அனுபவம் உள்ளவர்களே

எங்கள் வீட்டில் அடுத்த வாரம் ப்ரேயர் உள்ளது. ஒரு 15பேருக்கு மேல் வருவார்கள், விசயம் என்னவென்றால் இத்தனை பேருக்கும் நாதான் சமைக்குனும், நான் இருப்பது மத்தியப்பிரதேசத்தில் பக்கத்தில் யாரும் நம்ம ஊர்க்கார்கல் யாரும் இல்லை வருபவர்கள் அனைவரும் ஆந்திரா அதனால் நான் பிரியாணியும்,சிக்கன் ப்ரை செய்யலாம் என்று இருக்கிரேன் அளவு தெரியாது, இவ்வளவு பேருக்கு சமைத்தில்லை அதனால் அனுபவம் உள்ளவர்கள் அளவு சொன்னால் நன்றாக இருக்கும் ப்ளீஸ்.

கவி 15நபர்களுக்கு 3கிலோ பாஸ்மதி தாராளமாக போதும்.இதற்கு 3 - 4 கிலோ இறைச்சி தேவை.1கிலோ அரிசியில் பிரியாணி செய்ய 400கிராம் தக்காளி,500கிராம் வெங்காயம் தேவை.எண்ணெய்,நெய் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம்.
சிக்கன் பிரை செய்ய நான்கு கிலோ பிராய்லர் கோழி போதும்.ரம்ஜான் பக்ரீத் காலங்களில் நண்பர்களுக்கு கொடுக்க நான் 8கிலோ வரை செய்துள்ளேன்.
அதிகமாக செய்யும் பொழுது சாதத்தை தனியாக வடித்து,கிரேவியில் கலந்து தம்மில் போட்டால்.நன்றாக வரும்.எப்படி வருமோ என தயங்கவும் தேவை இல்லை.
ஸாதிகா

arusuvai is a wonderful website

தம்மில் போடுவெதென்றால் எப்படி, எவ்வளவு
நேரம் போட வேண்டும்

மேலும் சில பதிவுகள்