இறால் மசால்

தேதி: July 23, 2008

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இறால் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - ஒன்று (பெரியது)
பூண்டு - 7 பல்
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க:
தேங்காய்துருவல் - 3/4 கப்
காய்ந்த மிளகாய் - 8 எண்ணம் அல்லது 1 1/2 - 2 டீஸ்பூன்(காரத்திற்கு ஏற்ப)
நல்ல மிளகு - ஒரு டீஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
கசகசா - 3/4 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கீற்று
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்


 

இறாலை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சிறிய வட்டங்களாக நறுக்கி கொள்ளவும், தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும், பூண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காய்துருவல், காய்ந்தமிளகாய், சோம்பு, நல்லமிளகு, கசகசா ஆகியவற்றை நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு அது சூடானதும் அதில் தாளிக்க வேண்டியவற்றை கறிவேப்பில்லை, சீரகம், வெந்தயம், சோம்பு இவற்றை தாளிக்கவும்.
பின்னர் அதில் சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள்த்தூள் இவற்றை போட்டு நன்றாக வதக்கவும்.
சிறிது நேரத்தில் இறாலைப் போட்டு வதக்கவும், 5 நிமிடம் கழித்து அரைத்த விழுதினை போட்டு நன்றாக கிளறி விடவும்.
எல்லாமும் கலந்து இருக்கும்மாறு தேவையான உப்பு போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி மூடிப்போட்டு வேகவைக்கவும். மிதமான தீயில் தண்ணீர் வற்றி கெட்டியாகும் நேரம் இறக்கவும். இப்போது இறால் மசால் தயார்.


இதனை வெள்ளைசாதம், பிரியாணி, நெய் சோறு, சப்பாத்தி, பரோட்டாவிற்கும் ஏற்றது.

மேலும் சில குறிப்புகள்


Comments

மஹா,உங்கள் இறால் மசால் செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

மஹா உங்கள் இரால் மசால் செய்து பார்த்தேன், மிக அருமை. சாத்தத்தில் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருந்தது.

ஹாய் மஹா
நேற்று உங்கள் குறிப்பிலிருந்து இறால் மசால் செய்தேன் ரொம்ப நல்லை இருந்தது உங்களுடைய குறிப்புக்கு நன்றி.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

ஹாய் மஹா நலமா ? உங்கள் இறால் மசால் செய்தேன் ரொம்ப நல்லா இருக்கு நான் மசாலாபோல் செய்யாமல் தண்ணீர் சேர்த்து
குழம்பாக செய்தேன் மிகவும் அருமை

என்றும் அன்புடன்
நஸ்ரின் கனி