மகளிர் பக்கம்

ஹாய் அருசுவை தோழிகள் அனைவருக்கும் வணக்கம். எனக்காக இதை கொஞ்சம் படித்து யாருக்காவது தெரிந்தோ,கேள்வி பட்டோ இருந்தால் கொஞ்சம் சொல்லுங்க.ஏன் உறவினர் ஒருவருக்கு கல்யாணமாகி 4 வருடம் ஆக போகிறது. அவங்களுக்கு குழந்தை இல்லை. 2 தடவை கன்சிவ ஆனாங்க அது 3 அல்லது 4 மாதத்தில் தான் தெரிய வந்தது. அவங்களுக்கு ஒரு நாள் வயிற்று வலி வந்து அது ரொம்ப ஜாஸ்தியாகி விட்டது உடனேயே மருத்துவ மனைக்கு அழைத்து போய் பார்த்ததில் டாக்டர் சொன்னாங்க உடண்டியாகா அல்ட்ரா சவுண்ட், ஸ்கேன் எல்லாம் எடுக்க சொன்னார்கள் எடுத்து பார்த்ததில் அது கட்டி என்று தெரிய வந்தது அதை உடனடியா ரிமுவ் செய்ய வேண்டும் என்று அதுவும் செய்தார்கள் டாக்டர் சொன்னார்கள் இனிமேல் எந்த ப்ராப்ளமும் வராது கண்டிப்பா ஒரு வருடம் வெயிட் பண்னுங்க என்று. ஒரு வருடத்திற்க்கு பிறகு திருமபவும் கன்சிவ் ஆகி திரும்பவும் வயிற்று வலி வந்து வேறு டாக்டரிடம் காண்பித்த் போது டாக்டர் சொன்னாங்க கட்டி என்று ரிமுவ் செய்யவேண்டும் என்று அப்ப என் உறவினர் சொன்னார்கள் போன வருடம் இதே மாதிர ஆகி டாக்டர் எல்லாம் நல்லாவே கிளியரா ரிமுவ் பண்ணயாச்சு என்று. டாக்டர் சொன்னது என்ன வென்றால் ஒரு ஒவரி வொர்க ஆகல்லை என்று இந்த டாக்டர் சொன்னார் சரியா சர்ஜரி செய்யவில்லை என்று இந்த டாக்டர் சர்ஜரி செய்தார் பிறகு வயிற்று வலி வரல்லை. ஆனால் இது வரை கன்சிவ் ஆகாமல் இருப்பது நினத்து ரொம்ப வருத்தபட்டு கொண்டே இருக்காங்க. உறவினர்கள் எல்லாம் குறை கூற தொடங்கி விட்டார்கள், மன்முடந்த்து இருக்கிறாங்க, இனியும் சில விபரங்களை கேட்டு நான் மீதி அடுத்த பதிவில் போடுகிறேன் எனக்கு இதை பற்றி எதுவும் தெரியாதலால் நான் சொன்னேன் நம்ம அருசுவையில் நான் போடுகிறேன் கண்டிப்பா யாராவது இதை படித்து பதில் போடுவாங்க என்று கூறியுள்ளேன். ( நம்ம தோழிகள் எல்லாரும் சினியர்ஸ், ஜூனியர்ஸ். புது வரவுகள் மற்றும் தெரிந்தால் சொல்லவும்) நன்றி

ஸாரி அருசுவை அட்மினுக்கும், அருசுவை தோழிகளுக்கும் ஒரு சின்ன தப்பாகிவிட்டது இந்த தலைப்பு மகளிர் பக்கம் என்று டைப் செய்வதற்க்கு பதில் மகளிர் மட்டும் என்று ஆகிவிட்டது அதை மாற்றமுடியல்லை. அட்மின் முடிந்தால் அதை மகளிர் பக்கம் என்று மாற்ற முடியுமா.

இது மனம் வருத்தமான ஒன்றுதான்..எனக்கு தெரிஞ்சு இப்படி இருவர் இருக்கின்றாங்க விஜி அதில் ஒருவர் கல்யாணம் முன்பு கட்டி வந்து ஆப்ரேஷன் செதுட்டாங்க ஆனா டாக்டர் கண்ஸீவ் சான்ஸ் ரொம்பவே கம்மின்னு சொல்லிடாங்க அப்படி பெற்றாலும் 1 தான் பெறமுடியும் அடுத்த கரு வராதுன்னு ஆனா கல்யாணமாகி இப்ப அவங்களுக்கு அழகா சூப்பரா 4 பிள்ளைகள் இருக்கு..இது இறவன் செயலே அன்றி வேறு ஏதுமே இல்லை..சோ இறவனை நம்ப சொல்லுங்க ஆனா ஒன்னு விஜி இதை சொல்ல வேணாம் அவங்களிடம் கட்டி அடிக்கடி வருவது நல்லதில்லை அது கருவை வளர விடாது நல்ல தரமான டாக்டரை அனுக சொல்லுங்க..எனக்கு இப்ப சுத்தமா டைம் இல்லை இன்னும் விபரமா எழுத

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

விஜி,சென்னை சேத்துப்பட்டு,ஹாரிங்டன் சாலையில் உள்ள பிரஷாந்த் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர்.கீதா ஹரி பிரியா வை கன்ஸல்ட் பண்ணச் சொல்லுங்கள்.நிச்சயமாக சொல்யூஷன் கிடைக்கும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹலோ விஜி, டாக்டர் கீதா ஹரி பிரியா சிறந்த மருத்துவர்.
நீங்கள் தாமதிக்காமல் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.
விரைவில் நல்ல செய்தி சொல்லுங்கள்.
இதில் குறை சொல்ல ஒன்றும் இல்லை.உடம்பில் காய்ச்சல் வருவது போல், மருந்து சாப்பிட்டால் சுகம் கிடைக்கும்.கவலை வேன்டாம்.

ASIA M.S.
PEACE BE ON EARTH

hhijk

எல்லாருக்கும் ரொம்ப நன்றி. நான் உடனேயே சொல்லிவிட்டேன் அவங்களுக்கு அவங்க போய் பார்க்க போகிறேன் என்று சொல்லி இருக்காங்க. ரொம்ப நன்றியையும் உங்களுக்கு சொல்ல சொன்னாங்க.அட்மின் அவங்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி என்று சொல்ல சொன்னாங்க. இந்த அருசுவையினால் எவ்வளவு நல்ல விஷயம், தகவலகளையும் நமக்கு உடனேயே கிடைக்கிறது மேலும் யாருக்காவது இதை மாதிரி தெரிந்தோ அல்லது கேள்விபட்டுஇருந்தாலே தயவு செய்து சொல்லுங்க ரொம்ப நன்றி அஸியா, மாழியா,ஸாதிகா. அவங்களுக்கு ஒரே மனது ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று என்னிடம் சொன்னாங்க.
நன்றி அருசுவைக்கு.

என் பெயர் ஆசியா. ஒகே . நன்றி எல்லாம் தேவைஇல்லைமா. எனக்கு தெரிந்ததை நான் உங்களுடன் பகிர்ந்துக்கொன்டேன். அவங்களை டென்சன் இல்லாமல் ரிலாக்ஸ்டா இருக்க சொல்லுங்க. best wishes.

ASIA M.S.
PEACE BE ON EARTH

hhijk

கர்ப்ப மாத்திரைகளின் கெடுதல் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் ஏன் என்றால் என் தோழி இன்று மிகவும் வேதனைகுள்ளாகி இருக்காள். இங்கு கர்ப்பமாத்திரை விடாமல் சாப்பிட்டு இப்ப அவளுக்கு ப்ரியட்ஸ் வராமல் நல்ல உடம்பு பெருத்து போகி அவளுக்கு ஒன்றும் புரியாமல் டாக்டரிடம் போய் கேட்டு இருக்கிறாள், அதற்க்கு டாக்டர் சொன்னது என்ன என்றால் இந்த மாத்திரை நிங்க சாப்பிடும் போதே சொன்னேன்.இதை நிறுத்தி விட்டால் இது இப்படி தான் இருக்கும் என்று, இதற்க்கு இப்படிதான் என்று பிறகு சரியாகிவிடும் ஆனால் இப்ப என் தோழிக்கு குழந்தை வேண்டும் என்று மாத்திரை சாப்பிடுவதே நிறுத்தி விட்டாள் ஆனால் இன்னும் அவளுக்கு பிரியட்ஸ் வரல்ல ஒரே குழப்பமாகி தவித்து கொண்டு இருக்காள், அத்னால் நான் உங்களிடம் இதற்க்கு விளக்கமா பதிவை எதிர்பார்க்கிறேன். முடிந்தால்/தெரிந்தால் சொன்னால் ரொம்ப யூஸ்புள் ஆ இருக்கும் ( கல்யானாமாகி 4 வருடமாகிறது) வயது 33 க்கு குறைவாக.

எனக்கு இந்த கெடுதல் விஷயம் எல்லாம் தெரியாது... ஆனா.. இந்த மாத்திரைகள் எல்லாமே நம் ஹார்மோன்களை ஆல்டர் செய்கிரது. எடை கூடும் ஆனால் பீரியட்ஸ் வராது... ஏன்னா எடை கூடும் போது நாம் இன்னும் நம்ம ஹார்மோன் என்ஞ்ஜினை வேலை செய்ய்ய வைக்கிறோம்.. நல்ல வழியில் இல்லை... சிலருக்கு இந்த மாத்திரைகளின் தாக்கம் ஒரு வருடத்துக்கு கூட இருக்கும்... ஆனா எடை குறைந்தால் பீரியட்ஸ் வரும்.. இது ஒரு "கேட்ச் 22" நிலமை... உடனடியாக நல்ல டாக்டரிடம் காமிக்க சொல்லுங்க... அவங்க ப்ரோவேரா குடுப்பாங்க.... அதிலும் வேலை செய்யலைன்னா... இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் கம்மி செய்ய மருந்து தருவாங்க... மெட்பார்மின் இல்லைன்னா குளுக்கோபாஜ் ..

இதெல்லாம் நல்லா வேலை செய்யனுமின்னா.... ஒரு 3 வாரம் அரிசி சாப்பிடாம வெரும் காய்கறி பழம்.. ஹோல்கிறயின்ஸ் சாப்பிட்டால் பலன் இருக்கும்... யு எஸ் ல இருந்தா... நல்ல ஒரு மீல் சலடும் ஒரு மீல் வேகவைத்த காய்கறி மற்றும் ஒரு ப்ரொடின்... காலையில் ப்ரொடின் ஷேக் இல்லைன்னா முட்டை மற்றும் பழம் சாப்பிட சொல்லுங்க... சீரியல் பிடிக்கும்ன்னா கெல்லாக் ஆல்ல் ப்ரான் (Kellog all bran has the highest fiber ) பாலுடன் சாப்பிட்டு ஒரு பழம் சாப்பிட சொல்லுங்க... இல்லை.. எனக்கு இப்படி நானே ட்யட்ல இருக்க முடியலைன்னா.. நியுட்ரி சிஸ்டம் வெஜ் ஒரு மாசம் சாப்பிட்டால் கண்டிப்பா எடை குறையும்.. எடை குறைந்தால் எல்லாம் சரி ஆகும்.....

இது எல்லாம் இல்லாம ஒரு கல்ப்ரிட் இருக்கு... அது தைராய்ட்... இதை பத்தி ஒரு த்ரெட்ல சொல்லி இருக்கேன்ன்.... இங்க நீங்களே தான் டாக்டரிடம் சொல்லனும்... டெஸ்ட் பண்ணி பார்பதில் தவறில்லை... என்ன ஒரு கோபே(co-pay) குடுக்கனும்.. இப்படி எல்லாம் நாமா பலவற்றை ஜகிள் பண்ணும் போது ரொம்ப மன அழுத்தம் அதிகமாக இருக்கும்... க்ர்வெஸ் மாதிரி பெண்கள் ஜிம்முக்கு போனால் ஒரு அவுட்லெடாக இருக்கு... கண்டிப்பா உடல்பயிற்சி நல்ல பலன் அளிக்கும்....

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

என்னால் அருசுவைக்கு வரஏ முடியல ஆனாலும் முடியுறப்ப பதிவை மட்டும் பார்ப்ப்பேன் அப்ப பார்த்ததுதான் உங்க பதிவு அய்யோ விஜி டேப்லட் ரொம்ப டேஞ்சர்மா ஆரம்பத்தில் இதை பரற்றிலாம் டாக்டரிடம் கேட்டேன் எனக்கு தெரிஞ்சு மாத்திரை ரொம்ப ,ரொம்ப கெடுதியானது..உடம்பும் பல மடங்கு ஏறும்..பிற்காலத்தில் சைட் எபக்ட் உண்டு பண்ணும் எல்லாம் கன்சல் பண்ணிட்டு முடிவெடுத்து இருக்கலாம்..ஊசியும் சிலர் போடுவார்கள் அது இதுக்கு அடுத்தபடியாக கெடுதல் உண்டாக்க கூடியது ஆனா மாத்திரை ரொம்பவே டேஞ்சர்..ஊசிக்கும் எடை போடும் பிரீயட்ஸ் பிராப்லம் வரும்..எனக்கு என் ஸ்னேகிதி ஊசியை சிபாரிசு செய்தா..ஆனா நானும் இவரும் விரும்ப வில்லை..விட்டு விட்டோம் ஆனா இதை உபயோகித்த என் தோழியோ பிறகாலத்தில் குழந்தைக்கு ஆசை பட்டு விட்டுவிட்டாள் ஆனால் ரெகுலர் பிரீயட்ஸ் வராமல் போனது உடம்பு ஏறியது குழந்தைக்கு எவ்லவோ ஆசை பட்டும் அது நடக்கல ஒரு வலியா டாக்டர்ட்ட டிரீட்மெண்ட் எடுத்து குழந்தை பெற்று கொண்டாள்..நீங்கள் உங்க பிர?ண்டை உடனே நல்ல டாக்டரை அனுக சொல்லுங்க பலன் கிடைக்கும் இனி இப்படி ஏதும் உபயோக்க வேணாம்னு சொல்லிடுங்க(ஊசி,மாத்திரை)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நீங்க சொல்லி இருக்கும் டாக்டரை நானும் கேள்வி பட்டென் எனக்கும் சிலர் சொன்னாங்க அவங்க அற்றஸை சைட்டில் தேடினப்ப அவங்களின் பற்றி பலர் கமெண்ட் செய்து இருந்தங்க அப்ப ஒரு சிலர் மட்டுமே குட் ந்னு சொல்ல்லி இருக்கான்ங்களே தவிர மர்றவர்கள் அனைவரும் தவறாகவே சொல்லி இருந்தனர்..அதனாலயே போகாமல் தவிர்த்தேன்..சாதிகாலாத்தா நீங்க போய் இருக்கின்றீர்களா?எப்படி அந்த டாக்டர்?

மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்