நீயா?நானா?

விஜய் டிவி யில் இன்று 27.7.2008 நீயா நானா புரோகிராமில் குண்டானவர்களுக்கும் ஒல்லியானவர்களுக்கும் நடந்த அரட்டை.மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.சில சமயம் ஜாலியாக,பல சமயம் கருத்து மிக்கவையாக,சிந்திக்க தூண்டுவதாக உலா வரும் ஒரு அருமையான நிகழ்ச்சி.
வருடக் கணக்கில் நம்மை எல்லாம் இளிச்சவாயர்களாக நினைத்து லாஜிக்கே இல்லாமல்,ஜவ்வு மாதிரி இழுத்தடித்து திடுமென ஒரே நாளில் கதையை முடிக்கும் தாயாரிப்பாளர்கள்,
தேவை இல்லாமல் புகுத்திய பல்வேறு கேரக்டர்களைப் பற்றி எதுவுமே சொல்லாமல் படீர் என தொடரை முடித்து பார்ப்பவரை முட்டாளாக்கும் ஸீரியல் களை பார்ப்பதை விட இது போல டாக் ஷோ நிகழ்ச்சிகளை பார்த்து ஸ்னேகிதிகள் பயனுற வேண்டும்.
ஸாதிகா

சாதிகா, நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ. நான் சீரியல் பக்கம் தலை வைத்துக் கூட படுப்பதில்லை. என் பெண் பார்க்கும் ஒரே சீரியல் 'கனவுகள் காணும் வயசாச்சுன்னு' பாட்டு வருமே அது மட்டும். நானும் சில சமயம் அது மட்டும் பார்ப்பேன்.
மற்றபடி நான் கண்டிப்பாகப் பார்ப்பது 'நீயா நானா'.
அப்புறம் சிரிக்காதீங்க - தினமும் காலையில் 730க்கு சுட்டி டீவியில் வரும் 'அபி எபி' பார்ப்பேன். இன்று ஒரு பெரிய நீர்வீழ்ச்சி அதன் அருகில் நிறைய பறவைகள். தூக்கணாங்குருவிபோல் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு. என்ன அழகாக இருந்தது தெரியுமா?
அப்புறம் ஆஸ்திரேலியா டீவியில் 'ரெஸ்க்யூ' என்று ஒரு நிகழ்ச்சி.
என் பெண் ஒரு 'அனிமல் லவர்' அதனால் தேடித் தேடிப் பார்ப்பாள்.
நகைச்சுவை நிகழ்ச்சிகள் பார்ப்பேன்.
நேற்று 'ராஜ ராஜ சோழன்' படம் பார்த்தேன். என் பெண்ணும், பையனும் விரும்பிப் பார்த்தார்கள். நடிகை லட்சுமியின் நடிப்பும் சூப்பர். என் பெண் சொன்னாள். 'இது போன்ற கதாபாத்திரத்தில் ஜொலிக்க சிவாஜியை விட்டா ஆள் இல்லை'
மாலை ' இம்சை அரசன் 23ம் புலிகேசி' பார்த்தேன்.
வரவர ஒரே மாதிரி இருப்பதால் மானாட, மயிலாட கூட அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
டீவியில் நிறைய நல்ல நிகழ்ச்சிகள் வருகின்றன.
அன்னப் பறவைபோல் நாம்தான் இனம் பிரித்து பார்க்கவேண்டும்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஜெயந்தி மாமி..எப்படி இருக்கின்றீர்கள்?உங்கள் பதிவுகளிப் பார்க்கிறேன். கண்டிப்பாக உங்களுக்கு மெயில் அனுப்புகின்றேன். வயதில் சிறியவர்களுடன் நாம் பெரியவர்களாக உலா வருவதும்,நம்மை,மாமி,அக்கா,லாத்தா என உறவு முறை கூறி அன்புடன் அரட்டையில் கலந்து கொள்ளும் நம் அருமை தங்கை மார்களை நினைக்கும் பொழுது பெருமையாகவும்,சந்தோஷமாகவும் உள்ளது.
எனக்கு படம் பார்ப்பதென்றாலே போர்தான்.சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள்.கடைசியாகப் பார்த்த படம் பூவெல்லாம் உன் வாசம்.10ஆண்டுகள் ஆகி இருக்குமா?அதே போல் தொலைகாட்சியிலும் 3 மணிநேரம் அமர்ந்திருந்து படம் பார்ப்பதெனறால் எனக்கு அது பிரம்மிப்பான விஷயம்.என்னால் முடியாது.
சில ஆண்டுகளுக்கு முன் சேது படம் பார்க்க விரும்பி(எங்கள் ஊருக்கு பக்கத்து ஊரான ஏர்வாடி யை காட்டுகின்றார்கள்.என்ற காரணத்திற்காக) உட்கார்ந்தேன்.என்னால் அரைமணி நேரம் கூட உட்கார முடியவில்லை. இந்த படம் பார்க்கும் சமாச்சாரத்துக்கு மட்டும் என்னால் நேரத்தை செலவிட கஷ்டமாக இருக்கும்.
வீட்டில் பிறரின் உணர்வுகளை மதித்து டீவி.விசிடி.கேபிள் இணைப்பு இருந்தாலும் டீவி சப்தம் இல்லாத இல்லம் வேண்டும் என்பது என் ஆசை.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஊழலை பற்றி கடந்த வாரம் நடந்த நீயா?நானா? மிக மிக அருமையாக இருந்தது... அதில், ஸ்பெஷல் விருந்தினர்களாக வந்திருந்தவர்கள் முன் வைத்த கருத்துக்கள் நம் சிந்தனையை தூண்டும் வகையில் நன்றாக இருந்தது... அதுவும், "சத்யாக்ரஹா" அமைப்பின் ப்ரச்சாரம், மனதை தொட்டது... யாரேனும், இந்த "சத்யாக்ரஹா" அமைப்பின் contact details இருந்தா கொடுக்கவும்... நானும், முடிந்த வரையில், தேடி பார்த்து விட்டேன், ஆனால், சரியான தகவல்கள் இணையத்தில் கிடைக்கவில்லை...

கோபிநாத்-கு வாழ்த்துக்கள்... இன்னும் நிறையா இது போன்ற பயனுள்ள, சிந்தனை தூண்டும் வகையில், தலைப்புகளில் நீயா நானா நடத்த வேண்டும்...

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

நீயா நானா வில் சித்த வைத்தியம் பற்றி பேசினார்கள் யாரும் பாத்தீங்களா அந்னிகள்ச்சியை மறுஒளிபரப்பு செய்தால் நன்றாக இருக்கும் தெய்வனாயகம் பேசினார்

மேலும் சில பதிவுகள்