தந்தூரி சிக்கன் மசாலா குழம்பு

தேதி: July 24, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

சுத்தம் செய்த கோழித் துண்டுகள்- 1 கிலோ
எண்ணெய்- 5 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள்- 2 ஸ்பூன்
கொத்தமல்லித்தூள்- 2 ஸ்பூன்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
தந்தூரி மசாலா பவுடர்- 2 ஸ்பூன்
தயிர்- 2 மேசைக்கரண்டி
மசித்த தக்காளி- கால் கப்
தேவையான உப்பு
அரிந்த கொத்தமல்லி- கால் கப்
கீழே உள்ளவற்றை நன்கு அரைக்கவும்:
பச்சை மிளகாய்-2, வெங்காயம்-2, தேங்காய்த்துருவல்- 3 மேசைக்கரண்டி, பூண்டு இஞ்சி விழுது- 1 மேசைக்கரண்டி, அரிந்த கொத்தமல்லி- கால் கப், புதினா இலைகள்- கால் கப், முந்திரிப்பருப்பு-8, மிளகு அரை ஸ்பூன், சீரகம்- கால் ஸ்பூன், பட்டை- 1 துண்டு, ஏலம்-3


 

எண்ணெயைஒரு வாணலியில் ஊற்றி அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும்.
எண்ணெய் மேலே தெளிய ஆரம்பிக்கும்போது தூள்கள் அனைத்தையும் சேர்த்து குறைந்த தீயில் சில நிமிடங்கள் வதக்கவும். தயிர், தக்காளி சேர்த்து மறுபடியும் குழைய வதக்கவும். பின் கோழி, உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து கோழித்துண்டுகள் நன்கு வேகும் வரை சமைக்கவும்.
கடைசியில் கொத்தமல்லியைத்தூவவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Tandoori Masala Recipe

Ingredients for Tandoori Masala
Coriander seeds, 2 tsp
Cumin seeds, 1.5 tsp
Turmeric powder, 1 tsp
Garlic Powder, 2 tsp
Ginger powder, 1 tsp
Mango powder (amchoor), 1 tsp
Paprika, 2 tsp
Red Chili powder, 1 tsp
Mint powder, 1 tsp

Preparation :
Spray oil in a non-stick frying pan and roast coriander and cumin seeds till they turn aromatic.
Mix all the ingredients and grind into a fine powder using a grinder.
Store tandoori masala in a air-tight bottle and use tandoori masala powder spice when required.

மனோ மெடம்,
வணக்கம். எப்படி இருக்கீங்க?
உங்களோட தந்தூரி பவுடர் செய்து இந்ததந்தூரி சிக்கன் மசாலா குழம்பு செய்தேன். நன்றாக வந்தது. கோஞ்சம் புளிப்பா இருந்தது, தயிர் கோஞ்சம் அதிகமா சேர்த்துவிட்டேன் என நினைக்கிறேன்.
நன்றி மேடம்

இப்படிக்கு
இந்திரா

indira

அன்புள்ள இந்திரா!

எப்படி இருக்கிறீர்கள்?

தந்தூரி மசாலா சிக்கன் குழம்பை செய்து பார்த்து அது நன்றாக வந்தது என்று எழுதியிருப்பது மகிழ்வாக இருக்கிறது.
உங்கள் அன்பான பின்னூடத்துக்கு என் நன்றி!!
தயிர் சேர்க்கும்போது புளிப்பிலாத தயிர் சேருங்கள். தக்காளி ஒரு வேளை புளிப்பாக இருந்தால் சிறிது தயிரைக் குறைத்துக் கொள்ளலாம்.