வெளிநாட்டில் வாழும் தோழிகள் அனைவருக்கும்

ஹாய் அறுசுவை தோழியர் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். நான் அறுசுவைக்கு வந்தே
ரொம்ப நாள் ஆகுது எல்லாரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப நாள் கழிச்சு தளத்தில் பங்கு
கொள்கிறேன், இந்தியாவில் பிறந்து பிறகு வெளிநாடுகளில் வாழும் தோழியர்களிடம் நான் கேட்க
நினைப்பது. நீங்கள் அனைவரும் வேறு வழியின்றி சொந்தம் பந்தங்களை பிரிந்து எப்படி
வெளிநாடுகளில் வசிக்க முடிந்தது. இதனால் உங்கள் மனநிலை எந்த அளவுக்கு பதிப்புக்கு
உள்ளாகின்றன. புது இடம், புதிய பழக்க வழக்கம் இதை எப்படி ஏற்று கொள்ள முடிந்தது,
யாரையும் நமக்கு தெரியாது மிக முக்கியம் மொழி பிரச்சனை இதை ஒவ்வொவரும் எப்படியெல்லாம் சமாளித்தீர்கள். தாய் வயிற்றில் பிறந்த உடனே நமக்கு ஒன்றும் தெரியாதது போல் ஓர் உணர்வு நமக்குள் தோன்றாதா? அழுகை வரும்:-( இந்த சமயங்களில் நீங்கள் உங்களை எப்படி பக்குவபடுத்திக் கொண்டீர்கள். உங்கள் கணவரை எந்த அளவுக்கு தொல்லை கொடுத்திருப்பீர்கள். முதலில் ஒரே சந்தோஷமாக தான் இருக்கும் ஆஹா நம்மலும் வெளிநாடு போறோம் jolly........ அதன் பிறகு தான் இருக்கு நமக்கு ஆப்பூ அதை பற்றி இப்போது பகிர்ந்துக் கொள்ளுங்கள் தோழிகளே.... வெளிநாடு செல்பவர்கள் precaution என்ன செய்ய வேண்டும், எது எல்லாம் எடுத்து செல்ல வேண்டும், எப்படி எல்லாம் மற்றவர்களிடம் பழக வேண்டும், நீங்கள் எல்லோரும் பகிர்ந்து கொள்வது மூலம் மற்றவர்களும் பயம் எதுவும் இன்றி செல்வதுக்கு ஒரு guidance ஆக இருக்கும். ஒவ்வொரு வரும் வந்து உங்கள் அனுபவங்களை கூறிவிட்டு செல்லுங்கள்.

ஹாய் தீபா,
இதுவும் ஒரு நல்ல தைலைப்புதான். பிரசவ அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரி இருப்பதுபோல், இதுவும் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு இடத்திற்கும் மாறுபடும்.

என்னைப்பொறுத்து , நான் தனிமையையும் இனிமையாக போக்கிவிடுவேன், சும்மா நித்திரை கொள்வதில்லை, ஏதோ ஒன்றில் என்னை ஈடுபடுத்திக்கொள்வேன். அதனால் எனக்கு தனிமை என்பதும் வெறுக்காத ஒன்று. ஆனால் புது இடம் திடீரென சொந்தங்களைப் பிரிந்து வரும்போது எப்படியும் ஒரு தாக்கம் இருக்கவே செய்யும்.

நான் வந்த நேரம், எங்களிடத்தில் மருந்துக்குக் கூட தமிழர்கள் இல்லை. ஏன் இந்திய இலங்கையர் கூட கண்ணுக்குத் தெரியவில்லை. மோல்களில் எப்போதாவது ஒருவர் நம்மவர்போல் தெரிந்தால் கொஞ்சதூரம் பின்னாலேயே போய்ப் பார்ப்பேன்.

தனிமையைப் போக்க என் கணவர் எனக்குச் சொன்னது, எதைப்பற்றியும் யோசிக்க வேண்டாம், எந்த நாட்டுக்கு போனில் கதைக்கபோகிறீர்களோ அங்கெல்லாம் கதையுங்கள், அப்போ தனிமை தெரியாது என்பதுதான், மற்றது தமிழ் தொலைக்காட்சி எடுத்தோம். அதைவிட அவரும் அடிக்கடி போன் பண்ணுவார். வேலை முடிகிறபோது சொல்வார் வரப்போகிறேன் வெளிக்கிட்டு நில்லுங்கள் வெளியே போவோம் என்று. பெரும்பாலும் 7 நாட்களும் நாங்கள் வெளியே போகாமல் விட்டதில்லை. கடைசி காரில் ஏறி ஊரைச் சுற்றிக்கொண்டு வருவோம். பின்னர் அப்பா, அம்மா, மாமா,மாமி இப்படி மாறி மாறிக் கூப்பிட்டோம்..... அப்படியே எல்லாமே பழகிவிட்டது.

என்னைப்பொறுத்து, வெளிநாட்டுக்குப் போகிறோம், அங்கே விலை அதிகமாக இருக்கலாம், என்றெல்லாம் நினைத்து கண்டதையும் கொண்டுபோகக்கூடாது. முதலில் அங்கு என்ன தட்டுப்பாடு, அதாவது எமக்கு தேவையானது கிடைக்காது என கேட்டறிந்து அதனைக் கொண்டுபோகலாம். உடைகள் அதிகம் கொண்டுபோவது நல்லதல்ல, ஏனெனில் அங்கு போனபின்னர்தான் அங்குள்ள ஸ்ரைல் எமக்குத் தெரியும், அதன் பின்னர் வாங்கலாம்.

நான் கூட எதையுமே விட மனமில்லாமல் எல்லாம் வேண்டும் எனச் சொல்லி ஸ்சிப்பில் பொருட்கள் போட்டோம். அங்கும் கட்டி இங்கும் பணம் கட்டி, கடைசியில் வருடக்காணக்காக இடம்பிடிக்கிறதே என்று சறட்டிக்கும், காபேஜ்சுக்கும் போட்டதுதான். அதற்கு கட்டிய பணத்திற்கே மிகவும் திறமாக இங்கே வாங்கியிருக்கலாம்.

ஆரம்பகாலத்தில் எந்தப்பொருள் வாங்கினாலும், உடனே மனம் கரன்சியைத்தான் எங்கள் நாட்டு ரூபாய் எவ்வளவு ஆகும் எனக்கணக்கு பார்த்து ஐயையோ வேண்டாம் என நினைப்போம், இப்படி எனக்கும் நடந்திருக்கிறது நான் பார்த்து விட்டு பணத்தை மாற்றிப் பார்த்து விட்டுவிடுவேன், ஆனால் அடுத்தநாளே கணவர் வாங்கி வந்துவிடுவார், அவர் சொல்வார், நன்கு பிடித்தால் வாங்குங்கள் கணக்குப் பார்க்க வேண்டாம் என்று. ஆனால் நாளடைவில் எல்லாம் மறந்து போச்சு. இப்ப மாற்றிக் கணக்கே பார்ப்பதில்லை. ஊரோடு ஒத்தோடப் பழகிக்கொண்டேன்.

இன்னுமொன்று எந்நேரமும் வீட்டிலேயே அடைந்து இருக்காமல், வெளியில் நிற்கவேண்டும், வேறு இனத்தவராயினும் பாஷை தெரியாவிடினும் சிரிக்க வேண்டும், மெல்ல மெல்ல பாஷையும் வந்துவிடும், தனிமையும் போய்விடும். எல்லோரும் மனிதர்கள் தானே. எல்லாமே பழக்கப்பட்டுவிடும்.

ஆனால் என்னதான் இருந்தாலும் எங்கள் நாட்டுச் சாப்பாட்டுச் சுவைதான் இன்னும் மறக்கமுடியவில்லை. பெரிதாக வேண்டாம் ஊரில் ஒரு சாதாரண தேனீர்க்கடையில் போய் , ஒரு பிளேன் ரீயும், உளுந்து வடையும் சாப்பிடும்போது ஏற்படும் சந்தோசம், இங்கே எந்த 5 ஸ்ரார் ஹோட்டலில் தேடினாலும் கிடைக்காது(என்னைப்பொறுத்து).அதுசரி, தீபா நீங்களும் டுபாயில் இருக்கிறீங்கள் உங்களது அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ளலாமே.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் தீபா,ரொம்ப நல்ல தலைப்பு.
நான் முதன்முதலில் இங்கு வரும் போது வேறு எதை பற்றியும் யோசிக்கவில்லை.கணவரோடு வருகிறொமே அந்த சந்தோஷம் மட்டும்தான்.ஏன்னா திருமணமாகி 4 மாதங்கள் கழித்துதான் இங்கு வந்தேன்.இங்கு வந்த பின்ட் ஹான் ஒவ்வொன்றாக தெரிந்து கொன்டேன்.
முதல் பிரச்சினை தனிமை.அப்பா அம்மா அண்ணான்னு குடும்பத்தோட இருந்துட்டு இங்கே தனியா இருக்கும்போது கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது.அதிரா சொன்ன மாதிரி தனிமை என்னை பாதிகாத மாதிரி பார்த்துகிட்டேன்.தமிழ் ரேடியோ கேட்பது அப்புறம் டீவி ஏதாவது கைவேலைகள் அப்புறம் எல்லாத்துக்கும் மேல நாம நம்ம மனதை தயார் படுத்துக்கிறதுதான் முகியம்.தனிமை தனிமைன்னு நினைச்சுகிட்டு இருந்தாதான் கஷ்டம்.ஆஹா நம்ம கணவரோட தனிமையில் எவ்வளவு நேரம் செலவளிக்க முடிகிறது ஊரில் இது முடியுமான்னு பாசிட்டிவா யோசிச்சா தனிமை ஓடியே போயிடும்.
அப்புறம் அதிரா சொன்ன மாதிரி ஊரிலிருந்து வரும் போது அது வேணும் இது வேணும்னு எல்லாத்ஹையும் அள்ளிட்டு வராம தேவையானதை மட்டும் எடுத்து வந்தால் போதும்.இப்போது ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் எல்லா பொருட்களும் கிடைக்கும்.கிடைக்காததை மட்டும் கொன்டு சென்றால் பொதும்.உதாரணத்திற்கு பிரஷர் குக்கர்,இட்லி தட்டு,தோசைக்கல்(அந்த நாடுகளில் கிடைக்கும் கூட உபயோகிக்கலாம்)தோசை கரன்டி,இது போல எடுத்துகிட்டா போதும்.
தங்க நகைகள் எடுத்து செல்வதை கூடுமானவரை தவிர்த்து விடவேன்டும்.அதற்கு பதிலாக இமிட்டேஷன் நகைகள் எடுத்து செல்லலாம்.அதுதான் பாதுகாப்பு.

எனக்கு அத்கம் பிரச்சினை கொடுத்தது மொழிதான்.ஏன்னா இங்கு ஆங்கிலம் பேச தெரிந்தவர்களை பார்ப்பதே கஷ்டம்.எல்லாரும் பஹாசா இந்தோனேஷியாதான் பேசுவார்கள்.முதலில் என்னுடைய மெய்ட் உடன் சைகையில் தன் பேசுவேன்.இப்போது நினைத்டால் சிரிப்பாக இருக்கிறது.மலாய் பேசுவது எப்படீன்னு ஒரு புக் வாங்கினேன்.(மலாயும் பஹாசா இந்தோனேஷியாவும் ஏறதாழ ஒரேமாதிதான் இருக்கும்) ஆனால் கதைக்கு உதவவில்லை.புக் ஷாப்பில் போய் ஒரு ஆங்கிலம் பஹாச இந்தோனேஷியா டிக்ஷ்னரி வாங்கினேன்.தினமும் பத்து வார்த்தைகள் வைத்து படித்து தப்பானாலும் பரவாயில்லை கூச்சப்படமல் எல்லாரிடமும் பேசுவேன்.முக்கியமாக மெய்ட் இடம் பேசித்தானே ஆக வேன்டும். இப்போது நன்றாகவே பேச கற்றுகொன்டேன்.
அப்புறம் கன்டிப்பாக டிரைவிங் கற்று கொள்ளவேன்டும் இல்லையென்றால் எலாவற்றிற்கும் கணவரை எதிபார்த்து இருக்க வேன்டும்.சிங்கபூர் போன்ற நாடுகளில் அவசியமில்லை.பஸ் ட்ரெயினில் செல்வதுதான் பெஸ்ட்.இன்னும் ஏதாவது ஞாபகம் வந்தால் எழுதுகிறேன். நீங்களும் உங்க அனுபவங்களை எழுதுங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி நீங்க எங்கு இந்தோனேஷியாவில் இருக்கிங்க,நானும் இங்கு தான்.

ஹாய் ரமணி நான் பத்தாம் அப்படீங்கற ஐலேன்டில் இருக்கிறேன்.நீங்க?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நான் ஜகர்தாவில் இருக்கிறேன்,எனக்கும் ஒரு பையன் தான். விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றிக் கூறவும். அன்புடன் ரமணி

ஹலோ தீபா,

ரொம்ப நல்ல தலைப்பு,நான் துபாய் வந்து 6 மாதம்தான் ஆகிறது. வந்த புதிதில் மிகவும் கஷ்டபட்டேன். என் குழந்தை அfப்ராவிற்கு 4 மாதம்தான் அப்போது. வந்து ஒரு வாரம் ரொம்ப அழுதுட்டே இருந்தா. இவர் வேலைக்கு போயிடுவார்.அப்போ மாமனார் கூட இருந்தார். அம்மாவுக்கு போன் போட்டு ஒரே அழுகைதான். என்னவர் தினமும் எங்காவது அழைத்து போய் விடுவார். பாஷையும் தெரியாது. இங்கு ஹிந்திதான் மெயின். ஒரு சிலருக்கு ஆங்கிலத்தில் பேசினாலும் அந்த அளவுக்கு புரியாது.மலையாளி நிறைய பேர் இருக்காங்க. நம்ம தமிழ் பேசுபவர்களே இருந்தாலும் நம்மள கண்டுக்க மாட்டாங்க.இங்கு மாக்ஸிமம் ஷேரிங்லதான் (அதாவது ஒரே வீடு 2 பேமிலி இருப்பாங்க) என் கணவர் ஷாரிங் வேண்டாம் நம்ம ப்ரைவஸி போய்விடும் என்று ஓன்பிளாட் எடுத்து விட்டார் எங்க பிளாட்டில் எனக்கு எதில் வீடு தெலுங்கு, கதவை திறக்கும் போது எதிர்பட்டால், நாம் சிரித்தால் கூட பட்டும்படாமல் சிரிப்பார்கள்.

வேதனையாக இருக்கும் நம்நாட்டு மக்களே இப்படி இருக்காங்களே என்று. என் மாமனாரும் விசிட் முடிந்து போய் விட்டார். ரொம்ப தனிமை. என்னவரை ரொம்ப படுத்திவிட்டேன். டிஷ் கனெக்ஷன் கொடுத்தார். எவ்வளோ நேரம்தான் டிவி பார்ப்பது. பேச்சு துணைக்கு ஒருவர் கிடையாது. ஒரு பேமிலியை அறிமுகபடுத்தி வைத்தார் என்னவர். அவர்களும் எப்போதாவது வருவார்கள். ஆபிஸ் முடிந்து வரும் கணவர் என்முக வாட்டத்தைக் கண்டு மிகவும் வருந்துவார்.

நெட் கனைக்ஷென் கொடுத்தார்.எப்பவுமே சந்தோஷமா இருக்கனும் அதுதான் எனக்கு வேனும் என்பார். என்னோட சந்தோஷத்திற்காக நான் கேட்டதெல்லாம் செய்வார். எங்க பொண்ணும் ரொம்ப ஆக்டிவா விளையாட ஆரம்பிச்சுட்டா. அப்புறம் வீட்டு வேலை அப்படியே பிடிச்சு போச்சு. இப்போ தமில் பேமிலி ஒருத்தங்க பழக்கமாயிட்டாங்க. அவங்க அடிக்கடி வருவாங்க. அவங்க் ஷாரிங்லதான் இருக்காங்க.

நானும் அதிரா மாதிரிதான்.ஆரம்பகாலத்தில் எந்தப்பொருள் வாங்கினாலும், உடனே மனம் இது நம்ம நாட்டு ரூபாய்க்கு எவ்வளவு ஆகும் எனக்கணக்கு போட்டு பார்த்து ஐயையோ வேண்டாம் என தடுத்துவிடுவேன்,ஆனால் என்கனவர் அப்படி கணக்கு பார்த்தால் இங்கு ஒரு டீ கூட குடிக்க முடியாது என்பார். எனக்கும் இப்போ பழகி விட்டது.

ஊரில் இருந்து வரும் போது நம்ம ஊர் மசாலா (மல்லி,காய்ந்த மிளகாய், சீரகம்,சோம்பு, மஞ்சல்) அரைத்து கொண்டு வந்திருங்க. புளி இங்கு அவ்வளவாக சுவையில்லை. புளி, அப்பளக்கட்டு, எடுத்துட்டு வாங்க. மத்தபடி எல்லாமே இங்க கிடைக்கும்.சுடிதார் நம் ஊரிலே எடுத்து தைத்து கொண்டு வாருங்கள்.கணவர் அன்பா நம்மை பார்த்துக் கொண்டால் தனிமை இனிமையாகி விடும் தீபா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய்
ராமர் இருக்கும் இடம் சீதைக்கு அயோதி. அதனால் எல்லாதையும் விட்டுக்கொடுக்க வேண்டிய்ள்ளது. அம்மா, அப்பா , சொந்தம் பந்தங்களை பிரிந்து வெளிநாடுகளில் இருக்க வேண்டிய்ள்ளது , முதலில் எல்லாமே கஷ்டமாகத்தான் இருந்தது போகபோக அதுவே பழகிவிட்டது . இங்கு மொழி பிரசனை இல்லை அதனால் ஒன்றும் கஸ்டமகயில்லை. தனிமையையும் இனிமையாக இருக்கும் . நம் நாடில் இருந்தாலும் பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாது., அதை பார்க்கும் போது இது எவ்வளவே தேவளை போல் இருக்கு. மொழி பிரசனை நம் ஊரை விட்டு வோரு மாநிலத்துக்கு போனால் கூட கஷ்டம்தான்
இருக்கும் இடத்தில் நண்பர்களை உருவாக்கி கொண்டால் எல்லாமே இனிமையாகி விடும் எலாரும் மனிதர்கள் தானே .
என்னவர் நேரம் கிடைக்கும் போது எல்லாம் எங்களே வெளியில் அலைத்து போவர் , அதிரா சொன்னது போல் பெரும்பாலும் 7 நாட்களும் நாங்கள் வெளியே போகாமல் விட்டதில்லை , இப்பேது தனிமையே இனிமை ஆகிவிட்டது . ஆனாலும் ஊருக்கு போனால் அங்கு இருக்கும் சூழ்நிலையும் ரசிக்கும் படியுள்ளது. இங்கு வந்தால் இங்கு இருப்பதுபோல் மாறி விடவேண்டும். மறங்கள் நிறைந்தது தான் வாழ்கை. வழா கற்று கோல்லவேண்டும்
நேரம் கிடைய்கும் போது எல்லாம் எதாவது கைவினை பொருகள் செய்ய பழகி கோள்வேன் அதனால் தனிமையையும் இனிமையாக உள்ளது ..:).
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

உங்கள் அனைவரிடமும் முதல் முறையாக பேசுகிறேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீங்கள் கொடுத்த பதில் புதிதாக வெளிநாடுகளுக்கு செல்லும் சகோதரிகளுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் போகும் போது இது போல் தெரிந்து கொள்ள முடியவில்லை. அப்போது அறுசுவை என்ற இணையதளம் இருக்கிறது என்று அதில் நிறைய அன்பான தோழிகள் இருப்பார்கள் என்று எனக்கு தெரிய வில்லை. பிறகு என் தோழி மூலமாக அறுசுவையை தெரிந்துக் கொண்டேன் இப்படி ஒரு நல்ல தளத்தையும் நல்ல தோழிகளையும் அறிமுக படுத்தி வைத்ததற்கு முக்கியமாக அட்மின் அண்ணாவுக்கு ரொம்ப நன்றி. முதன் முறையாக அனைவரையும் பிரிந்து செல்வது ரொம்ப கஷ்டம். அப்போது ரோஜா படத்தில் வரும் மதுபாலா ஞாபகதுக்கு வருவாங்க. என் கணவர் மீது மிகவும் கோபம் வரும் என்னை என் குடும்பத்தில் இருந்து பிரித்து கொண்டுவந்து விட்டிர்களே. பாவம் என் கணவர் ரொம்பவும் கஷ்ட படித்தினேன். என்னை என் கணவர் ரொம்ப சந்தோஷமாக ஒரு கஷ்டம் இல்லாமல் இன்னைக்கு வரைக்கும் நல்லா வச்சிருக்காங்க. நான் சென்று, அங்கு இருக்கும் இடங்களை தெரிந்துக் கொள்வதற்கு முன்பே வந்துவிட்டேன். ஆனால்
இப்போது நிலமை அப்படியே மாறிவிட்டது. 5 மாதங்களுக்கு பிறகு நான் துபாயில் இருந்து இந்தியா
வந்து விட்டேன். இப்போது நானும் என் கணவரும் தனிதனியாக பிரிந்து இருக்கிறோம் இதுதான்
எனக்கு ரொம்ப கொடுமையாக இருக்குது. இப்போது என் நிலமை இப்படி ஆயிடுச்சு:-( எல்லாம்
கொஞ்ச நாளைக்கு தான் பரவாயில்லை என்று மனதை தேத்திக் கொள்கிறேன். என்ன செய்வது ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

எப்படி இருக்கீங்க? ரொம்ப சரியா சொன்னிங்கப்பா. ராமர் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோதி ok. மிகவும் முக்கியம் சாப்பாடு, அந்த விசயத்தில் எப்படி உங்களுக்கு ஒத்துக் கொண்டதா?

அன்புடன்
தீபா

ஹாசினி சொன்னதுபோல வோறொரு மாநிலத்திற்கு வந்தாலும் மொழி பிரச்சனைஇருக்கிறது நான் மத்தியபிரதேசத்தில் இருக்கிறேன், ஹிந்தி சுத்தமா தெரியாது என் கணவர் கால்நடை மருத்துவர் அவருடையது மொபைல் கிளினிக் அதனால அவர் எப்ப இருப்பார் எப்ப போவார் என்று சொல்லவெ முடியாது, வந்த புதிதில் அம்மாவுக்கு போன் செய்து ஒரே அழுகை போன் பில் எகிறும் ஆனால் இப்போ ஓரளவு ஹிந்தி கத்துக்கிட்டேன், அதுவுமில்லாமல் இப்போ என் பையனிடம் இருப்பதிற்கே நேரம் போதவில்லை எல்லாம் போக போக சரியாகிவிடும்.

மேலும் சில பதிவுகள்