சிக்கன் தேங்காய் மசாலா

தேதி: July 17, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் - அரை கிலோ
தேங்காய் - ஒரு மூடி
பச்சைமிளகாய் - 4
வெங்காயம் - 2
தக்காளி - ஒரு
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தனியாப்பொடி - 2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி


 

கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
அதனுடன் துருவிய தேங்காய்ப்பூ போட்டு வதக்கி, பொடியாக நறுக்கின தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் சிக்கனை சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.
பிறகு மஞ்சள் தூள், மிளகாய்ப்பொடி, தனியாப்பொடி, உப்பு, கீறிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
சிறிது தண்ணீர் தெளித்து சிக்கனை வேகவிட்டு மிளகுத்தூள் போட்டு கிளறி மசாலா கெட்டியானவுடன் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்