ஹைய்யா... ஜாலி...... வாங்க... அரட்டை அடிக்கலாம் பாகம் ஏழு

ஹாய் அறுசுவை தோழியரே

எல்லாரும் எப்படியிருக்கிறீங்க......................நான் நேற்றுதான் ஊருக்கு வந்தேன்.இனி மேல் எல்லாருடனும் பேசலாம்,சிரிக்கலாம், சந்தோஷமாக இருக்கலாம்.......... வாங்க எல்லாரும் பதிவுகளை இங்கே போடுங்கள்.

மர்ழி, மர்ழி, அஞ்சலி, இலா, மர்ழி, மர்ழி யை தொடர்ந்து பாகம் ஏழு பிரியத்துடன் மஹா
வாங்க வாங்க பதிவுகளை போடுங்க.

மஹா!!
ஊருக்கு போனா அட்டென்டென்ஸ் போடனும் தெரியுமா??? அஃபிஷியலி நான் ஜுலை கடைசிவரை leavu தெரியுமா??

ஜே மாமி!!! உங்க அடுப்படி திருப்பதி ஆத்துக்காரர் பெருமாள் ரொம்ப நல்லா இருக்கு.
என் கணவர் நானே இதை சொன்னேன் என்று நினத்து ரொம்ப சிரித்தார்!!

பாஸ் ஆபிஸில் இல்லாத பீலிங் எனக்கும் ரொம்ப ஜாலி!!! ஆனா என் லானா இப்பொ லீவில் போகமாட்டா

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மஹா,
பீலிங்ஸ்சுடன் இருக்கிற எங்களுக்கு இன்னும் பீலிங்சை அதிகமாக்கிறீங்களே..... நாங்களெல்லாம் உங்க கண்ணுக்கு தூசியாகவா தெரிகிறோம். அதுசரி உங்களில் குற்றமில்லை.... ஊருக்குப் போய்வந்தால் எல்லோரும் இப்படித்தான் பாதி மறந்திடுவார்கள்....

அதுதான் கூப்பிட்ட குரலுக்கு எங்கட இலக்குமி ஓடி வந்து என்னென்னவோ எழுதுறா.... எனக்கெதுவும் புரியவேயில்லை..... என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் யாவும் மறையட்டுமே.... தன்னாலே வெளிவரும் தயங்காதே...... எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உங்களை இன்னைக்கு காலையில் ஆன்லைனில் பார்த்தேன்... ஹெலோ சொல்வதற்க்குள் ஓடிவிட்டீங்க... மர்லி காணோம்... ஜலீலா அக்காவும் பார்த்தேன்... எல்லாம் அப்ப அப்ப வந்து தலைகட்டி போறாங்க.

தளிகா .. உங்க ஸ்பெஷல் பக்கோடா ஈஸியா இருக்கு.... இன்னைக்கு செய்யனும் முடிஞ்சா.

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அதென்ன அடுப்படி திருப்பதி ஆத்துக்காரர்..ஜெ வின் எழுத்து எதையும் மிஸ் பன்னிடக் கூடாது எல்லாமே சிரிக்க சிந்திக்கன்னு ஒரு கருத்து இருக்கும்.
இலா பக்கோடா அதிராவுக்கு சாஃப்டா வரலையாம்..உங்களுக்கு சாஃப்டா வேனும்னா இட்லி மாவை விட சற்றி கெட்டி போல் கரைச்சு செய்யுங்க.இல்ல மொருமொருன்னு வேனும்னா தண்ணி குறைவு போதும்.உருக்கின நெய் 1 ஸ்பூன் சேர்த்து மாவு பிசைந்தாலும் நல்ல இருக்கும்..மொத்தத்தில் ஒரு 2 கிலோ ஏற வழி சொல்லித் தறேன்..ஆமா நானும் ஆன்லைனில் வந்து எட்டி பாத்துட்டு போயிடறேன்.மகள் தூங்காமல் ஆட்டம் போடுவதால் தூக்கிட்டு வந்துட்டேன்..அவ அப்பாவாவது தூங்கட்டும்.பிறகு ஆன்லைன் வறேன்

ஜெயந்தி மாமியின் எழுத்து எப்பவுமே ஒரே நகைச்சுவையாகவும் கருத்துடனும் இருக்கும் ... படிக்கவே ஆசையாக இருக்கும்... இங்க பலரும் அப்படி எழுதுவதனால் தமிழில் வாசிக்கவே தினமும் வருகிறேன்... அப்புறம் சாரதாவின் கதை !! மர்லியிம் குறும்பு !!! ரூபியின் ஆலோசனைகள்.. ஜலீலா அக்காவின் டிப்ஸ் ( வி மிஸ் யூ அக்கா!! எங்களுக்கும் சேர்த்து எஞாய் பண்ணுங்க) அதிராவின் தமிழ்( இதுக்கே ஒரு த்ரெட் போடலாம்) , அஞ்சலியின் அன்பான அட்டகாசங்கள்.. அப்புறம் பட்ட பேர் ராணி ரஜினி! ட்விஸ்ட் விஜி ( சிம்பிள் ரெஸிபி ஆனால் நூதன முறையில் பண்ணுவது) இந்த பாகம் 7 தொடங்கி வைத்து கும்மியை ஆரம்பித்த மஹா!!

விட்டு போனா கோச்சுகிற ஸிஸ்டர்ஸ் !! மறந்துடாமல் சீனியர்ஸ் மறந்துட்டோம்ன்னு கவலை கொண்ட சுபா ( கை ஒக்கேவா இப்போ???)

இவங்க எல்லாம் மத்த த்ரெட்ல நான் ஏதும் பதில் போடலைன்னாலும் ஒரு நாள் வந்தாலும் என்னை கொஞ்சம் கலாய்க்கிற தோழிகள்!!!

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப அப்பா இதுக்கே ஒரு சோடா வேணுமே.... எல்லாம் வாங்க நான் பதிவு போடேனூகிறதுக்காக ஒரு 10 நாள் வரை இழுக்காமல் மர்லி மாதிரி நினச்சு இந்த த்ரெடை ஓட்டுங்க!!

( அது எப்படி மர்லி ஆரம்பிச்சா மட்டும் 2 நாளில் 100 ரெஸ்பான்ஸ் ... காதுல புகை --{ " " }-- )

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

தளிகா - எங்களுக்கு (இந்துக்களுக்கு) திருப்பதி வெங்கடாசலபதி ரொம்ப முக்கியம். அதிலும் எனக்கு இரண்டு வீட்டிலும் (பிறந்த வீடு, புகுந்த வீடு) குல தெய்வம் திருப்பதி வெங்கடாசலபதி. ஆனால் ப்ராக்டிகல் வாழ்க்கையிலே எதுக்கு முக்கியத்துவம் தரேன். அதைதான் அப்படி 'அடுப்படியே திருப்பதி, ஆத்துக்காரரே பெருமாள்' அப்படீன்னு சொல்லுவாங்க.
சில பேர் சொல்லுவாங்க இல்ல ' நான் எங்க போறேன், வரேன். வீடு விட்டா ஆபீஸ், ஆபீஸ் விட்டா வீடு'ன்னு. அது மாதிரிதான் இதுவும்.

இலா - கை வசம் நிறைய இருக்கு. அப்பப்ப எடுத்து விடறேன். நேற்று கூட இரவு ஒரு பழமொழி சொன்னேன். என் பெண் சிரித்து விட்டு எல்லாத்துக்கும் பழமொழி வெச்சிருக்காய் அம்மா என்றாள்.

எனக்கு ஆபீஸ், ட்ரெய்ன், என் குடும்பத்தில் எல்லா இடத்திலும் என் பேச்சுக்கு நிறைய ரசிகர்கள். பேச்சுதான் என் சொத்து.
வரேன் அப்பப்ப.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஆமாம் மாமி,எனக்கும் உங்க பேச்சு ரொம்ப பிடிக்கும்.எனக்கு உங்களை பார்க்கனுமே மாமி.
பாருங்க மாமி,அருசுவையிலும் உங்களுக்கு எத்தனை விசிரிகள்.அறிவுள்ள அழகான பேச்சை யார் தான் விரும்பமாட்டார்கள்?

யாரோ அருசுவைக்கு புதுசா மஹா ந்னு ஒருத்தர் வ்ந்து அரட்டையடிக்க வேற கூப்பிடுறாங்க்கப்பா

யாருப்பா அது? இலா கொஞ்சம் தெரிஞ்சா சொல்லுங்க.

மாமி இன்னிக்கு என்ன பழமொழி சொல்லப் போறீங்க

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் எப்படியாவது இந்த த்ரெட் ஐ100 இல்ல அதுல ஒரு பர்சென்ட் ஆவது ரெஸ்பான்ஸ் பண்ணிடுங்க. இல்லனா சாமி கண்ண குத்திடும். (ஓகேவா இலா)

மாடத்திலே கன்னி மாடத்திலே....

எதுக்கெல்லாம் ஆசைப்படுறாங்கப்பா... 100 தண்டவேணும் என்று ...மாமி இதுக்கென்றாலும் ஒரு பழமொழி/பொன்மொழி/அச்லீஸ்ட் ஒரு வசனமாவது எடுத்துவிடுங்க... என்னால் பொறுத்துக்கொண்டிருக்கவே முடியவில்லை... இலா மேலுள்ள பாட்டு உங்களுக்காகத்தான்... அதைவைத்து ஒரு கதையே என்னிடம் இருக்கு பிறகு சொல்கிறேன்...

சாரதா.... மஹாவைத்தெரியாதா? சைனா மஹாப்பிரகதீஷ் இப்ப தெரியுதா? இப்படிச் சொன்னால்தான் எனகும் புரியும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஓஹ் ஜெ நேத்து தூங்க படுத்த எனக்கு சிரிப்பே அடக்க முடீல படுத்து சிரிச்ச சிரிப்புல கட்டில் அதிருது.நல்லா இருக்கு அடுப்படியே திருப்பதி ஆத்துக்காறரே பெருமாள்.
அப்பப்ப வந்து எடுத்து விடுங்க..மஹா உங்களுக்கு முன்ன அனுப்பின 2 பதிவும் அழிஞ்சு போச்சு...என்னடா இந்த பொண்ணு ஒரு ரெச்பான்சும் இல்லையேன்னு நெனச்சுடக் கூடாதுல்ல.
நானும் ஊருகு போவேன் சென்னைக்கு வந்தாலும் வருவேன்.வந்தால் சென்னையை ஒரு கலக்கு கலக்கிட்டு தான் வரனும்னு நெனச்சிருக்கேன்..அதிரா என்னமோ உங்களோட சூப்பரான புகைப்படம் அனுப்பி எல்லோரையும் கலக்கிட்டீங்களாமே

மேலும் சில பதிவுகள்