புள்ள ரஸியா உங்கள் செல்ல மகளின் பிறந்த நாளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். வாழ்வில் சகல சந்தோஷங்களையும் பெற்று நோய் நொடிகளில்லாமல் நீண்ட நாள் வாழ அல்லாஹ்விடம் துஆ கேட்கிறேன்.என்னுடைய அன்பு முத்தத்தை ரிஸ்வானா குட்டிக்கு கொடுத்துடுங்க ரஸியா.

அன்புடன் கதீஜா.

மேலும் சில பதிவுகள்