Apple mobbile phone 3G ,கியூ பற்றிச் சொல்லுங்களேன் -அதிரா

Apple mobbile phone 3G ,கியூ பற்றிச் சொல்லுங்களேன்.

இன்று உலகமெல்லாம் இந்த அப்பிள் மொபைல் போன் விற்பனைக்கு வருகிறது. என்னுடைய கணவரும் ஒரு போன் பிரியர். இப்போ எத்தனையோ நாட்களாக வீட்டில் இதே கதைதான் அடிபட்டது. அமெரிக்காவில் உள்ள அப்பிள் கொம்பியூட்டர் கொம்பனி முதல் தடவையாக மொபைல் போன் தயாரித்து இன்று வெளியிடுகிறார்கள் விற்பனைக்கு. குறிப்பிட்ட அளவுதான் தயாரிக்கப்பட்டதால், ஓன் லைனிலோ அல்லது ஆடர் கொடுத்தோ வாங்க முடியாது, நேரடியாக கடை வாசலில் கியூ பண்ணித்தான் வாங்க முடியும் . இதனால் சில இடங்களில் 2/3 நாட்களுக்கு முன்னதாகவே மக்கள் கியூ பண்ணி நிற்கிறார்களாம். எனது கணவரும் விடிய 5 மணிக்கெழும்பி போய்விட்டார் கியூவில் நிற்க. போனுடன் தான் வருவாரோ அல்லது என்னவென்று தெரியவில்லை.

விடிய நெற்றில் இருந்ததாம் பார்த்துக்கொண்டிருந்தார், ஜப்பானில் ஒருவர் அதிகாலை எழுந்து கியூவிற்குப் போனாராம் அங்கே 1500 பேர்வரை நின்றார்களாம் திரும்பி வந்திட்டாராம். இப்படி முசுப்பாத்திகள் உங்கள் வீடுகளிலும் நடந்ததா? அனுபவங்களைப் பகிந்து கொள்ளுங்கள். வேளைக்கு எழும்பியதால் நித்திரை போய் விட்டது. அதுதான் அறுசுவைக்கு வந்தேன்.

இன்று உலகமெல்லாம் இந்த அப்பிள் மொபைல் போன் விற்பனைக்கு வருகிறது....Apple mobbile phone 3G ,கியூ பற்றிச் சொல்லுங்களேன்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா இந்த ஆப்பிள் போன் 2 வருஷத்திற்கு முன்பே அமெரிக்காவில் வந்து விட்டது இந்த மொபைல் போனில் எல்லா வசதியும் இருக்கு இன்டெர்நெட், போட்டோ, கேம்கார்டர், ,
ரேடியோ,iPOD எல்லாம் இருக்கு நடந்து கொண்டே ஆன்லைன் பயன்படுத்தலாம் இதுவிலும் சில குறைகள் இருக்கு. ஆனா இப்போ ஸ்பீடு அதிகமாக்கி இருக்கிறாத சொல்றான் பட்டன் சிஸ்டம் கிடையாது கையாலே தடவி தடவி மாத்தனும் எனக்கு ரெம்ப போர இருக்கு உள்ள போய் படிப்பதற்குள் போதும் போதும்ன்னு இருக்கு போட்டோஸ் நல்லா கிளியராக இருக்கு
இப்போ விலை கம்மியாக்கி இருக்கான் $200 4GB கிடைக்குது ஷேர் மார்கெட் பயன்படுத்துவதற்கு நல்ல பயன் உள்ளது SMS கும் கஷ்டமாக உள்ளது நல்ல பந்தாவ இருக்கு எனக்கு தெரிந்ததை சொல்லி இருக்கேன்

ஹாய் சுவேதா,

நீங்கள் சொல்வது தான் என் கணவரிடம் இப்போது உள்ளது.முந்தயது, இப்போ நிறைய புது மாற்றங்களுடன் கொன்ரக்ட் இல்லாமல் வாங்குவதாயின் நானூற்றுத்தொண்ணூற்ரொம்பது பவுண்டுகள். எங்குமே இதுதான் கதையாக இருக்கிறது. என் கணவர் ஒருமாதிரி வாங்கிவிட்டார். அழகாக இருக்கிறது. இன்னும் ஒன்றும் செய்யவில்லை. வைத்துவிட்டுப் போயுள்ளார். முன்பு வந்தது அது i phone , இப்போ 3 G என வந்திருக்கிறது. எனக்கென்னவோ இதிலெல்லாம் அவ்வளவு அக்கறை இல்லை. என்னிடம் உள்ளது சொனி எறிக்சன்தான், ipod டும் வைத்திருக்கிறேன், எனக்கு காலம் முழுக்க இவை இரண்டும் போதும். என் கணவர் அடுத்தவருடம் புது மொடல் வந்தால் தொடங்கி விடுவார்... அப்படி ஒரு போன் பிரியர் அவர்.

u tube இல் கூட பாட்டு வந்திருக்கிறது பழையதை கடலில் எறிந்துவிட்டு இது வாங்க ஒருவர் போவதுபோல்...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா அப்ப ஃபோன் கைக்கு வந்து விட்டதா..எனக்கும் வாங்க ஆசையாக உள்ளது.பார்க்க அழகாக இருக்கிறது ஆனால் எனக்கும் சரி கனவருக்கும் ப்ரேக்டிகலி இந்த டச் screenபிடிக்காது..ஒன்னு டேப் பன்னினால் ஒன்னு வந்து விழும்..ஆனால் கைட் டூரில் அவர் செய்வதைக் கண்டால் நமக்கு வாங்க ஆசை வந்து விடும்.இங்கு இன்னும் இந்த ஃபோன் இறங்கவில்லை என நினைக்கிறேன்
ஆனால் கம்பேரிடிவ்லி எனக்கு இது பிடித்திருக்கிறது . கைட் டூரைப் பார்த்தவுடன் அவர் பறந்தார் நானும் வாங்கப் போறேன் என்று ஆனால் பிறகு யோசித்தபொழுது தோன்றியது எதற்கு காசை கொடுத்து கடிக்கிற பட்டியை வாங்கிய கதையாக்கனும் என்று..உள்ளது நமக்கு சவுகரியமாக இருந்தால் அது தானே நல்லது என்று இப்பொழுது சும்மா இருக்கிறார்.
சரி சரி மகள் ஒரு மாதிரி பார்க்கிறாள் என்னவோ நோன்டல் வேலை அங்கு நடக்கிறது போல.பிறகு வந்து பேசிகிறேன்.வாங்கின ஃபோன் பிடித்ததா என்று சொலுங்கள்.
எல்லாம் வாங்கிவிட்டு ஐ விலை கம்மி என்று சொல்லிவிட்டு சர்வீஸ் ப்ரொவைடருடன் இனைகிறபொழுது எத்தனை காசு வாங்குவாங்களோ

தளிகா ,

கியூவில் முதலாவது ஆள் என் கணவர்தானாம். கிட்டத்தட்ட ஒவ்வொரு கடைக்கும் 10 போன் தானாம் கொடுத்தார்கள். அதனால் முதல் பத்துப்பேருக்கும் கிடைத்தது. மிகுதிப்பேர் ஏமாற்றத்தோடு போனார்களாம். phone bag இல் எழுதப்பட்டுள்ளது got it என்று. இவர் வாங்கிவர அந்த மோலில் நின்ற teen - age boys கத்தினார்களாம் got it... got it...என்று. இப்படி அது வேறு கதை.

அழகான போன், நன்றாக இருக்கிறது. முந்தையதை விட அதிக வசதிகள் சரியான ஸ்பீட். சுவேதா சொன்னதுபோல் முந்தையதில் குறைபாடுகள் அதிகம் எனச் சொல்லலாம். இது 3G சிஸ்டம் என்பதால், இந்த சிஸ்டம் உள்ள நாடுகளில் மட்டுமே பாவிக்கலாம். பொதுவாக எல்லா நாடுகளில் இருந்தாலும், சில சிட்டிகளில் மட்டுமே இந்த ஸிஸ்டம் இருக்கிறதாம். யூறோப், யூகேயில் பொதுவாக எல்லா இடங்களிலும் இந்த ஸிஸ்டம் இருப்பதால் அதிகம் பரபரப்பாக இருக்கிறது.

முக்கியமாக இன்ரநெற் பட்டுபட்டென்று வருகிறது. அறுசுவை என்னமாதிரி கிடைக்கிறது. நேற்று வெளியில் இருந்தபோது இந்த போனில் தான் உங்கள் மேலேஉள்ள பதிவைப் படித்தேன். எமக்கு பட்டனை குத்திக் குத்தியே பழக்கப்பட்டு விட்டதால் இது ஆரம்பம் கஸ்டமாகத்தான் இருக்கும். ஆனால் உண்மையில் மிகவும் சுலபம். தடவிக்கொண்டிருக்கவேண்டும் அவ்வளவுதான். நெவிகேற்றர்(GPS) இருக்கிறது. நாம் எங்கு நிற்கிறோம் என்பதைக் காட்டீக்கொண்டிருக்கும். முக்கியமாக எனது கணவர் எங்கே நிற்கிறார் என்பதை நான் இன்ரநெற்றில் செக் பண்ணினால் எந்த இடத்தில் நிற்கிறார் எனக் காட்டும்...( இனி என்னிடமிருந்து தப்ப முடியாது... ஹா ...ஹா...ஹா...)

இன்னும் நிறைய இருக்கிறது போல் தெரிகிறது. ஆனால் எமக்கு இது அதிகம்(எல்லாம் பாவிக்கமாட்டோம் தானே). வேலை செய்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும். புத்தகம் எல்லாம் போட்டு வைக்கலாம். நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஆனால் என்ன என்ன குறைகள் இருக்கிறதென்று போகப்போகத்தான் தெரியும்.

இப்போது 22 நாடுகளில் மட்டும்தான் இது வெளியாகியுள்ளதாம் இந்த வருட முடிவில் ஏனைய நாடுகளுக்கும் வரும் என காதில் கேள்விப்பட்டேன். எந்த எந்த நாடுகள் என சரியாகத் தெரியவில்லை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

தளிகா,
எங்கேயோ உங்கள் பதிவைப் படித்தேன், அதற்கான பதிலை இங்கே போடுகிறேன். நீங்கள் இந்த போன் யாராவது விற்க இருந்தால் சொல்லும்படி கேட்டிருந்தீங்கள். எனக்கு நம்பிக்கை இல்லை யாரும் விற்பார்களோ என்று.

ஒருவர் விற்றார், e bay யில் அதை bid பண்ணிப் பண்ணி இன்னொருவர் 2000 டொலர்களுக்கு வாங்கியுள்ளார். நீங்கள் book பண்ணி வையுங்கள். வருட முடிவில் கிடைக்கலாம். அதுகூட நிறையப்பேர் book பண்ணியுள்ளதனால் எல்லோருக்கும் கிடைக்குமோ தெரியாதாம்.

உண்மையில் எனக்குப் பிடித்திருக்கிறது. நாளுக்கு நாள் நிறைய apps வருகிறது. அதாவது புதுப்புது software இதற்காகவே உருவாக்கிப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நிறைய வந்துகொண்டிருக்கிறது. பைபிள், குரான் எல்லாம் இருக்கிறது.... இன்னும் வந்துகொண்டிருக்கிறது. வேறு நாடுகளுக்குப் போனால் எமக்கு அந்தப் பாஷை தெரியவில்லையாயின் ஆங்கிலத்தில் ரைப் பண்ணினால் மொழி பெயர்த்து, அந்த நாட்டுப் பாஷையில், மைக்கில் சொல்கிறது, எழுத்திலும் காட்டுகிறது.

நாங்கள் ஒரு தெரியாத இடத்தில் நின்றால், எமக்கு என்ன தேவையோ. சுப்பர்மார்கட், ஹொஸ்பிட்டல், எதுவாயினும் ரைப் பண்ணினால் அருகில் உள்ளதை சொல்லி , பாதையையும் காட்டும். நிறைய வந்துள்ளது..... இன்னும் இப்படி நிறைய உள்ளது, ஒரு கொம்பியூட்டரை விட அதிகமாக இருக்கிறது போல் தெரிகிறது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்