உடல் சோர்வு,

உடல் சோர்வு,

ஹலோ பிரண்ட்ஸ், என் பெயர் தனலக்ஷ்மி, எனக்கு 27 வயது ஆகிறது, என் பிரச்சனை என்னவென்றால் "உடல் சோர்வுதான்"
எனது அன்றாட வேலை - தினமும் காலை 5 மணிக்கு எழுவேன், காலை எனது சமயலை முடித்து என் மகனை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு, என் கணவரை ஆபிஸ்க்கு அனுப்பிவிட்டு, நானும் ஆபிஸ்க்கு கிளம்பிவிடுவேன். (நான் graphic designer ஆக வேலை பார்க்கிறேன்) பின் மாலை 6 மணிக்கு வருவேன், பின் மாலை என் மகனுக்கு பாடம் எடுப்பேன். பின் கிச்சனில் இருக்கும் வேலைகலை முடித்து என் கணவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு தூங்க செல்லுவேன்.(இரவு 11 ம்ணி) இதுதான் எனது ரகுலர் வேலை , இது தமிழ் நாட்டில் எல்லோரும் செய்வதுதானே,
ஆனால் எனக்கு உடல் மிகவும் சோர்வாக உள்ளது. என்னேறமும் தூக்கம் வருகிறது, என்ன செய்வதென்றே புரியவில்லை, என்னக்கு யாராவது வழி சொல்லுங்கள் பிளிஸ்.

தனலஸ்மி,
நீங்கள் இவ்வளவு வேலை செய்கிறீர்கள் சோர்வு வராமல் என்ன செய்யும், நாங்கள் வேலைக்குப் போகாமலே சோர்வாக இருக்கிறது. எதற்கும் ஒரு தடவை டாக்டரிடம் சென்று blood test செய்து பாருங்கள், ஏனெனில் தைரோயிட் ஆரம்பித்தால் உடல் சோர்வு, களைப்பு , உடம்பு பருமனாதல் இவை ஏற்படும். அப்படி எதுவும் இல்லையெனில் கொஞ்சம் நடந்து பார்க்கலாம். ஏனெனில் உடற்பயிற்சி இல்லாமலும் சோர்வு ஏற்படலாம். வீட்டுவேலைகள் ஆபீஸ் வேலை இவற்றால் உடலுக்கு போதிய உடற்பயிற்சி கிடைப்பதில்லை. மனதை சந்தோசமாக வைத்திருங்கள், மனதில் குழப்பங்கள்,கவலைகள் ஏற்பட்டாலும் உடல் சோர்வடையும். எனக்குத் தெரிந்தவை இவைதான், மேலும் சகோதரிகள் நல்ல குறிப்புகள் தருவார்கள். பொறுத்திருங்கள். எங்கே போயிறீங்க எல்லோரும் கொஞ்சம் வந்து உங்களுக்குத் தெரிந்த ஐடியாக்களை தனலஸ்மிக்கு கொடுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

கண்டிப்பா தனலக்ஷ்மி சோர்வு வராமல் இருக்காது..இவ்வளவு வேலையையும் கவனிக்க வேண்டாமா..போதா குறைக்கு க்ராஃபிக் டிசைனர் வேற..மண்டை என்னேரம் சிந்தனையிலேயே இருக்கும்.வேலை ஆஃபிசீலும் அதிகமா இருக்கும்.
அதிரா சொன்னது போல டெஸ்ட் பன்னுங்க..இன்னுமொன்று சத்தான உணவாக சாப்பிட்டால் சோர்வை ஓரளவு கட்டுப்படுத்தலாம்..ஃப்ரெஷ் ஜூஸ்,காய்கறிகள்,வேக வைத்த முட்டை,வாழைப்பழம் .நிறைய தண்ணீர் இப்படி சாப்பிட்டால் சோர்வு வருவது குறையும்..இது அனுபவம்

நானும் வேலைக்கு செல்கிறேன். அலுப்பாக தான் இருக்கிறது. அதுவும் அந்த சென்னை டிராபிக்கில் வேலைக்கு என்று இல்லை சும்மா வெளியில் சென்றாளே அலுப்பு தான். ஆறு மாதம் ஒரு முறை குடும்பத்துடன் வெளியூர் எங்கும் கோவில் / கோடைவாசத்தலம் / அம்மா / மாமியார் வீட்டிற்கு சென்று சிறிது ரெஸ்ட் ஒன்று அல்ல இரண்டு நாட்களுக்கு எடுத்து வாருங்கள். கொஞ்ச நாளைக்கு புத்துணர்ச்சியா இருக்கும்.

பகலெல்லாம் பிஸியாக வேலை செய்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்ததும் கால் நோவு கால் பாதத்துக்குள் வலி மூட்டுவலி எல்லாம் வருமல்லவா அதைக்குறைக்க ஏதாவது கை வைத்தியங்கள் இருக்கின்றன்வா? எடை கூடினாலும் இப்படி செய்யுமா? இதெல்லாம் என் கணவருக்கு ஏற்படுகிறது தயவு செய்து தெரிந்தவர்கள் சொல்லவும்?

என்னை பொறுத்தவரை உங்களுக்கு போதுமான அளவு தூக்கம் இன்மையே உங்கள் சோர்வுக்கு காரணம்.நீங்கள் தூங்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். அதாவது குறைந்தது 7-8 மணி நேரம் தூக்கம் அவசியம். அதன் பின்னும் சோர்வாக இருந்தால் அதிரா சொல்வது போல blood test செய்வதே நலம்.

Vany

always smile

மேலும் சில பதிவுகள்