மீன் தந்தூரி - BBQ

தேதி: July 7, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாறை மீன் பெரியதாக - 4
மிளகாய்தூள் - 2 கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு கரண்டி
அரைக்கவும்:
பச்சைமிளகாய் - 50 கிராம்
பூண்டு - 10 பல்
மிளகு - 2 தேக்கரண்டி
மல்லி, புதினா - தலா ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
வினிகர் - 4 கரண்டி


 

மீனை சுத்தம் செய்து இரண்டு பக்கமும் கீறி வைக்கவும்.
அரைக்க சொல்லியுள்ள பொருள்களை அரைக்கவும்.
மீனில் அரைத்த மசாலா தூள்கள், வினிகர் சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு மணிநேரம் ஊற வைக்கவும்.
பின் க்ரில் தட்டில் சிறிது எண்ணெய் தடவி பிரட்டிய மீனை வைக்கவும்.
அவனை 280° சூடாகி அதில் மீனை வைக்கவும்.
பத்து நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பி போடவும். மீன் தண்ணீர் விடும் எல்லா தண்ணீரும் வற்றி இரண்டு பக்கமும் சிவக்கும் வரை வைத்திருந்து எடுத்து சூடாக பரிமாறவும்.
வெங்காய சட்னி அல்லது ஆப்சலாவுடன் பரிமாறவும்.


இது ரசம் சாதத்துடம் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். bbq சட்னி இதில் உள்ளது.http://www.arusuvai.com/tamil/bbq_4

மேலும் சில குறிப்புகள்