தேதி: July 7, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பிரான்ஸில் வசித்து வரும் <b> திருமதி. ரஸியா </b> இஸ்லாமிய உணவுகள், சைனீஸ், பிரெஞ்சு உணவுகள் என்று அனைத்திலும் அசத்தக் கூடியவர். ஏராளமான வித்தியாசமான குறிப்புகளைக் கொடுத்துள்ளார். இங்கே ஃபோ போ என்ற ஒரு வித்தியாசமான செய்முறையை படங்களுடன் விளக்குகின்றார் நீங்களும் செய்து பார்த்து கருத்தினை தெரிவிக்கவும். இதன் பெயர் சற்றே வித்தியாசமானது ஃபோ போ (போ என்றால் மாடு) இதே செய்முறையில் கோழியை வைத்தும் செய்யலாம் அதன் பெயர் ஃபோ கா (கா என்றால் கோழி)
சூப் செய்வதற்கு:
எலும்பில்லாத மாட்டு இறைச்சி - ஒரு கிலோ
பெரிய வெங்காயம் - ஒன்று
பட்டை - 2
அன்னாசிப்பூ - 6
இஞ்சி - 3 அங்குலத்துன்டு
கேரட் - 2
ஃபிஷ் சாஸ் - தேவையான அளவு
அஜினோமோட்டோ - அரை தேக்கரண்டி
சீனி - ஒரு தேக்கரண்டி
வெங்காயத்தாள் - 4 கொத்து
தண்ணீர் - 2 1/2 லிட்டர்
சூப் உடன் பரிமாறுவதற்கு:
அரிசி நூடுல்ஸ் - ஒரு பாக்கெட்
எலுமிச்சை - ஒன்று
நொகாய் இலை(nhogai) - 6 கொத்து
துளசி இலை - ஒரு கொத்து
வெங்காயத்தாள் - 6 கொத்து
தாய் மிளகாய் - 2
சில்லி சாஸ் - ஒரு தேக்கரண்டி
ஹோய் சின் சாஸ் (hoi sin sause) - ஒரு தேக்கரண்டி
முளைவிட்ட பயிர்(soya) - 100 கிராம்








இந்த இலைகள் கிடைக்கவில்லையென்றால் வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாகவும், கொத்தமல்லி கீரையை பொடியாகவும் நறுக்கி நூடுல்ஸுடன் சேர்த்து சாப்பிடலாம்.