என்று தணியும் இந்த தீவிரவாதம்.. (பெங்களூரு தொடர்குண்டு வெடிப்பு)

இன்று மதியம் 2 மணிக்கு மேல் பெங்களூரில் தொடர்ச்சியாக எட்டு இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்து உள்ளன. அதிகாரப்பூர்வமான தகவல்கள்படி இதுவரை 3 பேர் இறந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த ஜெய்ப்பூர் நிகழ்வுகளுடன் ஒப்பிடும்போது, வெடித்த குண்டுகளின் எண்ணிக்கை ஒன்றாய் இருந்தாலும் பாதிப்பு குறைவுதான். அரசாங்கமும், அமைப்புகளும் கைத்தட்டி சந்தோசப்பட்டுக்கொள்ளலாம்.

2005ல் டில்லியில் பிடிப்பட்ட சில தீவிரவாதிகள், பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களை வெடிவைத்து தகர்க்கும் திட்டம் இருப்பதாக விசாரணையில் தெரிவித்தார்கள். அப்போது பெங்களூர் நகருக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கே வெடிக்குண்டு, இங்கே வெடிகுண்டு என்று தினம் ஒரு புரளி வந்துகொண்டிருந்தது. ஒருவழியாக 3 வருடங்கள் கழித்து தீவிரவாதிகள் தாங்கள் திட்டமிட்டதை செயல்படுத்திவிட்டார்கள்.

அடுத்து என்ன.. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும், நடத்தியவர்களுக்கு கண்டணங்களையும் தெரிவித்துவிட்டு, நாம் நம்முடைய வழக்கமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டியதுதான். அடுத்த குண்டுவெடிப்பு செய்தி வர இன்னும் சிறிது நாட்கள் ஆகலாம்.

வாழ்க பாரதம்..

நானும் இன்று கேள்விபட்டேன். என் ஹஸ் சொன்னார், ரொமபவும் மோசமா இருக்கு என்ன நடக்குது என்றே தெரியல்லை எப்படி எல்லாமோ பாதுகாப்பு கொடுக்கிறாங்க அப்படியும் இதெல்லாம் இன்னும் நிறய்யவே நடக்குது என்று தனியும் இந்த வேட்டை தெரியல்லை.இது படித்தவுடன் கஸ்டமா இருக்கு.

பயங்கரவாதம்.. ஒன்றும் அறியாத மக்களை இப்படி செய்வதன் மூலம் எந்த இலக்கை அடைகிறார்கள்... நமது நாட்டிலே இப்படி பாதுகாப்பில்லை என்றால் நமக்கு வேறு எங்கு இருக்கும்... என் தம்பி சில மாதங்களுக்கு முன் தான் இந்த குண்டு வெடிப்பு பகுதியில் இருந்து புலம் பெயர்ந்து சென்றான்... இது போல கோவையில் நடந்த குண்டு வெடிப்பும் மிக அதிர்ச்சியாக இருந்தது...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நேத்து இந்த பதிவைப் போட்டப்ப, அடுத்த பதிவுக்கு இன்னும் கொஞ்சம் டைம் எடுக்கும்.. அதுவரைக்கும் நம்ம வழக்கமான வேலையைப் பார்க்கலாம்னு நினைச்சேன். அது எப்படின்னு கேட்டு இன்னைக்கு மறுபடியும் கைவரிசையை காமிச்சு, இன்னொரு பதிவு போட வச்சிட்டாங்க..

என்ன எழுதறதுன்னு தெரியல.. இப்ப நான் வசிக்கிறது எந்த நாட்டுலன்னு ஒரு குழப்பம் மட்டும்தான் மனசுல எஞ்சி இருக்கு..
முன்னெல்லாம் காஷ்மீர் பக்கம் எங்கேயோ குண்டு வெடித்ததா அப்பப்ப செய்திகள் வரும். அப்படியான்னு ஒரு "உச்சு" கொட்டிட்டு, டெலிபோன் பில் கட்டினோமா, ஹாலில் இரண்டு நாளா எரியாத பல்ப்பை மாத்தினோமா, தண்ணி லாரியை விரட்டிக்கிட்டு தெரு கடைசி வரைக்கும் ஓடினோமான்னு நம்ம அன்றாட வேலையை பார்க்கப் போயிடுவோம். அது காஷ்மீர் மட்டில்ல இருந்தவரைக்கும் நமக்கு எதுவும் தெரியலை. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா டில்லி, ஜெய்ப்பூர், மும்பை, ஹைதராபாத், பெங்களூர்னு கீழே இறங்கி வர்றதை பார்க்கையில, வெறுமனே உச்சு கொட்ட முடியலை. சிட்டியில எந்த ஒரு முக்கியமான இடத்துக்கு போனாலும், நம்ம அறியாமலே ஒரு பயம் வர்றது நிஜம். இப்ப இங்க ஒரு பாம் வெடிச்சா என்னாகும்னு ஒரு சின்ன விபரீத கற்பனை மனசுக்குள்ள வந்துடுது.

இப்ப மனசுக்குள்ளே நிறைய கேள்விகள் ஓடுது.. யார் இவங்க? எத்தனை பேர்? எங்க இருக்காங்க? ஒரு நாள் டில்லியில, ஒரு நாள் பெங்களூர்ல, அடுத்த நாளே அஹமதாபாத்துல.. அப்படின்னா, இவங்க நெட்வொர்க் எவ்வளவு தூரம் பரவி இருக்கு? இவங்க கோரிக்கை என்ன? நோக்கம் என்ன? நாங்க இந்தியா முழுக்க இருக்கோம்.. உன்னால என்ன செய்யமுடியும்னு கேள்வி எழுப்பறாங்களா? நாங்க நினைச்சா எந்த நகரத்தையும் தாக்க முடியும்னு தகவல் தெரிவிக்கிறாங்களா? இது அரசாங்கத்துக்கு எதிரான தாக்குதலா? இல்ல ஒரு குறிப்பிட்ட அமைப்பிற்கு எதிரான தாக்குதலா? இவங்களுக்கு ஆதரவு தர்றது யாரு? அப்பாவி மக்களை கொன்னு குவிக்கிறது மூலமா இவங்க சாதிக்க நினைக்கிறது என்ன? .. ஒன்னு ரெண்டு கேள்வி இல்ல.. ஆயிரம் கேள்விங்க இருக்கு..

கடைசியா வர்ற கேள்வி இதுதான்.. எப்படி வளரவிட்டோம்? இதுக்கு தீர்வுதான் என்ன?

பிரச்சனைகள் இல்லாத நாடு கிடையாது.. இன்னைக்கு அமைதி தேசம்னு எந்த நாட்டையும் சொல்ல முடியல.. இருந்தாலும் எந்த நிமிசம் என்ன நடக்குமோன்னு மக்கள் பயந்து வாழ்ற நாடுகள், most dangerous countries ன்னு
பட்டியல் போடப்பட்ட நாடுகள் சில இருக்கு. சீக்கிரம் இந்தியாவும் அந்த லிஸ்ட்ல சேர்ந்துடுமோன்னு பயமா இருக்கு.

இந்த மாதிரி எதாவது நடந்த பிறகு, தூக்கத்தில இருந்து எழுந்திரிக்கிற அரசாங்கம் அவசர அவசரமா எதாவது நடவடிக்கை எடுக்கிறதும், அப்புறம் கொஞ்சம் சூடு தணிஞ்சவுடனே மறுபடியும் தூங்க போயிடுறதும் வழக்கமா நடக்கிற விசயமாச்சு.. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதைத்தான் பண்ண போறாங்க.. முள்ளு குத்துறப்ப மட்டும் கிளைகளை கழிச்சு விட்டுட்டு, வேருக்கு தண்ணி விடுற விளையாட்டைத்தான் இன்னமும் விளையாடுறாங்க.. ஆணிவேரை தேடி நறுக்காத வரைக்கும் இது விருட்சமா வளர்ந்து பரவிக்கிட்டுதான் இருக்கும். வேற என்ன சொல்றது?

நேற்று பெங்களூர், இன்று அஹமதாபாத்.. நாளைன்னு ஒரு கேள்வி குறி போட்டு முடிக்கணுமோ?

தினமும் செய்தி கேட்பதற்கே பயமாகவும் வேதனையாவும் இருக்கு.
அட்மின் அண்ணா கேட்ட மாதிரி இந்த தீவிரவாதிகள் என்னதான் சொல்ல வர்றாங்க?அவங்க நோக்கம்தான் என்ன?
அதை விட கொடுமை போலீஸ் இன்னும் எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லைன்னு அறிக்கை விடுறதுதான்.இன்னும் கொஞ்ச காலம் போனல் இந்த வீட்டில் திருட்டு நடந்திருக்கிறது இன்னும் எந்த திருடனும் பொறுப்பேற்கவில்லைன்னு அறிக்கை விட்டாலும் விடுவாங்க போல.
நாமளும் எருமை மாட்டு மேல மழை பெய்ஞ்ச மாதிரி நாளயிலிருந்து வேர வேலைகளை பாத்துகிட்டு போய்டுவோம்.ஹ்ம்ம்ம்ம்ம்ம்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இந்த நாட்டை இனி அந்த முருகந்தான் காப்பாத்தணும்.

ஓம் முருகா..

etha natai eilaraiyum pataitha eraivan than kapathanum goverment sari eilai

பெங்களூர், அகமதாபாத் குண்டு வெடிப்பு மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. டீவியில் நியூஸ் பார்க்கவே பாவமாக இருக்கிறது. அப்பாவி மக்கள் மீது என்ன கோபம் குண்டு வைத்தவர்களுக்கு.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

குண்டு வெடிப்புச் சம்பவம் மனதினைப் பதறச் செய்கிறது.மனச்சாட்சியை விற்றுச் சாப்பிட்டவர்கள் செய்யும் அநீதம்.தீவிரவாததை எந்த மதமும் அனுமதிப்பதில்லை.சுய லாபங்களுக்காக நடக்கும் இப்படிப் பட்ட அநீதம் நிச்சயமாக களையப்பட வேண்டும்.இதுபோல் இனி நடக்காமல் இருக்க அநியாயக் காரர்களின் அட்டூழியம் ஒழிய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

பாவிகள் ஜார்கண்டிலும் குண்டு வைத்து விட்டார்களாம். இன்னும் எத்தனை இடமோ... இறைவன் தான் காப்பாத்தனும்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

எவ்லோ சின்ன குழந்தைகளெல்லாம் காயம் மற்றும் மரண விழும்பில் இருக்கிறது கவர்மெண்ட் சரி இல்லை எல்லா இடமும் பணம் பந்தாட படுகிறது அதுக்கு விலை மனித உயிர்கள் அதிலும் அப்பாவி மக்கள்..தலைவர்களெல்லாம் பயப்பட வேண்டாம் இனி நடக்காது என்கிறார்கள் ஆனா வெடிப்பது வெடிக்கதான் செய்கிறது அப்படிபட்ட தலைவர்களை பொது இடத்தில் நிறுத்தி வைத்தால் தெரியும் மக்களின் பீதி!இப்பலாம் டிவியை பார்கவே கஸ்டமா இருக்கு இறைவனிடம் வேண்டனும் நாமெல்லாம் இனியும் இது தொடர கூடாது சரியான கவர்மெண்ட் வரனும்னு!மக்கள் முதலில் விழிப்புணர்வுடன் இருக்கனும்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்