கிட்ஸ் வெண்டைக்காய் ஃப்ரை

தேதி: July 19, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

வெண்டைக்காய் - 1/2 கிலோ
கடலை மாவு - 1/2 கப்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு


 

முதலில் தேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைத்துக் கொள்ளவும். வெண்டைக்காயை நன்றாக கழுவி வைக்கவும்.
பின்னர் ஒவ்வொரு வெண்டைக்காயையும் நீளவாக்கில் நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
இப்பொழுது வெட்டி வைத்துள்ள வெண்டைக்காயுடன் கடலை மாவு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
அனைத்தும் நன்றாக சேரும்படி கலக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
ஒரு கடாயில் எண்ணெய் காயவைத்து கொள்ளவும். இப்பொழுது எண்ணெயை மிதமான தீயில் வைத்து வெண்டைக்காய் துண்டங்களைப் போடவும்.
2- 3 நிமிடம் கழித்து திருப்பி போடவும். வெண்டைக்காய் நன்றாக வெந்த பிறகு எடுக்கவும்.
இப்பொழுது சுவையான கிட்ஸ் வெண்டைக்காய் ஃப்ரை ரெடி. இதனை கலந்த சாதம் வகைகளுடன் சாப்பிட நன்றாக இருக்கும். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த எளிமையான, சுவையான குறிப்பினை திருமதி. கீதா ஆச்சல் அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்கான, மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக்குறிப்புகளாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கீதா உங்க சுட்டி ரொம்ப அழகு ஒவ்வொரு ஆல்பத்திலும் அவ்வொரு அழகுதான் பிங்க் டிரஸில் ரொம்ப கியூட்டா இருக்காப்பா மஷஅல்லாஹ்..உங்க குறிப்பும் நல்லா இருக்கு சொல்ல மறந்துட்டேன் உங்க ஈஸி கோபி மஞ்சுரியன் எப்பவோ செதுட்டேன் மின்னூட்டம் கொடுக்க மறதி சாரிமா ரொம்ப நல்லா இருந்தட்து தேங்ஸ்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ரொம்ப நன்றக்க இருக்கு. நான் அடிக்டி என் வீட்டில் இப்படி தான் செய்வேன். ஐந்தே நிமிடத்தில் காலி. சாப்ப்பட்டு வரை கூட வெயிட் பன்ன மாட்டார்கள். இதே மாதிரி, நான் பாக்ற்காய், வாழக்காயில் கூட செய்வேன். ( குறிப்பு நான் இதில் கொஞ்சம் தனியா பவுடர் கூட சேர்த்து செய்வேன்) நன்றி உங்க எல்லா ரெசிப்பிகளும் ஸூப்பர். மேலும் மேலும் குடுங்க. உங்க குட்டிபென் ஸூப்ப்ர், எத்தனை வயது?

ஹாய் மர்ழியா, விஜி
மிகவும் நன்றி.
எப்படி இருக்கிங்க??..
மர்ழியா உங்களுடன் பேசியே ரொம்ப நாள்ச்சுபா.
விஜி என்னுடைய குழந்தைக்கு இப்பொழுது 15 மாதம் ஆகின்றது.
அவள் பெயர் Akshata.

with love,
Geetha Achal

ஹாய் கீதா
எப்படியிருக்கிறீங்க?உங்க வாண்டு Akshata, நல்ல ஸ்மார்டா இருக்கப்பா?
இந்த வெண்டைக்காய் வறுவல் நன்றாக இருக்கிறது செய்துப்பார்க்க ஆசையாகதான் உள்ளது ஆனால் என்ன செய்ய எனக்கு இங்கு வெண்டைக்காய் கிடைப்பது இல்லை, அடுத்த மாதம் இந்தியா வருகிறேன் அப்போது செய்ய்து பார்க்கிறேன்.கீதா நீங்க எங்கே இருக்கிறீங்க......
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

ஹாய் மஹா,
எப்படி இருக்கிங்க?
நான் New Yorkயில் இருக்கின்றேன்.ஆமாம் Akshata ரொம்ப வாலு.மிகவும் சந்தோசம் ஊருக்கு போக போறிங்க...ஊரில் எல்லாரும் உங்களை பயங்கரமாக கவனிப்பங்க என்று சொல்லுங்க..Enjoy..

with love,
Geetha Achal