குழந்தை சளி......உதவுங்கள்

என்னுடைய 32 நாள் குழந்தைக்கு சளி பிடித்து மிகவும் கஷ்ட படுகிறாள்.....மிகவும் கஷ்டமாக உள்ளது.உங்களுடைய ஆலோசனைகள் கூறுங்கள்.......நானும் என் கணவரும் தான் குழந்தையை பார்த்துக் கொள்கிறோம் .எனவே தயவு செய்து குழந்தை வளர்ப்பு பற்றி உங்கள் அனைத்து ஆலோசனைகள் கூறவும்,இது என்னை போன்ற புது அம்மாக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

ஹெலோ ஜெயா
சிறு குழந்தைக்கு எதுவும் வந்தால் ரொம்ப பயமாக இருக்கும்..ஆனால் பயப்பட தேவையில்லை.கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும்.
முதலில் தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைக்கு வீட்டு வைத்தியம் செய்ய முடியாது..அதனால் தற்பொழுது நல மருத்துவரைக் கண்டு மருந்துகளை வாங்குங்கள்.
பின் கிச்சனில் ஒரு குக்கரில் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு கதை அடைத்தால் கிச்சன் முழுக்க ஆவிவரும் அங்கு குழந்தையுடன் நில்லுங்கள்..மூக்கு அடைப்பிருந்தால் பால் குடிக்க மறுக்கும் ஆவி பிடித்தால் மூக்கு திறந்துவிடும்.
அல்லது பாத்ரூமில் ஒரு பக்கெட்டில் சுடு நீரை கொதிக்க ஊற்றினால் பாத்ரூம் முழுக்க ஆவி வரும் அங்கு நிற்கலாஅம்.
நிறைய தாய்ப்பால் கொடுத்துக் கொண்டே இருங்கள்
சலின் ட்ராப்ஸ் எது வாங்க என்று மருத்துவரிடம் கேட்டு வாங்கி குழந்தையின் மூக்கில் விட்டால் மூக்கடைப்பு மாறும்..மூக்கடைப்பு மாறி நல்ல குழந்தைக்கு ஆகாரம் கொடுத்தாலே ஓரிரு வாரத்தில் மாறிவிடும்...
வீட்டில் ஜன்னலைகுப்பென அடைத்து வைக்காமல் திறந்து சுத்தமான காற்று வர விடுங்கள்

32 நாள் குழந்தைக்கு சளி என்கிறீர்கள். எப்படி வந்தது? யாரும் சளி தொந்தரவுடன் குழந்தையை தூக்கினார்களா? முடிந்த வரையில் பார்க்க வரும் உறவினர்கள் குழந்தையை தூக்காமல், அப்படியே தூக்கினாலும், நான்றாக கைய அலம்பி சுத்தமாக துடைத்து விட்டு
தாங்களும் தலை குளித்தால் நன்றாக தலை காய வைத்து பிறகு பால் கொடுங்கள். சிறிது ஈரமானாலும் உங்கள் உடையை (பால் கொடுக்கும்//குழந்தையை தூக்கும் முன்) முன் மாற்றி விடுங்கள்.

மருத்துவரிடம், மூக்கில் வைத்து சளி எடுக்கும் syringe கேளுங்கள். தளிகா சொல்வதுப் போல் செய்து syringe வைத்து சளி எடுத்து விடவும்.

சில குழந்தகளுக்கு சாம்புராணி, ஊதுபத்தி புகையில் சளி பிடிக்கும். பார்த்து வையுங்கள்.

சிலர் குழந்தை குளிப்பாட்டும் போது கண்களில், மூக்கில் எண்ணெய் விடுவார்கள், என் பெரியாம்மா அப்படி விட்டு என் குழந்தைக்கு ஒன்னரை மாதத்தில் சளி பிடித்து விட்டது. அப்படி செய்தால் அதை தவிர்த்து விடுங்கள்.

மிளகு ஓமம் உங்களது உணவில் அடிக்கடி சேருங்கள்.

எப்படி இருக்கீங்க. குழந்தைக்கு சளின்னு கேட்டதும் கஷ்டமாக இருக்கு. அது எப்படிப்பா 32 நாள் குழந்தைக்கு சளி வரும். எனக்கு தெரிந்ததை நான் சொல்கிறேன் தவறாக நினைக்க வேண்டாம். குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் கொடுத்தால் சளியே வராது. தண்ணீர் கூட நான் என் குழந்தைக்கு கொடுத்தது இல்லை 4 மாதம் வரை. என் டாக்டரும் அதுதான் சொன்னார்கள்.தாய் பாலிலே எல்லாம் இருக்கு நீங்க குழந்தைக்கு பால்கொடுக்கும் முன்னாடி நிறைய தண்ணீர் அருந்திவிட்டு பால் கொடுங்கள் தாய்பாலும் நிறைய சுரக்கும் தண்ணீர் சத்தும் குழந்தைக்கு அதிலேயே கிடைத்துவிடும். தண்ணீர் கொடுக்கலாம் என்று அறுசுவையில் யாரோ சொன்னதை பார்த்ததாக நியாபகம் சம்மர் என்பதால் நீங்கள் தண்ணீர் கொடுத்துக்கொண்டு இருந்தால் வெந்நீர் ஆறவைத்து கொடுக்கலாம். ஆனால் தண்ணீர் கொடுக்காமல் வெறும் தாய்பால் மட்டும் கொடுத்தால் குழந்தைக்கு சளி தொந்தரவு வராது. என் அனுபவத்தில் நான் சொல்கிறேன். என் பையனுக்கு 4 மாதம் இடையில் தான் தண்ணீர் கொடுத்தேன். அவனுக்கு சளி தொந்தரவு என்பது வந்ததே இல்லை. குழந்தை அழும்போது எல்லாம் இப்பதானே பால் கொடுத்தோம் என்று நினைக்காமல் பால் கொடுக்கவும். ஒரு தடவை யூரின் போனாலே அதுக்கு பசிக்க ஆரம்பித்துவிடும்.அப்புறம் நீங்க புளிப்பு,குளிர்ந்த வஸ்து எதுவும் பால் கொடுக்கும் சமயம் சாப்பிடக்கூடாது. அதுவும் குழந்தைக்கு சளிபிடித்துவிடும். வாய்வான சாப்பாடு நாம் சாப்பிட்டால் எப்படி குழந்தைக்கு வயிற்றுவலி வருமோ அதே போல் குளிர்ச்சியான சாப்பாடு நாம் சாப்பிட்டால் கண்டிப்பாக குழந்தைக்கு இருமல்,சளி வரும். அதனால் அவற்றை தவிர்த்துவிடவும். அப்புறம் கண்டிப்பாக டாக்டரிடம் போய் காமிக்கவும். இனி குழந்தைக்கு எதுவும் இதுபோல் ஆகாமல் கவனமாக இருக்கவும். உங்களுக்கு புதுசாக இருக்கும் போது எதுவும் தெரியாது. குழந்தைக்கு எது செய்தாலும் நமக்கு அழுகைதான் வரும் ஊரில் இருந்தால் எல்லாரும் இருப்பார்கள் நாம் பயப்படத்தேவையில்லை. நமக்கு இப்படிலாம் இருக்கனும். இப்படிலாம் செய்யக்கூடாதுன்னு பெரியவங்க சொல்லி தருவாங்க. தனியாக இருப்பதால் கஷ்டம் தான். கவலை படவேண்டாம் உங்களுக்கு இங்க நாங்க எல்லாரும் இருக்கிறோம். என்ன வேண்டும்னாலும் கேளுங்க எங்களுக்கு தெரிந்ததை சொல்கிறோம். வேறு எதுவும் சந்தேகம் இருந்தால் கேட்க்கவும்.

அன்புடன் கதீஜா.

i am housewife.iam interested in working. but i cant go outside for working.can any one tell me online or offline work at home job website

Jil

I can help you. There is lot of part time jobs available to earn good money .you need a pc and broadband connection is sufficient

I am working in software so can guide you better

please mail me abut you to my email id sundar_0305@hotmail.com we can take it forward

regards
sundar

varun

உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி.
நான் தாய்ப்பால் மட்டும் தான் கொடுத்து வருகிறேன்.இப்பொழுது பரவாயில்லை.சில சமயம் தும்முகின்றாள்.
எனக்கு மேலும் சில சந்தேகம்
1.குழந்தைக்கு க்ரைப்வாட்டர் கொடுக்கலாமா?
2.அவளுடைய தொப்புள் சற்றே பெரியதாக வீங்கியது போல் உள்ளது அது எப்பொழுது அமுங்கும்.அதற்கு என்ன செய்ய வேண்டும்?
3.என்னுடைய தொப்பை எப்பொழுது குறையும்
நான் 58 கிலோவில் இருந்து 74 கிலோ ஆனேன் இப்பொழுது 66 கிலோ இருக்கிறேன் மேலும் 6 கிலொ குறைய என்ன வழி
4.நானும் என் கணவரும் மட்டும் தான் உள்ளோம்.நண்பர்கள் தான் 15 நாள் வரை மிகவும் உதவி செய்தார்கள்.இப்பொழுது அவர் மட்டும் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என்றாள் மிகவும் கஷ்டமாக உள்ளது.எப்பொழுது நான் வேலைகளை செய்ய துவங்கலாம்.சிறிது நேரம் அதிகம் நின்றால் களைப்பாக இருக்கிறது!!சீக்கிரம் நான் சரியாக உணவு முறையில் எதாவது வழி இருக்கிறதா?(உடல் எடையும் குறைய வேன்டும்).நான் மட்டன் தவிற மீன்,முட்டை,சிக்கன்,இறால் ,நண்டு சாப்பிடுவேன்(அசைவத்தில்)
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

உங்கள் குழந்தைக்கு பரவாயில்லை என்றதும் சந்தோஷமாக இருக்கு. நீங்கள் தாய்ப்பால் மட்டும் கொடுத்து வருவது கேட்டு மிக்க மகிழ்ச்சி. தும்முவது சளி சரியானால் எல்லாம் சரியாகிடும். உங்கள் உணவில் கட்டுபாடு தேவை அதாவது இனி கவனமாக இருங்கள் புளிப்பு,ஜூஸ் அயிட்டம் கூலாக சாப்பிடாமல் இருங்கள்.அதன் பிறகு உங்கள் சந்தேகத்துக்கு எனக்கு தெரிந்தது சொல்கிறேன்.

1. குழந்தைக்கு கிரேப்வாட்டர் பழக்க படுத்த வேண்டாம்.அது கொடுக்க கூடாதுன்னு சொல்றாங்க இங்க மன்றத்துலயும் அது பற்றி விவாதம் நடந்திருக்கு. நான் என் குழந்தைக்கு கிரேப் வாட்டர் கொடுத்ததில்லை. குழந்தைக்கு செமியாகுணம்,வயிற்றுவலி போல இருந்தால் அதுக்கு நீங்கள் சாப்பிடும் சாப்பாடுதான் காரணம். நீங்கள் வாயுவான சாப்பாடு எதுவும் சாப்பிடும் போது ஓமம் கிடைத்தால் சிறிது எடுத்து அதன் உமியை இரண்டு கைகளாலும் தேய்து நீக்கிவிட்டு வாயில் போட்டு சிறிது தண்ணீர் குடித்துக்கோங்க. இது குழந்தைக்கு வாயு சேராமல் தடுக்கும். அப்புறம் ஓமத்துக்கு நல்ல பாலும் இருக்கும்.

ஓம வாட்டர்னு கடைகளில் கிடைக்கும் அதை வாங்கியும் தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இல்லைன்னால் ஓமம் கிடைத்தாலும் பராவாயில்லை. தினமும் இரவில் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஓமத்தை ஊறவைத்து மறு நாள் காலையில் பிரஸ் பண்ணிட்டு தண்ணீரை மட்டும் வடித்து குடியுங்க. (ஓமத்தின் உமியை நீக்கிவிட்டு)சிறிது நேரம் கழித்து மற்ற ஆகாரம் சாப்பிடுங்க.இப்படி தினமும் செய்து வரலாம் உங்களுக்கு நல்ல பாலும் சுரக்கும். குழந்தைக்கு எந்தவித செமியாகுணமோ,வயிற்று வலியோ வராது. எனக்கு இந்தியாவில் உள்ள டாக்டர் தான் ஓமம் தாய்பால் சுரக்கும்னு சொன்னார்கள்.ட்ரை செய்து பாருங்கள்.

2. குழந்தைக்கு தொப்புள் வீக்கம் சரியாகிடும். சில குழந்தைகளுக்கு தொப்புள் கொடி கட் செய்யும் போது காற்று உள்ளே போய்விடுமாம் கேள்வி பட்டு இருக்கிறேன்.எனக்கு தெரிந்த குழந்தைக்கு 3 வயது இப்படி இருந்தது இபொழுது இந்தியா போய் இருக்கும் போது பார்த்தேன் சரியாகிட்டு. அவங்க கிட்ட கேட்டேன் 2.1/2 வயதிலே தன்னால சரியாகிட்டதாக சொனார்கள். டாக்டரிடம் காமித்தோம் பயம் இல்லை தன்னால் சரியாகிடும்னு சொன்னார்கள் அதே போல சரியாகிட்டுன்னு சொன்னார்கள். எதுக்கு நீங்கள் டாக்டரிடம் கேட்டு தெளிவு செய்துக்கோங்க.

3. உங்கள் எடை குறைக்க எனக்கு என்ன சொல்லன்னு தெரியலை. இப்பதானே டெலிவரி ஆகி இருக்கு. அதனால் கொஞ்ச நாளையில் வெயிட் தன்னாலயே சில பேருக்கு குறையும். பால் கொடுக்கும் போது குழந்தைக்கு பால் வேணும்னு எல்லா ஆகாரத்தையும் அதிகமாக சாப்பிடக்கூடாது அது கண்ணாபின்னா என்று வெயிட் போட்டும். சத்தான ஆகாரம் என்று சாப்பிடுங்க. நீங்களே சொல்லி இருக்கீங்க இப்ப முன்னாடி இருந்ததுக்கு குறைந்துட்டதா. அதனால கண்டிப்பா வெயிட் குறையும். தனியா வேற இருப்பதால் குழந்தை கவனிக்க மற்ற வேலைகளை செய்ய என்று வெயிட்டும் குறைந்துடும். அதன் பிறகு வெயிட் குறைட்டால் கேளுங்க.

4. உங்களுக்கு டெலிவரி எப்படின்னு எனக்கு தெரியலை. நார்மல் டெலிவரி என்றால் நம்ம வேலைகளை நாமே செய்யலாம். சிசேரியன் பற்றி எனக்கு தெரியலை.உங்களுக்கு அதிக நேரம் நின்றால் களைப்பாக இருக்குன்னு சொல்லி இருக்கீங்க. இப்பதானே 34 நாள் ஆகுது அதனால சில பேருக்கு டயர்ட் இருக்கலாம். குழந்தை பெரும் சமயம் அதிகம் ப்ளீடிங்க் போனாலும் இந்த களைப்பு,வெயிட் போடுறதுலாம் இருக்கும்.கவலை வேண்டாம் சரியாகிடும். உங்களுக்கு நார்மல் டெலிவரின்னா தைரியமா எல்லாம் செய்யலாம்.மருந்து சோறு என்று இருக்கும் அது செய்து சாப்பிடுங்க. சோர்வு எல்லாம் நீங்கிடும். குழந்தை பெற்றவர்களுக்கு ரெம்பவும் நல்லது.

எனக்கு தெரிந்ததை எல்லாம் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன். வேறு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்க்கவும். மற்றவர்களும் வந்து பதில் தருவார்கள்.

அன்புடன் கதீஜா.

கவலை வேண்டாம். சிறு குழந்தைகளுக்கு எந்த் மருந்தும் டாக்டர் ஆலோசனை இல்லாமல் கொடுக்காதிங்க். குடுக்கவும் மாட்டர்கள். இதுவரை உலகத்தில் எங்கும் சளிக்கு மருந்து கண்டு பிடித்ததில்லை. ஆதனால் நிங்க நல்ல தைரியமா கை மருந்துகள் அதாவது மருந்து அல்லாமல் நிங்க நிற்ய்ய செய்யலாம். தளிகா சொன்னது போல் செய்யலாம். இங்கு டாக்டர்கள் சிறியவர்களுக்கும்/பெரியவர்களுக்கும். பாத்ருமில் ஷ்வரில் ஹார் வாட்டர் திற்ந்துவிட்டு கதவை சாத்திவிட்டு ஐந்து நிமிடங்கள் கழித்து உள்ளே சென்று முடிந்தவரை ஐந்து நிமிடம் இருந்தால் அந்த வேபரைசரில் நன்றாக் சளி இறங்க்விடூம். கொஞ்சம் நிம்மதியா மூச்சு விடமுடியும். அடுத்தது நல்ல சலைன் ட்ராப்ஸ் டாக்டரிம் கேட்டுவிட்டு முக்கில் ஸ்பேரே செய்யவும்.(டாக்டர் ஆலோசனை படி) செய்யுங்க கண்டிப்ப குண்மடையும்.எப்படி இருந்தாலும் சளி மூன்று நாட்கள் இருக்கும். தலையணகளை உயரமாக வைத்து விட்டு உறங்க வைக்க வேண்டும். ஹுமிடிவையர் இருந்தால் அதை ருமில் வைத்து படுக்கவும். நல்ல் நிவாரனம் கிடைக்கும்.டேக் கேர்

HAI JAYASRI

i have 1and half year baby.i have to use this indian tablets.anda tablets coduthathilirundu avalukku saliye pidipathillai. i give that names
EROX-KID AND CYFOLAC-JR.

கதீஜா,விஜி,கோபிகா உங்களின் உதவிகரமான பதிலுக்கு மிக்க நன்றி
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

மேலும் சில பதிவுகள்