குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்துகள் பகுதி

இதில் நம் அருசுவை தோழிகளின் எல்லாருடையா குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்த்து பகுதியாக இது மலருகிறது. இதில் எல்லா குழந்தைகளின் பிறந்தநாளை தெரியபடுத்தினால் நாம் எல்லாரும் வாழத்த வசதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். வாங்க வாங்க வந்து கலந்துகுங்க.அதே மாதிரி நிற்ய்ய பார்டி மெனு&டிப்ஸ் எல்லாம் சொல்லுங்க வசதியா இருக்கும்.நன்றி.

என்னுடைய பையன் பிறந்த தினம் 15.01.2007. பேரு சாம்

தாய் குழந்தையின் பிறந்த
பெயர் பெயர் தினம்

விஜி -(1) அக்ஷ்யா - 8/10/2000 (2) திவ்யா - 30/6/2006
ஆஸ்மின் - (1) மகன் - 10/4/2003, (2) மகள் - 4/5/2005
மர்ழி - (1) மரியம் - 5/10/2005
அருண்கவி - (1) தர்ஷிணி - 28/3/2005
ஜமுனா - (1) ஜனார்த் - 4/7/
கதீஜா - (1) இன்சாப் - 23/8
சிஜா - (1) மகன் - 10/7
ஸாதிகா - (பேரன்)ஆமிர் - 31/7
பிரபா1978 - (1) கோகுல் - 20/12 , (2) சஞ்ஜெய் - 20/7
ரஸியா -(1)சஜினா - 3/4/1998 , (2) நஸீம் - 23/12/2000, (3) ரிஸ்வானா - 8/7
மஹா - (1) யுவன்ராஜ் - 12/2/2007
ரஜினி - (1) அனிருத் (2) அக்ஷிதா
ஜலீலாஅக்கா - (1) , (2) மகன் - 14/7/1998
கோதை - (1) , (2) மகன் - 13/6
மாலதிஅக்கா - (1) மகள் - 10/5 , (2) மகன் - 10/1
சரண்யா - (1) சஞ்சிதா - 10/6/2005, (2) சந்தியா - 7/2/2007
ஜெயந்திமாமி - (1) ஸ்ரீநாத் - 27/3/1984, (2) சந்தியா - 24/5/1990
அஞ்சலி - (1) சிவராஜ் -
ஷாரதா - (1) அமிர்தவர்ஷினி
மணிசரா - (1) மகள் - 29/12/2007
கவி. எஸ் - (1) மகன் - 15/01/2007

ஹாய் தோழியரே உங்கள் குழந்தைகளின் பெயரை சேர்க்கவேண்டுமா? நீங்கள் உங்கள் குழந்தைகளின் பெயர் மற்றும் தேதி ,மாதம், வருடம் எல்லாதகவலையும் இதில் தாருங்கள் மற்றும் மேலே உள்ள சில குழந்தைகளின் பெயர் மற்றும் வருடம் இல்லை அதையும் தந்தால் நன்றாக இருக்கும்.எல்லாம் குழந்தைகளை வாழ்த்துவதற்க்கே.

ஸாதிகா அக்கா
உங்கள் பேரன் ஆமிர் வாழ்வில் நல்ல படியா முன்னேறி சீறும் சிறப்பும் பெற்று வாழ வாழ்த்தும் மஹா, பிரகதீஸ் மற்றும் யுவன்
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

அல்லாவின் அருளால் எல்லா நலன்களும் பெற்று, சிறந்த குடிமகனாக ஆமீர் வளர்ந்து வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.
ஸாதிகா, உங்கள் பேரன் எப்படி எல்லாம் வாழ வேண்டும், வளர வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அப்படியே ஆக வாழ்த்துகிறேன். இறைவனையும் வேண்டுகிறேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

யாரும் என்னை கோபித்திட வேண்டாம், எனக்கு இப்படித்தான் ஏதாவது ஏடாகூடமான எண்ணங்கள் மனதில் வந்து என்னைப் பயமுறுத்தும்,,,, சொல்லாமல் இருக்கவும் மனம் இல்லை.

என் மனதில் உதித்த எண்ணம் என்னவென்றால், இப்படி ஒரு பப்ளிக் தளத்தில் எமது குழந்தையை , எம்மை, அனைத்து நாடுகளிலிருந்தும் எல்லோரும் வாழ்த்துகிறபோது அதிலுள்ள சந்தோஷமே ஒரு தனி சந்தோசம் தான். ஆனால் இத் தலைப்பும், திருமணமாலை என விஜி இன்னொரு தலைப்பும் ஆரம்பித்துள்ளார், இவற்றைப் பார்த்ததிலிருந்து சொல்ல நினைத்து விட்டுவிட்டேன். என் மனதிலுள்ளதை சொல்ல வெளிக்கிட்டு அதை யாராவது தப்பாக புரிந்து என்னைத் திட்டினாலும் என்ற பயத்தில்.

என்னவென்றால், ஏற்கனவே பெயர்ப்பதிவு செய்கிறபோது நாம் எம் பிறந்ததினத்தைப் போடுகிறோம். அதைப்பார்த்து வாழ்த்துகிறோம். அதைவிட எதேச்சையாக யாராவது குழந்தையின் பி.தினம்/கல்யாணநாள் என அறிந்தும் வாழ்த்தினோம். ஆனால் இப்படி பட்டியலிட்டு எல்லாம் சேகரித்து வாழ்த்துகிறபோது, வருடம் முளுவதும் வாழ்த்துப் பகுதியாக இருக்கப்போகிறது அத்துடன் வருடாவருடம் தொடரவும் போகிறது. சந்தோசம் தான் ஆனால் இதனால் அறுசுவைக்கு எம்மால் ஏதும் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாதே என்றுதான் எனது பயம். அதனால்தான் நான் நினைக்கிறேன் ஒரு தடவை எங்கள் அட்மின் அவர்களைத் தொடர்பு கொண்டு,விஜி, விஜியுடன் சேர்ந்து பொறுப்பாக இங்கே இருக்கும் மஹா.../ யாராவது கேளுங்களேன், அவர் இதனால் அறுசுவைக்கு ஏதும் தடங்கலோ பிரச்சனையோ இல்லை என்று சொன்னால் எந்தப் பயமுமில்லாமல் நாம் சந்தோசமாக இதைத் தொடரலாமே. ஒரு வேளை அவர் கூட நிறுத்த நினைத்து , வாழ்த்துகிறபோது நான் எப்படி தடுப்பது என மனதில் நினைக்கலாம் இல்லையா? அதனால் யாராவது ஒரு வேண்டுகோளை முன் வைத்தால் நல்லது என நான் நினைக்கிறேன்.

ஏனெனில் நான் கூட புதியவரவுதான், இதற்கு முன்னர் வாழ்த்துவதால் பிரச்சனைகள் ஏற்பட்டதாக சிலர் கூறி கேள்விப்பட்டேன். அதனால்தான் எனக்கு இப்படி ஒரு எண்ணம் தோன்றியது. என்னை யாரும் தவறாகப் புரிந்திட வேண்டாம். நீங்களும் இதுபற்றி உங்களுக்கு என்ன தோன்றுகிறதெனச் சொல்லுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

என் பென் அக்ஷயாவுக்கு அக்டோபர் 8 ம் தியதி பிறந்ததினம் நாங்க பார்டி வைத்துள்ளோம் எல்லாரும் இதை அழைப்பாக நினைத்து வந்து வாழ்த்துங்க வர முடியல்லை என்றாலும் உங்கள் வாழ்த்துகள் எங்க குடும்பத்துக்கு நல்ல சந்தோஷம் தரும், எல்ல பெரியவங்களும் & எனதருமை தோழிகள் ல்லாரும் எனக்கு ஒரு சிம்பிள் & ஈஸியாக உள்ள குழந்தைகளுக்காக பார்டி மெனு குடுங்கப்பா.
நன்றி அட்மின் அருசுவை, அருசுவை தோழிகள்.

ஹாய் விஜி உங்க பெண் அஷ்சயாவுக்கு என் அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.அன்று ஆயுதபூஜை குழந்தை மேலும் நன்றாக படிக்க சரஸ்வதியை வேண்டுகிறேன்.மறுநாள் விஜயதசமி அன்று நீங்கள் உங்க பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுங்க,மேலும் நன்றாக படிப்பாங்க,கோயிலுக்கும் பிள்ளைகளை கூட்டிக்கிட்டு போயிட்டு வாங்க,எல்லா வெற்றியிம் கிடைக்கும்.

நான் நிங்க சொல்வதை போல தான் எங்க விட்டில் செய்வது வழக்கம். அவ நல்ல பியானோ வாசிப்பா நல்ல பாடுவா அன்றக்கு எங்க வீட்டில் ஆயுத பூஜைக்கு அதை வைத்து கும்பிடுவோம். இந்த விஜயதசமியன்று என் 2 வது குட்டி பென் திவ்யா 2 வயது அவளை எழுத வைக்கிறோம். அது ரொம்ப ரொம்ப சுட்டி. நிச்சயம் உங்க ஆசிர்வாததிற்க்கு நன்றி நான் என் பென்னிடம் அவசியம் உங்க விஷை கூறுகிறேன்.

மேலும் சில பதிவுகள்