கர்நாடகா கீரை மசியல்

தேதி: July 17, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பசலைக்கீரை - ஒரு கட்டு
துவரம்பருப்பு - 100 கிராம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 4
சீரகம் - அரை தேக்கரண்டி
கொப்பரைத்தேங்காய் - 2 சில்
தனியா - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
வரமிளகாய் - 2
புளி - நெல்லிக்காய் அளவு


 

தனியா, பச்சைமிளகாய், சீரகம், கொப்பரைத்தேங்காய் ஆகியவற்றை தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
கீரையை பருப்புடன் குக்கரில் 2 விசில் வைத்து வேகவிடவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தாளித்து அடுப்பை அணைக்கவும்.
புளியை கரைத்து விட்டு, உப்பு போடவும். அரைத்த மசாலாவை சேர்த்து அடுப்பில் வைத்து வெந்த கீரையை சேர்த்து மஞ்சள் தூள், பெருங்காயம் போட்டு கொதித்தவுடன் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்