சின்ன சின்ன ஆசை

ஸ்னேகித சகோதரிகளே,
மன்றத்தில் உரையாடுவதன் மூலம் ஒவ்வொருக்கொருவர் நேரில் பார்க்காமலேயே ஸ்னேகிதிகளின் உணர்வுகளை பறிமாறிக்கொள்கிறோம்.அறுசுவை எனும் அற்புதமான இணையதளம் மூலம் நம் ஒருவருகொருவர்,நல்ல தோழிகளாக,ஆலோசகர்களாக.ஆபத்பாந்தவர்களாக,இணக்கமாகவும்,சந்தோஷமாகவும் உரையாடிக் கொண்டுள்ளோம்.இது பொது தளமென்பதால் விரும்பினால் கூட மின்னஞ்சல்முகவரிய,தொலைபேசி எண்ணோ தர முடியாத சூழ் நிலை நம் அனைவருக்கும் உண்டு.நான் ஆரம்பித்த இந்த தலைப்பு மூலம் நமது மனதில் உள்ள சின்ன சின்ன ஆசை களை இத் தலைப்பு மூலம் பறிமாறலாமே?
ஸாதிகா

என்ன ஸ்னேகிதிகளே,
சின்னசின்ன ஆசை தலைப்பு போட்டு ஒரு நாளாகிறது.ஒரு பதிவையும் காணவில்லையே?
இப்போ லைனில் இருக்கும் கதீஜா,பிரபா,ஹரிகாயத்ரி,தளிகா,சுந்தர்,கே.ஆர்,தேவா யாராவது ஸ்டார்ட் பண்ணுங்களேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சொல்றேன். ஆனா அது சின்னதா, பெரியதான்னு யார் சொல்றது.
1. ரிடையர் ஆனதும் ஒரு க்ரீச் வெச்சு குஞ்சு, குளுவானை எல்லாம் பார்த்துக்கணும்.
2.நிறைய ட்ராவல் பண்ணணும்.
3. சென்னையில் அறுசுவை தோழிகளுடன் ஒரு கெட் டு கெதர் பார்ட்டியில் கலந்துக்கணும்.
4. எனக்குத்தான் கூட்டுக் குடும்பத்தில் வசிக்க கொடுத்து வைக்கலை. என் பையனாவது அவனது திருமணத்திற்குப் பின்னும் எங்களுடன் ஒன்றாக வசிக்கணும்.
5. இந்த நல்ல உலகத்தில் வாழ சந்தர்ப்பம் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இறக்க வேண்டும்.

இன்னும் வரும்

அன்புடன்
ஜெயந்தி மாமி

சாதிகாஅக்கா உங்க பெயர் ரொம்ப பிடிச்சிருக்கு.உங்க எழுத்து நடை அருமை.
அடடா இந்த தலைப்பை இப்போ தான் பார்க்கிறேன்,சின்ன சின்ன ஆசைனு சொல்ல ஆரம்பிச்சா ஆஹா........அது பெரிய லிஸ்ட் ஆயிருமே...ஹீ..ஹீ......சரி,இப்போ நியாபகம் இருக்கும் சிலது மட்டும் சொல்ரேன்.
1.ஊருக்கு அம்மா,அப்பாவுக்கு தெரிவிக்காமல் சர்ப்ரைஸ் விஸிட் குடுக்கனும்.அவர்களுக்கு அது ஒரு இன்ப அதிர்ச்சி.
2.ஃப்ஜிர் தொழுகைக்கு பிறகு ஒரு தூக்கம் வருமே,இப்போ என் குட்டி தஹஜதுக்கே எந்திருச்சிடரா.
3.பள்ளி ஆசிரியைகளை பார்க்க ஆசை,ஒவ்வொரு முறையும் முயன்று நேரமில்லமையால் முடியாமல் போகிரது.
4.எல்லா பழைய தோழிகளையும்.கணவருடனும்,குழந்தைகளுடனும் பார்க்க ஆசை.
5.என் செல்ல குட்டி மகளின் வருங்கால வாழ்க்கைத்துணையை இப்போவே பார்க்க ஆசை.
அக்கா,லிஸ்ட் நீண்டுட்டே போகுது,சரி எல்லோரும் எழுதட்டும்,பிறகு தொடருகிரேன்.

சாதிகா லாத்தா,என் சின்ன சின்ன ஆசை சொல்கிறேன்.
1.இன்சாஅல்லாஹ் நிறைய ஹ்ஜ்,உம்ரா செல்லனும்.
2. என் பெற்றோர் மனம் சந்தோசம் அடையும் முறையில் நடக்கனும்.
3.என்றென்றும் என் கணவர் மனவிருப்பம் போல் செயல்படனும்.
4.எனக்கும் என்னவர்க்கும் இயற்கை அழகை ரசிப்பது ரொம்ப பிடிக்கும்.கொடைக்கானல் மலையும்,விதவிதமான வண்ண மலர்களையும் பார்துக்கொன்டே இருக்கனும்.ஹங்காங் பீக் பார்க் இல் போகி உடன் குளிர்ந்த காற்று சுவாசிக்க,சிறு மழைதுளியில் நனைய பிடிக்கும்.

5.சீக்கிரம் எனக்கு குழந்தை பிறக்கனும்.
6.என் சகோதர,சகோதரிகள் எல்லோரும் சேர்ந்து டூர் செல்லனும்.

ASIA MS
PEACE BE ON EARTH

hhijk

நன்றி ஜெயந்தி மாமி&கே ஆர்.ஆசைகளை படிக்கபடிக்க சுவாரஸ்யமாக உள்ளது.உங்கள் ஆசைகள் எல்லாம் நிறைவேற என் வாழ்த்துக்கள்.
என் பிள்ளைகள் பற்றி,என் குடும்பத்தைப் பற்றி ,புனித மக்கா நகருக்கு செல்வதைப் பற்றி,இந்த அளவுக்கு வாழ்க்கையில் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் இறைவனுக்கு என்னேரமும் நன்றியுடன் இருக்க வேண்டும்,இப்படி சராசரி ஆசைகள் நிறைய உண்டு.இது தவிர சின்ன சின்ன ஆசை லிஸ்ட் என்னிடம் நீளமாகவுள்ளது.சிலவற்றை பகிர்ந்துகொள்கிறேன்.ஜே மாமி படித்து விட்டு சிரித்தீர்களா?இல்லையா?என்பதை அவசியம்
தெரிவியுங்கள்.
ஆசை நம்பர் 1 . மழையில் நனைந்து செல்ல வேண்டும்.நனைந்த ஈரத்தால் பற்கள் டான்ஸ் ஆட அம்மாவிடம் வாங்க கட்டிக் கொள்ள வேண்டும்.
ஆசை நம்பர் 2 .ஒரு தீம் பார்க் விடாமல் எல்லாவற்றுக்கும் போய் ஒரு ரைட்கூட விடாமல் ஆடிஆடி மகிழ வேண்டும்.
ஆசை நம்பர் 3 .மீண்டும் சிறுமியாகி பாவாடை சட்டையுடன்,என்சிறுவயது தோழிகளுடன் செக்கடிக்குள் சுற்றி கமர்கட் சீனி மிட்டாய்,எலந்தைவடை சாப்பிடவேண்டும்.
ஆசை நம்பர் 4 அட்றா,அட்றா,அட்றா.அட்றா, அட்றா நாட்டுமொக்கா,நாட்டுமொக்கா,நாட்டுமொக்கா என்று உச்சஸ்தாயியில் கத்திப் பாட வேண்டும்
ஆசை நம்பர் 5 .போலீஸ்காரர் கத்த கத்த மவுன்ட் ரோட் சிக்னலில் நிற்காமல் பைக்கில் பறக்க வேண்டும்.
ஆசை நம்பர் 6. தீபாவளி வெடிக்கு பயந்துகொண்டு தீபாவளி முடியும் வரை வெளியில் தலை காட்டாத நான் ஆட்டோ பாம் வெடி வெடிக்க வேண்டும்.
ஆசை நம்பர் 7 .ஒரு நாள் முழுக்க போனை கையால் கூட தொடாமல் இருக்கவேண்டும்.(இது குறித்து என் கணவரிடம் பந்தயம் கட்டி ஒரு தடவை கூட ஜெயித்தது இல்லை,)
ஆசை நம்பர் 8 சின்ன வயதில் என் மகனுக்கு சோஸியல் சைன்ஸ் பாடம் சொல்லித்தரும் போது அதில் ஆப்ரிகாவில் உள்ள ZAIR நாட்டினை பற்றிய பாடத்தை சொல்லித்தந்த போது அந்த நாட்டுடைய அழகு,இயற்கை வளம்,பசுமை குளிர் இவற்றை எல்லாம் படிக்கபடிக்க அங்கு செல்லும் ஆசை ...இன்னும் அடங்கவில்லை 8 வயது என் பையன் நான் பெரிய ஆள் ஆனதும் உங்களை ZAIR அழைத்து போவேன் என்று மழலையில் கூறுவான். குளிரை அனுபவிக்க
வேண்டும்
ஆசை நம்பர் 9 கையேந்தி பவனில் சூடாக இட்லி சாப்பிட வேண்டும்.
ஆசை நம்பர் 10.அப்துல் கலாமை அவரது ராமேஸ்வரம் இல்லத்தில் அவர்கள் உறவினர் களுடன் சேர்த்து பார்க்க வேண்டும்.
கத்தாரில் இருக்கும் என் தம்பி இதை பார்த்துட்டு என்ன கலாய் கலாய்க்கப்போறானோ?ஹ்ம்ம்ம்ம்ம்...இறைவனுக்குத்தான் வெளிச்சம்.

arusuvai is a wonderful website

தங்கை ஆசியா, உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேற என் வாழ்த்துக்கள்.குறிப்பாக குழந்தை கிட்ட வேண்டும் என்ற ஆசை நிறை வேற உங்களுக்காக இப்போ அஸர் தொழுதுட்டு துஆ செய் கிறேன் .சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுங்கள்.சொல்வீர்கள்

arusuvai is a wonderful website

எனக்கு ஒரே சிரிப்பு உங்க பதிவை படித்ததும் எனக்கு இப்படிதான் ஏடா கூடாமா ஆசைலாம் வரும் நான் என்னவரை பேசிய நாள் முதல் ஒரு டைரி போட்டு வைத்து இருந்தேன் அவருக்காகவே!அதில் கவிதைகளுடன் இப்படி சின்ன சின்ன ஆசைன்னும் ஒரு தலைப்பு இருக்கும் அந்த நியாபம் வந்துட்டு அதில் பல நிறைவேறிட்டு இன்னும் சில இருக்கு..

டியர் ஆஸியா நான் ஒவ்வொரு முறையும் உங்களுக்காக இன்னும் எனக்கு தெரிங்ச மற்றவர்களுக்காகவும் துஆ கேட்டு இருக்கேன் கண்டிப்பாக நல்ல நிYஊஸ் கூடிய சீக்கிரம் சொல்லுவீங்க டோண்ட் வொரிமா..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

சின்ன சின்ன ஆசை நிறைய இருக்கு
1.ஸ்விம்மிங் கத்துக்கனும்
2.ஹஸ்பென்ட் கைய பிடிச்சிக்கிட்டு ஜாலியா சுத்தனும்
3.யோகா கத்துக்கனும்
4.வேலைக்குப்போகனும்.........
சொல்லிக்கிட்டெ போகலாம்.ரொம்ப பெரிய ஆசை என்னோட ரெண்டு பசங்களையும் நல்லா படிக்க வைக்கனும்.அருசுவை ப்ரண்ட்ஸ் கூட சேட் பண்ணனும்.is anybody there to chat with me.

Think Positive Your THINIKING Will make the THINGS Positive

Think Positive Your THINIKING Will make the THINGS Positive

ஆஹ்..மர்ழி வந்துவிட்டீர்களா?சிரிக்க மட்டும் செய்கின்றீர்கள்.சின்ன சின்ன ஆசைகளை பதிவு பண்ண மாட்டீர்களா?என்ன லாத்தா வீட்டில் விருந்து தடபுடல் படுகிறதா?என் ஜாய் மகளே என் ஜாய்.
ஸாதிகா லாத்தா

arusuvai is a wonderful website

பூஜா

பயப்படாதீங்க ச்சும்மாங்காட்டி வெளாட்டுக்கு சொன்னேன்.

நீங்க சிங்கப்பூர் சீமாட்டி யா?

எனக்கு சிங்கப்பூரில் நிறைய ப்ரண்ட்ஸ் இருக்காங்க. அப்புறம் நிறைய பதிவை / அரட்டையை ஒபென் பண்ணி படிங்க.

ஐயோ ஐயோ ஸாதிகா லாத்தா

எல்லா எல்லா ஆசையும் ஒகே. அதென்ன அட்றா அட்றா நாக்கு முக்கா பாட்டு மேல அவ்வளவு க்ரேஸ்.

என்னால சிரிப்பை அடக்க முடியலை. உங்களுக்குள் இவ்வளவு பெரிய சிங்கம் தூங்கிக்கொண்டிருக்கிறதா.

மேலும் சில பதிவுகள்