காலிஃப்ளவர் பஜ்ஜி

தேதி: July 8, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

காலி ஃப்ளவர் - ஒன்று
கடலை மாவு - 100 கிராம்
பச்சரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 200 மி.லி
உப்பு - தேவையான அளவு


 

காலி ஃப்ளவரை சிறிது காம்போடு எடுத்து வெந்நீரில் உப்பு போட்டு கழுவவும்.
பிறகு சிறிது தண்ணீர் விட்டு வேக விட்டு தண்ணீரை வடிக்கவும்.
உப்பு, மிளகாய்ப்பொடி, மஞ்சள் தூள், பெருங்காயம், கடலைமாவு, அரிசி மாவு ஆகியவற்றை தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பக்குவத்திற்கு கரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கரைத்த மாவில் காலி ஃப்ளவரை முக்கி எண்ணெயில் பொரிக்கவும்.


ஈவினிங் டிபனுக்கு நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்