வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!!!!!!!!!!!!

என் இனிய அறுசுவை மக்களே!
உங்கள் பாசத்துக்குரிய செல்வி திரும்ப வந்துட்டேன். (கொஞ்சம் பாரதிராஜா ஸ்டைலில் பேசிப் பார்த்தேன்:-))
நீங்க யாரும் என்னை மறக்கலைன்னு பதிவுகளை பார்த்து தெரிஞ்சுகிட்டேன். நானும் யாரையும் மறக்கலை. ஒருவழியா கிரகப்பிரவேசம், பிறந்தநாள், வீடு மாற்றல் எல்லாம் முடிந்து திரும்ப வந்துட்டேன். இனி வழக்கம் போல் வருவேன். முன்பு அளவு முடியாட்டாலும் வந்துகிட்டாவது இருப்பேன்.
எல்லோரிடமும் தனியா பேசறேன். அதுக்கு முன்னே... எல்லோரும் நலமா? நான் நலமே.
அன்புடன்,
செல்வி.

ஹாய்,
இன்னிக்கு ரொம்ப நேரம் ஆயிடுச்சு. இன்னும் பதிவுகளை படிச்சு முடிக்கவே இல்லை. எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருக்கும் அனைவருக்கும் நன்றி.. நன்றி.. நன்றி...தனித்தனியாக ஒவ்வொருக்கும் பதில் சொல்ல சிறிது அவகாசம் தேவை.
யப்பா... அறுசுவையை பார்க்க முடியாம எதையோ இழந்தது போல உணர்ந்தேன். ஒருவழியா புது வீட்டுக்கு நெட் கனெக்ஷன் சண்டை போட்டு வாங்கி, இன்னிக்கு அறுசசவைக்கு வந்ததும் எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?
என் மேல் இத்தனை பேர் அன்பு வைத்திருக்கிறார்கள்னு பார்த்ததும், எனக்கு அழுகையே வந்துடுச்சு. தேங்க்ஸ், தேங்க்ஸ் டு எவ்ரிபடி.
பது வீட்டுக்கு வந்துட்டாலும் இன்னும் முழுமையாக வேலைகள் முடியவில்லை. அதனால் வேலைகள் கொஞ்சம் அதிகம். எப்படி இருந்தாலும் இனி இங்கு வராமல் இருக்க மாட்டேன்.
புது வீட்டு போட்டோக்கள் விரைவில் போடறேன்.
எல்லோருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

வாங்க வாங்க செல்விமா!!!
நல்லா இருக்கீங்களா??? புது வீடு எப்படி இருக்கு.... எல்லாம் செட்டில் ஆயாச்சா??
உங்க உடல் நலம் எப்படி இருக்கு... உங்களை கண்டா பிடிக்க சொல்லி அதிரா தேடிட்டு இருக்காங்க விஜியும் தான்.... இனி சமையல் ஓவியம்ன்னு ஒரு ரவுண்டு வாங்க.... இந்த அளுகாச்சிஎல்லாம் ஓஒரம் கட்டுங்க... அங்க பாருங்க லைன் தெரியுதா?? தெரு முனையில?? எல்லாம் உங்க பதிலுக்கு தான் வெயிட்டிங்!!! ஜமாயுங்க!!

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அப்ப எப்ப வந்து அருசுவையில் அட்டென்ஸ் போட்டிங்க. நாங்க எல்லாம் பேசாமல் கிளம்பி அங்கு வரலாம் என்று இருந்தோம் பக்கத்தில் இல்லாமல் போயிட்டது. உங்க வீட்டின் படங்களை பார்க்க ஆவலுடன் காத்திருப்பவர்களில் நானும் ஒருத்தி.அதை விட உங்க ஓவியங்கள் மீது தான் எனக்கு ரொம்ப ஆசை.சரி மெல்ல மெல்ல நடந்து வாங்க அருசுவைக்கு. ஒ.கே வா.

எப்படி இருக்கீங்க?வீட்டில் அனைவரும் நலமா?உங்களை அருசுவைய்யில் பார்த்ததும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நீங்கள் அனுப்பிய கண்ணாடி ஓவியம் அழகோ அழகு!தாங்கள் அருசுவைய்யில் இல்லாமல் ஏதோ ஒருசுவை குறைவதுபோல் ஒரு உணர்வு அதே போல் மனோகரி அக்காவின் வருகையும் குறைந்து சுவாரசியமின்றி காணப்படுகிறது அடிக்கடி வாருங்கள் வந்து மெருகூட்டுங்கள்

அடடா இரண்டு முறை பதிவாகிவிட்டது

செல்வியக்கா வந்திட்டா..... எப்படி இருக்கிறீங்க செல்வியக்கா? புதுவீட்டில் ஒழுங்குகள் முடிவதற்கு நாள் எடுக்கும், ஒரேயடியாகச் செய்யாமல் மெதுவாகச் செய்யுங்கோ.... உங்கள் வருகையைப் பார்த்து புத்திலிருந்து வெளிப்படும் ஈசல் போல் எத்தனை பேர் இங்கே தலை காட்டுகிறார்கள்.. வாங்க செல்வியக்கா.... வாங்கோ.... வாங்கோ.... ஜயந்திமாமி அப்பாப்ப உங்களைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்ததால் நீங்கள் இதுவரை வராத காரணத்தை அறிந்தோம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

செல்வி அம்மா அறுசுவைக்கு திரும்ப வந்ததில் ரொம்ப சந்தோஷம். புது வீடு, புது வீட்டில் பிறந்த நாள் ஜமாயிங்க! நாய்க்குட்டி எப்படி இருக்கிறது? என்ன பெயர்? நேரம் கிடைக்கும் போது வந்து பதிவு போடுங்க

ஜானகி

சந்தோசம் வந்தது வெல்கம் வெல்கம் வாங்கோ வாங்கோ...அப்படியே வீட்டு போட்டோவை போட்டுடுங்கோ...ஆமா வேலைலாம் ஓவர்னு சொல்லி இருக்கீங்க அப்படியா>?ஏதோ ஆசாரி வேலைன்னு சொன்னீங்களே எல்லாம் முடிஞ்சுட்டாக்கா ஒரு வலியா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

வணக்கம் செல்விம்மா

எப்படியிருக்கிறீங்க?நான் உங்களுடன் முதன் முதலில் பேசுகிறேன்.இதற்கு முன்பு உங்க வீட்டின் கிரஹபிரவேசத்தின் அழைப்பிதழில் உங்கள் ஓவியத்தை பார்த்து வியந்து பதிவு போட்டுள்ளேன்.நான் இந்த ஆண்டுதான் அறுசுவைக்குள் நுழைந்தேன். பெரும்பாலும் இங்குள்ளவர்கள் மற்றும் அட்மின் பாபு அவர்கள் வரை பிரசித்தம் பெற்ற நபர் நீங்களாகதான் இருக்க முடியும் என எண்ணுகிறேன். உங்களை போட்டோவில் பார்த்தோம். மிக்க மகிழ்ச்சி நீண்ட இடைவெளி முடிந்து வந்ததில்,.மறுமுறையும் வரவேற்கிறோம் வாருங்க வந்து குறிப்புகளை அள்ளித்தந்து 500யை தொட எனது மனபூர்வ வாழ்த்துக்கள்

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

எப்பை இருக்கீங்க? நீங்க இல்லாமல் அறுசுவையே ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுச்சு உங்கள நல்லபடியா புது வீட்ல வந்து செட் ஆகியாச்சா? எப்ப எங்க கிட்ட எல்லாம் புதுவீட்ட காண்பிக்க போறீங்க? உங்க பெயிண்ட் எல்லாம் அதுல பாக்க ரொம்ப ஆவலுடம் இருக்கிறேன். உங்க உடல் நிலை எப்படி இருக்கு. take care of ur health. அப்ப அப்போ வந்து இப்பை தலைய காண்பிச்சுட்டு போங்க.

மேலும் சில பதிவுகள்