ஒரு மாத கைக்குழந்தையுடன் பிளைடில் பயணம்?

நான் தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளேன். இது எனக்கு இரண்டவது குழந்தை. குழந்தை பிறந்து ஒரு மாதத்தில் குழந்தையுடன் இந்தியா செல்ல இருக்கிறேன். ஒரு மாதத்திற்குள் (4 மணி நேரம்) பயணம் செய்யலாமா?
<!--break-->
சுந்தரி

வணக்கம் அன்பு தோழி.....ஒரு மாதம் குழந்தை தாய் பால் நன்றாக குடித்தால் சமாளீப்பது எளிது...விமானம் ஏறும் பொழுதும் இறங்கும் பொழுதும் பால் அருந்த செய்யுங்கள்....4 மணி நேரம் பயணத்தை குழந்தையை உறங்க செய்து விடுங்கள்...விவரம் தெரிந்த பின்னர் குழந்தையை எடுத்து செல்வதை விட ஒரு மாத குழந்தையை எடுத்து செல்வது எளிது என நான் நினைக்கிறேன்....கவலையை விடுங்கள்...

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. டாக்டரிடம் கேட்ட பொழுதும் இதை தான் கூறினார். நான் பயணம் செய்த பிறகு அனுபவத்தை எழுதுகிறேன்.

யெத்தனை மாதத்திர்க்கு பிறகு பயணம் கூடாது?

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

கர்பமாகி 7 மாதத்திற்குபின் பல ஏர்லைன்சும் அனுமதிப்பதில்லை.குழந்தை பிறந்தும் 1 வார பச்சை குழந்தையை சில ஏர்லைன்ஸ் அனுமதிக்காது என்று கேட்டிருக்கிறேன்.
1 மாத குழந்தையுடன் பயணம் செய்வது மிக எளிது.சில டிப்ஸ் முன்பு கொடுத்திருக்கிறேன் அதனை படித்தால் உபயோகபடும் பிறகு லின்க் அனுப்புகிறேன்

http://www.arusuvai.com/tamil/forum/no/4121

http://www.arusuvai.com/tamil/forum/no/8153

ஏர்லைன்ஸ் யை விடுங்கள் நமக்கு பாதுகாப்பு எது?
பிறகு... யென் மனைவியை நாட்டுக்கு அனுப்பினாள் பாதுகாப்பக இருக்கும் யென்ரு நான் 6வது மாதம் அனுப்பளாம் யென்று நினைக்குரென், யென்னை பிரின்து இருக்கும் அந்த நிரதில் மனொரீதியக பதிக்கப் படுவாரா?

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

மனோரீதியாக பாதிப்பெல்லாம் வராது..நீங்க ரொம்ப பாசமானவரா இருந்தால் உங்களை ரொம்ப மிஸ் பன்னுவார் வருத்தப்படுவார் அதுவே நீங்க சரியான கொடைச்சல் கேசா இருந்தீங்கன்னா அப்பா நிம்மதின்னு சந்தோஷப்படுவாங்க.அவ்ளோ தான்
சொல்லப் போனால் 6 மாதத்திற்கு பின் விரும்பினால் அவர் ஊர் செல்வது தான் நல்லது.பிரசவத்திற்குபின் அவருக்கு பல பல தெவைகள் இருக்கும் அதற்கு அம்மா அருகில் இருந்தால் நல்லது.

thalika,

\\நீங்க ரொம்ப பாசமானவரா இருந்தால் உங்களை ரொம்ப மிஸ் பன்னுவார் வருத்தப்படுவார் அதுவே நீங்க சரியான கொடைச்சல் கேசா இருந்தீங்கன்னா அப்பா நிம்மதின்னு சந்தோஷப்படுவாங்க.//
எப்படி இவ்வளவு சாதாரனமாக ஜோக் அடிக்கிறீர்கள். படித்ததும் சிரிப்பு தாங்கமுடியவில்லை. அதான் உடனே பதில் போட்டுட்டேன்.

ஜிஜா, அதான் சொல்றேனே.. தளி தான் 2011ல. மத்தவங்கலாம் துண்டை காணோம் துணியை காணோம்னு ஓட வேண்டியது தான் :) என்னா நக்கலு கிண்டலு.. அடிச்சுக்க முடியாது. நான் சிரிக்கும் அதே கணம் இன்னும் பல பேர் அதே காரணத்துக்கு சிரிக்கறாங்கன்னா, அது தளியால் மட்டுமே முடிந்த சாதனை ;)

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

அடப் பாவி மக்கா..சும்மாத் தானே எழுதினேன் கெக்கெபெக்கென்னு சிரிச்சதுமல்லாம நக்கலு,கிண்டலுன்னு soul ஐ உசுப்பி விடறிங்களே இது அடுக்குமா

அருசுவை தோழிகளுக்கு விமானத்தில் 23 நாள் முதல் குழந்தைகள் அனுமதிக்கப்படுவர் இது பொதுவான விதிமுறை. கவனம் தோழியரே இது குழந்தையின் நலம்.

நன்றி
நிஷாந்தி

நிஷா

மேலும் சில பதிவுகள்