ஈஸி சிக்கன் ஃப்ரை (less oil)

தேதி: July 21, 2008

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் - 500 கிராம்
முட்டை - 1
மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - 3/4 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - சிறிது
ரெட் கேசரி கலர் - 2 சிட்டிகை
மிளகுதூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

சிக்கனை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
முட்டையை உடைத்து ஊற்றி ஸ்பூன் அல்லது பீட்டரால் அடித்து வைக்கவும்.
பின் அதனுடன் சிக்கன், மிளகாய்தூள், உப்பு, மஞ்சள், ரெட் கலர் சேர்த்து கலக்கி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி மேரினேட் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து சிம்மில் 6 - 8 நிமிடம் வரை வேகவிடவும்.
அவ்வப்போது திறந்து கிளறி விடவும். நீர் சேர்க்க தேவையில்லை, முட்டை மற்றும் சிக்கனில் இருந்து வெளி வரும் நீரே போதுமானது.
நன்கு வற்றி, சிக்கனும் வெந்து எண்ணெய் பிரிந்தார் போல் வரும் போது மிளகுதூள் தூவி இறக்கி விடவும்.
இப்பொது சுவையான சிக்கன் ஃப்ரை ரெடி.


இது மிக விரைவில் எளிதாக செய்யக் கூடியது. சிக்கனை மேரினேட் செய்யும் நேரம் மட்டுமே.

மேலும் சில குறிப்புகள்


Comments

I m Velvizhi..
We did schooling together .. in St.marys, salem..
Do u remember me..If so reply.. i ll give u my mail id..
its great to see u thro this website..with ur photo i confirmed tat it was u...

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே

நான் உன்னை இது போல் ஒரு தருணத்தில் சந்திப்பேன் என்று நினைக்கவே இல்லை. நாம் அறுசுவைக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

உன்னுடைய mail ID-க்கு என்னுடைய contact details அனுப்பியுள்ளேன்.

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

Hi Sri Gita,
Today i tried your recipe,it came out very well.
Thanks for your contribution. Have a good day.
Thanks& Regards,
Portia Manohar,
Jakarta

Portia Manohar

நான் இன்று சிக்கென் ப்ரை செய்தென், மிகவும் நன்றாக இருன்தது

தேவி

Thanks and Regards,
Chitra Devi