அன்புத்தோழிகளே என் பிரச்சனைக்கு வழி சொல்லுங்கள்

அன்புத்தோழிகளே என் பிரச்சனைக்கு வழி சொல்லுங்கள்

எனக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. எனது கணவர் என்னை நன்றாகத்தான் பார்த்துக்கொள்கிறார். நல்ல குணமுடையவரும் கூட, ஆனால் அவர் மது அருந்துகிறார், தின்மும் வீட்டில் சண்டைதான், அவர் மிகவும் லீனாக வேற இருப்பார், மது அருந்துவதை அவரால் விடமுடியவில்லை என்கிறார், என்ன செய்வது, என் பிரச்சனையை வார்த்தைகளால் விளக்க முடியாது, இதை டைப் செய்யும் போது கூட என் கண்ணில் கண்ணீர் வழிந்து கொண்டுதான் இருக்கிறது. ப்லிஸ் என்ன செய்யலாம், எதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்

தனலட்சுமி, மனது ரொம்ப பாரமாகி விட்டது. உங்கள் பதிவைப் படித்ததும். மதுவால் சீரழிந்த குடும்பங்கள் எத்தனை, எத்தனை. இந்தக் குடிகாரர்களை சகித்துக் கொண்டிருக்கும் மனைவிகள் பரிதாபத்திற்குரியவர்கள். அவர்கள் குழந்தைகள் அதை விடப் பரிதாபம்.

தனம் உங்களுக்கு குழந்தை இருக்கிறதா? இருந்தால் அதைப் பார்த்தாவது திருந்த மாட்டாரா?
முதலில் உங்கள் கணவருக்கு திருந்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? இருந்தால் கண்டிப்பாக அவரை மாற்றலாம்.
ஹோமியோபதியில் இதற்கு மருந்து, (அதாவது குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்ற) இருப்பதாக கேள்விப் பட்டிருக்கிறேன்.
இதற்கென்று இருக்கும் மருத்துவமனைகளில் சேர்த்தும் சிகிச்சை அளிக்கலாம்.
எல்லாவற்றையும் விட நீங்கள் வணங்கும் கடவுளிடம் நம்பிக்கை வைத்து பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் துன்பம் தீர நாங்களும் பிரார்த்திக்கிறோம்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

அன்புள்ள ஜெயந்தி மாமிக்கு, நன்றி
அவருக்கு திருந்தவேண்டும் என்ற என்னம் நிறைய இருக்கிறது, ஆனால் எப்படி என்றுதான் தெரியவில்லை. நானும் டிரிட்மண்டை பற்றி விசாரித்தேன், ஆனால் மனதுக்கு திருப்தி இல்லாமல் இருக்கிற்து, பயமாகவும் இருக்கிறது , எங்களுக்கு என்கலுக்கு ஒரு மகன், LKG படிகிறான், அவன் மீது அவர் மிகவும் பாசமாக இருப்பார்

அன்பே கடவுள்

அன்பிற்குரிய தன்ஸ்
பெங்களூருவில் குடிப்பவர்களை மனமாற்றம் செய்ய ஒரு ஹாஸ்பிட்டல் இருக்கிறது. என் அம்மா வீட்டு பக்கத்தில் ஒருவர் இப்படி குடிக்கு அடிமையாகி வீட்டில் தினமும் ப்ரச்சனையாக இருந்தது. அவர்கள் அவரை 3 மாதம் (அவரவரின் உடல் மற்றும் மன நிலைக்கேற்ப) அங்கே வைத்து ட்ரீட்மென்ட் செய்தார்கள். அவ்ர் அதற்கப்புற்ம் குடிப்பதை நிறுத்தி விட்டதாய் கேள்விப்பட்டேன்.
இங்கேயும் திருவான்மியுரில் அப்படி ஒரு ஹாஸ்பிட்டல் இருப்பதாய் கேள்விப்பட்டேன்.
நீங்கள் விரும்பினால் விசாரித்து சொல்கிறேன்

கவலைபடாதீர்கள். எல்லா ப்ரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு. உங்களின் இந்த ப்ரச்சனை என் அக்காவுக்கும் உண்டு.என் மாமா இப்படிதான் இருந்தார். விளைவு இப்பொது லிவர் ப்ராப்ளம். ஒரு பின்ச் உப்பு சேர்த்தால், ஒரு சொட்டு ஆல்கஹால் உடலில் கலந்தால் அவர் உயிருக்கே ஆபத்து என்ற நிலைக்கு வந்துவிட்டார். இதையெல்லாம் உங்கள் கணவருக்கு அவர் நல்ல நிலையில் உள்ள போது கொஞசம் எடுத்து சொல்லுங்கள். கடவுளின் மேது நம்பிக்கை வையுங்கள்.

God is Great
உங்களது பிரச்சனையும் ஒர நிலை தான்.என் கனவர் என் குலந்தை இரந்ததால் குடிக்க ஆரம்பித்தார்.பின் அதிகமாக ஆனது.இப்பொலுது பெசி ஒரு வழியாக மருத்துவமனை அல்லது மருந்து சாப்பிட சம்மதிக்க வைத்துல்லென்.உங்க்ல் கச்டம் எனக்கு நன்ராக புரிகிரது.

எனக்கு தெரிந்த ஹாஸ்பிடல் முகவரி.
DR.r.prapakarajagadeeswaran
42,station road,
villivaakam
chennai-49

உங்கள் கனவர் வர மருத்தால் இந்த என்னுக்கு தொடர்பு கொல்லுஙள்.this cell number is on siththa clinic number.if you contact this number.you will get some ideas for your problem.எப்படி மருந்து அருந்த தருவது, உங்கல் சந்தேகங்கள் எல்லவர்ருக்கும் விடை கிடைக்கும்.முயர்சி செய்து பாருங்கள்.னான் இப்பொழுது தான் மருந்து ஆர்டர் பன்னி உள்ளேன்(this siththa clinic).கடவுள் தான் நமக்கு உதவ வேன்டும் என்று முயர்சி செய்யுங்கள்
எனக்கு தெரிந்த சித்த ஹாஸ்பிடல்

God is Great

நன்றி
ஆனால் செல் நம்பர் இல்லையே
அன்பே கடவுள்

அன்பே கடவுள்

ஜே ஹோமியோவில் அதற்கான மருந்து இருக்கிறது என்று நீங்கள் எங்கு தெரிந்து கொண்டீர்கள்..ஏனென்றால் சமீபத்தில் அதைப் பற்றி படித்தேன்..எங்கு படித்தேன் என்ன படித்தேன் என்று எவ்வளவு யோசித்தும் நியாபகம் வராமல் மண்டை உடைகிறது.
என்னவோ ஒரு குறிப்பிட்ட மருந்து அதற்கு உபயோகிக்கிறார்கள் என்று ப்டித்தது போல் நியாபகம்..இல்லை நான் கணவு தான் கண்டேனா என்றும் தெரியல

ஹோமியோவில் ஏதாவது மருந்து இருந்தால் சொல்லுங்கள்
அன்பே கடவுள்

அன்பே கடவுள்

அன்புத் தோழிக்கு- தன்ஸ்
உங்கள் பதிவைப் பார்க்கவே என் மனம் மிகவும் வேதனை அடைகிறது. முதலில் இந்த மதுக் கடைகளை ஒழிக்க வேண்டும்.

நீங்கள் தைரியசாலியாகவும் மனத் திடத்துடனும் செயற்படுங்கள். உங்கள் நம்பிக்கைதான் குடும்பத்துக்கு முக்கியம். மது அருந்துபவர்களுக்கு நிறையவே வைத்தியங்கள் வெளிநாட்டில் இருக்கிறது. அதேபோல் அங்கேயும் நிட்சயம் இருக்கும். அங்கு எப்படியாவது அவரைக் கூட்டிப் போய்க் காட்டுங்கள். அதுதான் சிறந்த வழி.

அடுத்ததாக, வேலைக்கு போவதைவிட, அவர் எங்கு போவதாக இருந்தாலும் கூடவே போங்கள்.(முடிந்தவரை) அல்லது சண்டையிட்டாவது தனியே போக அனுமதிக்கவேண்டாம். காசு / பாங்க் காட் எதுவும் வைத்திருக்க விட வேண்டாம். அவரது நல்ல நண்பர்களிடம் கதைத்து அவரை கூடவே இருந்து கவனிக்கச் சொல்லிக் கேட்கலாம்.

இதைக்கவனத்தில் கொள்ளுங்கள். அல்ககோல் எடுப்பவர்கள், தாமாக நிறுத்தினால்(தாமாக நிறுத்தமுடியாது), அதனால் அவர்களுக்கு நிறைய பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு... அதாவது மூளை, லிவர், கிட்னி, இதயம் இவற்றைப் பாதிக்கும். எனவே முதலில் டாக்டரிடம் காட்டுங்கள் அதற்கென மருந்துகள் உள்ளது, அந்த மருந்தை தொடர்ந்து எடுத்துக்கொண்டுதான் குடிப்பதை நிறுத்த வேண்டும். கொஞ்சம் இடையிடையே குடிப்பவராக இருந்தால் பறவாயில்லை, நிறுத்திக்கொள்ளலாம்... ஆனால் தொடர்ந்து அதிகம் குடிப்பவராயின், டாக்டரிடம் போய்த்தான் நிறுத்துங்கள்.

மனதை தைரியமாக வைத்திருங்கள். ஆண்டவனை வேண்டுங்கள். நீங்கள் வயதில் குறைந்தவராகத்தான் இருப்பீங்கள் என நினைக்கிறேன். குடித்துவிட்டு வரும்போது சண்டைபோடவேண்டாம், அவருக்கு எதுவும் புரியாது... இதனால் குழந்தையின் மனநிலையும் பாதிப்படையும் எனவே... டாக்டரை போய்ப் பாருங்கள். நிட்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்