தயிர் வடை

தேதி: July 2, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உளுந்து - ஒரு ஆழாக்கு
துவரம்பருப்பு - அரை ஆழாக்கு
இஞ்சி - ஒரு துண்டு
பச்சைமிளகாய் - 5
மல்லித்தழை - ஒரு சின்ன கட்டு
தயிர் - 600 கிராம்
உப்பு - தேவையான அளவு
கடுகு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - கால் தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 300 மி.லி


 

உளுந்தையும், துவரம்பருப்பையும் 2 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து விட்டு பச்சைமிளகாய், உப்பு போட்டு மையாக அரைக்கவும்.
பொடியாக நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி போட்டு பிசறி கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி வடைகளை தட்டி வேகவிடவும். தயிரை கடைந்து உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
ஒரு கடாயில் வெந்தயம், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் போட்டு வறுத்து கொரகொரப்பாக பொடி செய்து தயிரில் போடவும்.
ஒரு தேக்கரண்டி எண்ணெயில் கடுகை தாளித்து தயிரில் போட்டு வடைகளை போட்டு ஊறவைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்