சில்லி சப்பாத்தி

தேதி: July 21, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சப்பாத்தி - 6
பெரிய வெங்காயம் - 1
குடைமிளகாய் - 1
பூண்டு - 3 பல்
ஸ்பிரிங் ஆனியன் - 1
தக்காளி - 1
மிளகாய்தூள் - 3/4 தேக்கரண்டி
டொமேட்டோ சாஸ் - 2 தேக்கரண்டி
மல்லி இலை/புதினா - சிறிதளவு
உப்பு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி


 

சப்பாத்தியை ஒரு சதுர இன்ச் அளவாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம், தக்காளி, ஸ்பிரிங் ஆனியன், பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும். குடைமிளகாயை நீளவாக்கில் இரண்டாக நறுக்கி, பின் குருக்காக, மெல்லியதாக நறுக்கவும். மல்லி இலை/புதினாவையும் பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன், பூண்டு, குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
பின் மிளகாய்தூள், தக்காளியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அதன் பிறகு சப்பாத்தி, உப்பு சேர்த்து வதக்கவும்.
இறுதியாக டொமேட்டோ சாஸ் சேர்த்து 2 நிமிடம் கைவிடாமல் கிளறி, மல்லி/புதினா தூவவும்.
இப்போது சுவையான சில்லி சப்பாத்தி ரெடி. சூடாக ஆனியன் ரைத்தாவுடன் பரிமாறவும்.


சப்பாத்தி மீதம் ஆகிவிட்டால் இது போல் செய்து வைத்தால் விரைவில் காலியாகிவிடும். எளிதாகவும் செய்யலாம், சைட் டிஷும் செய்யத் தேவையில்லை.

மேலும் சில குறிப்புகள்


Comments

சில்லி சப்பாத்தி மிகவும் அருமையாக இருந்தது :)

நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)