ப்ளைன் இட்லி சாம்பார்

தேதி: July 19, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெங்காயம் - பாதி
கறிவேப்பிலை, மல்லி இலை - சிறிதளவு
தேங்காய்ப்பால் - 1/2 கப் (தேவைப்பட்டால்)
உப்பு - 3/4 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
அரைக்க:
துவரம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் (ஊற வைத்தது)
பட்டை - 1 இன்ச்
லவங்கம் - 3
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கசகசா - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - பாதி
தக்காளி - 1
மிளகாய்தூள் - 3/4 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
பூண்டு - 4 பல்


 

பருப்பை 1/2 மணிநேரம் ஊறவைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் மையாக அரைத்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பின் அரைத்த விழுது, 2 கப் தண்ணீர், உப்பு மற்றும் தேங்காய்பால் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் குக்கரை மூடி 1 அல்லது 2 விசில் விட்டு இறக்கவும்.
இப்பொது சுவையான இட்லி சாம்பார் ரெடி. மல்லி இலை தூவி சூடான இட்லி, தோசையுடன் பரிமாறவும்.


இதில் தேங்காய்ப்பால் சேர்க்காமல் கூட செய்யலாம். சாம்பார் அதிகமாக தேவைப்பட்டால் அரைக்க வேண்டிய பொருட்களுடன் தேங்காய் துருவல் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மஹிஸ்ரீ, இன்று உங்கள் ப்ளைன் இட்லி சாம்பார் செய்தேன்.நன்றாக,மிகவும் ருசியாகவும் இருந்தது.
அருமையான சாப்பார், பாராட்டுகின்றேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.