தேதி: July 9, 2008
பரிமாறும் அளவு: 7 நபர்கள்
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
ப்ரெட் - 4 - 6 ஸ்லைஸ்
நெய் - 1/4 கப்
பால் - 1/2 லிட்டர்
ஃப்ரெஷ் க்ரீம் - 1/2 பாக்கெட்
முந்திரி - 50 கிராம்
பாதாம் - 25 கிராம்
பிஸ்தா - 25 கிராம்
திராட்சை - 50 கிராம்
பேரீச்சம் பழம் - 10
சர்க்கரை - 1 கப்
ப்ரெட் ஸ்லைஸை நான்கு சிறிய சதுரங்களாக வெட்டி கோல்டன் கலரில் பொரிக்கவும்
பாலை சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சவும்.
பருப்பு வகைகள், உலர் பழங்களை மெலிதாக நறுக்கவும்.
சதுரமான ஏர்டைட் கண்டெய்னரில் பொரித்த ப்ரெட்டை வரிசையாக அடுக்கி அதன் மேல் க்ரீமை ஸ்பூனால் ஸ்ப்ரட் பண்ணவும்.
அதன் மேல் பருப்பு வகைகள், உலர் பழங்களைத் தூவி இன்னொரு லேயர் ப்ரெட்டை வரிசையாக அடுக்கவும்.
மேற் சொன்ன முறையில் லேயர் லேயராக எல்லாவற்றையும் அடுக்கி காய்ச்சிய பாலை ஊற்றி, டப்பாவை மூடி ஃபிரிட்ஜில் வைக்கவும்.
நன்கு குளிர்ந்ததும் அகலமான ஸ்பூனால் எடுத்து பவுல்களில் பரிமாறவும். கொஞ்சம் ரிச் ஆன ஸ்வீட் ஆக இருந்தாலும் விருந்தோம்பலுக்கு ஏற்ற அசத்தலான, அடிக்கடி செய்யத் தூண்டும் ஸ்வீட் இது.
விரும்பினால் பாலில் குங்குமப்பூ கலந்து சேர்க்கலாம். 6 ஸ்லைஸ் ப்ரெட் ஆனாலும் கணிசமான அளவில் வரும் என்பதால் கண்டிப்பாக 6 ,7, நபர்கள் சாப்பிடலாம்
Comments
Asalamu alaikkum
Your recipe procedure seems excellent,But I have a doubt?Do we need to add the boiled half litre milk over the cream filled bread?How the final product will be?Is it semisolid or looks liquidy...?I am trying this for the first time that's what i asked you..don't mistake
InshAllah i will try this...Keep posting recipes sister
salaam....
ஃப்ரெஷ் க்ரீம்
ஹலோ ஸாதிகா,
ஃப்ரெஷ் க்ரீம் என்றால் என்ன.இந்தியன் ஸ்டோர்ல்ல இருக்குமா?கொஞ்சம் சொல்லுங்களேன்.
நன்றி,
கவிதா.
kavitha
ஃப்ரெஷ் க்ரீம்
ஹாய் கவிதா
பிரெஷ் கிரீம் என்பது பாலின் மெல் படியும் ஆடைதான் . எல்லா கடைகளிலும் கிடைக்கும்.
ஃபிரஷ் க்ரீம்
அருண் கவி ஃபிரஷ் க்ரீம் என்பது மாலினி சொல்வது போல் எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்.ஆவின் நிறுவனத்தினரும் தரமான க்ரீம் தயாரிக்கிறார்கள்.குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உபயோகிக்க வேண்டும்.
ஸாதிகா
arusuvai is a wonderful website
ஸாதிகா ஆன்டி
நேற்று இப்தாருக்கு இந்த டெசெர்ட் செய்தென். ரொம்ப நன்றாக இருந்தது. கெஸ்ட்ஸ்க்கு நல்ல பிடித்திருந்தது.
Nasreen
Nasreen
ஸாதிகா ஆன்டி
நேற்று இப்தாருக்கு இந்த டெசெர்ட் செய்தென். ரொம்ப நன்றாக இருந்தது. கெஸ்ட்ஸ்க்கு நல்ல பிடித்திருந்தது.
Nasreen
Nasreen
நஸ்ரின் சுல்தானா-பிரட்க்ரீம்டெஸர்
நஸ்ரின் சுல்தானா,உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.உங்கள் விருந்தினர்களுக்கு இந்த ரெஸிப்பி பிடித்து இருந்தமைக்கு மிகவும் சந்தோஷம்.
ஸாதிகா
arusuvai is a wonderful website
சூப்பர் ரெசிபி அக்கா
சதாலட்சுமி
ஸாதிகா அக்கா உங்க பிரட் க்ரீம் டெஸர்ட் மிகவும் அருமையாக இருந்தது. என் குழந்தைகளும் விருப்பமாக சாப்பிட்டார்கள். என் கனவருடைய நன்பர்கலும் ஸ்வீட் நல்லாயிருக்கு என்று என்னை பாராட்டினார்கள்.
சதாலட்சுமி
hi machi!
getting super compliments from all. keep it up!
இதோ பாருபா..
காலையிலேயே சிரிப்பு தலைப்பில் மச்சின்னு வந்ததும் நம்ம ஊர் ஜாயலா இருக்கேன்னு வந்தேன் பார்தா பக்கத்து ஊர் என்ன சாதிகா லாத்தா உங்க மச்சியா அவங்க?
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
வாங்கோ முபீதா!
சலாம் வெலகம் டு அருசுவை..உங்க மச்சி(எங்க சாதிகாலாத்தா) லூட்டி தாங்கலப்பா நீங்க எப்படி அப்படிதானா?இல்லை என்னை(நல்லா நோட் பண்ணிகங்க)போல சமத்தா?
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
தங்கச்சி மர்ழியா
வாம்மா..மின்னல் மர்ழியா.முபீதா என் மாமா மகள்தான்.ரொம்ப சின்ன பொண்ணு.என்னை மாதிரி லூட்டி கிடையாது.அமைதிக்கு பெயர்தான் முபீதா..நம்ம வாயை காட்டினால் மிரண்டு போய் விடுவார்.அது சரி..என்னை கலாய்ப்பதில் தான் குறியாக இருக்கின்றீர்கள்.ரெஸிப்பிக்கு ஒரு பாராட்டு கிடையாதா?(உங்கள் லூட்டியை பார்க்காமல் எனக்கு ஜீரணம் ஆகாது என்பது வேறு விஷயம்)இப்படியே போனால் மவுண்ட் ரோடுக்கு பிரம்போடு தான் வரவேண்டும். :))
ஸாதிகா
arusuvai is a wonderful website
சுஹைனா
பிரம்பை என் கையில் கொடுத்ததே நீங்க தாம்மா..இதே ரீதியில் போனால் என்னை மற்ற ஸ்னேகிதிகள் இரண்டு கொம்பு இரண்டு பக்கம் நீண்ட பற்கள்,கோலிமுட்டை கண்கள் என்று இமேஜின் பண்ணுவார்கள்.ஐயோ..என் இமேஜை டேமேஜ் பண்ணுகின்றீர்களேப்பா..:)
ஸாதிகா
arusuvai is a wonderful website
சாதிகா லாத்தா! மின்னல்!
நீங்கள் மின்னல் என சொல்லும்போதெல்லாம் பசுமையான காலம் நினைவுக்கு வருகிறது..
லாத்தா சின்ன திருத்தம் நம்ம வாயை கிடையாது உங்க வாயை தீர்ப்பை மாற்றுங்க(இதுக்கும் பிரம்பை எடுத்துடாதீங்கோ)
ரொம்ப சாரி லாத்தா குறிப்பை கவனிக்கல மச்சின்னதும் ஓடி வந்துட்டேன் யாருன்னு பார்க்க பதில் போட்டுட்டு போயிட்டேன் இப்பதான் பார்த்தேன் இந்த குறிப்பை ஆனா எல்லாமே என்னிடம் இருந்து சுட்டது அப்படியிருக்க பாராட்டினால் நானே எனக்கு மகுடம் சூட்டியது போல் ஆகிடுமே :-D
பிடித்த எல்லா குறிப்பையும் நோட் செய்கிறேன்..டெலிவரிக்கப்புறம் செய்து பார்க்க உங்க குறிப்பும் நிறைய இருக்கு இது உட்பட செய்துட்டு சொல்கிறென் இப்ப சிரிங்க பார்கலாம்!
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
என்னது?
என்னது..?
ஸாதிகா
arusuvai is a wonderful website
டெஸ்ஸெர்ட்
எளிதான அருமையான டெஸ்ஸெர்ட் - நான் பிரட் டோஸ்ட் செய்து போட்டு விட்டேன்... மேலே கொஞ்சமாக பழ துண்டுகளையும் சேர்த்தேன் - சூப்பர் !!
இப்படிக்கு,
சந்தனா
இப்படிக்கு,
சந்தனா
நல்ல ஐடியா
அட இதில் பழத்துண்டங்கள் சேர்த்தீர்களா?நல்ல ஐடியா சந்தனா.அடுத்த முறை நானும் இப்படி டிரை பண்ணுகின்றேன்.உங்களுக்கு டபுள் தேங்க்ஸ்.
ஸாதிகா
arusuvai is a wonderful website
அன்பு மச்சி முபீதா
ஹா...முபீதா..அருசுவைக்கு வந்து விட்டாயாமா?ரொம்ப சந்தோஷம்.உனது பின்னூட்டத்திற்கும் நன்றி.அடிக்கடி வந்து பதிவு போடுமா..ஓகே..மற்றவை சாட்டில்..
ஸாதிகா
arusuvai is a wonderful website
சதா லட்சுமி-பிரட் க்ரீம் டெஸர்ட்
சதா லட்சுமி,உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.உங்கள் அனைவருக்கும் பிடித்து இருந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி.
arusuvai is a wonderful website