தேதி: April 1, 2006
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பச்சரிசி - ஒரு கப்
தண்ணீர் - இரண்டரை கப்
எலுமிச்சம்பழம் - 2
பச்சை மிளகாய் - 6
கடுகு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
நிலக்கடலை - ஒரு கைப்பிடி
பெருங்காயம் - அரைத் தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிது
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
சாதத்தை குழைய விடாமல் பொல பொலவென்று வேக வைத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
எலுமிச்சம்பழத்தினை நறுக்கியவுடன் நீரில் போட்டு லேசாக கழுவி, பின் அதன் சாறு எடுக்கவும். எலுமிச்சை சாற்றில் உப்பினை கலந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு போட்டுத் தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் நிலக்கடலையை போட்டு சற்று வதக்கி, வறுபட்டவுடன் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பைப் போடவேண்டும்.
பிறகு நறுக்கிய பச்சைமிளகாய்களைப் போட்டு, பிறகு பெருங்காயத்தையும் மஞ்சள்தூளையும் போட்டு கிளறி எடுத்து ஆறவைத்துள்ள சாதத்தில் கொட்டவும்.
இப்போது, உப்பு போட்ட எலுமிச்சை சாற்றினை சாதத்தில் ஊற்றி, சாதம் முழுவதும் சாறும், மஞ்சள் வண்ணமும் பரவும்படி நன்கு கிளறி கொள்ளவும்.
இறுதியில் சிறிது கொத்தமல்லித் தழையை தூவி விடவும்.
Comments
Superb reciepe
Nice.thanks to Mrs.Rajalakshmi.Very nice.I made like this.What a taste?wow.
Thanks a lot.
எலுமிச்சம்பழ சாதம்
நன்றாக இருந்தது, தயாரிப்பதும் சுலபமாக இருக்கு
மிகவும் நன்றி
மிக நன்று :)
உங்கள் எலும்மிச்சை சாதம் மிகவும் நன்றாக இருந்தது.இந்த குறிப்புக்கு நன்றி.
--Anuradha
Be the best of what you are and the Best will come to you :)