இனிப்புப் பொரி அரிசி

தேதி: July 11, 2008

பரிமாறும் அளவு: 6நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கல் அரிசி - 2 கப்
வேர்க்கடலை - 1 கப்
வெள்ளை எள் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1 கப்
தேங்காய் - 1
நெய் - 2 டேபிள் ஸ்பூன்


 

வாணலியை நன்கு சூடாக்கி அரிசியை சிறிது சிறிதாகப் போட்டு வறுக்கவும். இந்த 2 கப் அரிசியையும் சுமார் ஏழெட்டு தடவையாகப் போட்டு வறுக்கவும். அடுப்பு ஹையில் இருக்க வேண்டும். அப்போதுதான் அரிசி பெரியதாகவும், ஷாஃப்டாகவும் பொரியும்.
அதே வாணலியில் வேர்க்கடலையை வறுக்கவும். எள்ளை சிவக்க விடாமல் பொரியும் வரை வறுக்கவும்.
வேர்க்கடலையை தோல் நீக்கி அனைத்தையும் ஏர்டைட் கண்டெய்னரில் போட்டுட்டு ஸ்டோர் பண்ணிக் கொள்ளலாம்.
தேவைப்படும் பொழுது ஒரு கப் பொரித்த அரிசிக்கு 1/2 மூடி தேங்காய் துருவிக்கொள்ளவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தேங்காய்த் துருவல், சர்க்கரை, நெய் இவற்றை நன்கு பிசைந்து, அரிசி எள், வேர்க்கடலை என ஒவ்வொன்றாகப் போட்டு பிசைந்து பரிமாற வேண்டும்.
சாப்பிடுவதற்கு சற்று முன் இதை தயாரித்தால் தான் நமுத்துப் போகாமல் சுவையாக இருக்கும்.


எங்கள் ஊரில் புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு இடுப்பில் அரைஞாண் கயிறுகட்டுவோம். குழந்தை பிறந்த 29 வது நாள் தாய் மாமா அரைஞாண் கயிறு கட்டும் பொழுது இந்த பொரி அரிசி செய்து உறவினர், நண்பர்கள், அக்கம்பக்கம் இல்லங்களுக்கு கொடுத்து அனுப்பி மகிழ்வார்கள்.

மேலும் சில குறிப்புகள்