வெள்ளரிக்காய் சாம்பார்

தேதி: July 28, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெள்ளரிக்காய் - 1 பெரியது
வெங்காயம் - 1
தக்காளி - 1
துவரம் பருப்பு - 1 கப்
கடுகு - தாளிக்க
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு எற்ப
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு


 

தேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைத்துக் கொள்ளவும். வெள்ளரிக்காயின் தோல் மற்றும் விதைகளை நீக்கி பெரிய பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பை எடுத்துக்கொண்டு, மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் சீரகம் போடவும்.
அதன் பின்னர் நறுக்கின வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை சேர்த்து வதக்கவும்.
சுமார் மூன்று நிமிடம் வதங்கிய பிறகு அதில் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் , உப்பு சேர்க்கவும்.
வேக வைத்து எடுத்துள்ள துவரம் பருப்புடன் சிறிது தண்ணீர் விட்டு இதில் சேர்க்கவும். மேலும் 15 நிமிடம் வேக விடவும்.
பின்னர் அதில் கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும். இப்பொழுது சுவையான வெள்ளரிக்காய் சாம்பார் ரெடி. இதனை சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு சமைத்தால் இதில் மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள் சேர்க்காமல் 2 பச்சை மிளகாயை நீளமாக வெட்டி சேர்க்கவும்.
இந்த சுவையான சாம்பார் குறிப்பினை திருமதி. கீதா ஆச்சல் அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்காக மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக் குறிப்புகளாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

புது சுவையுடன் நன்றாக வந்தது

Be Good,Do Good

ஹாய் கீதா உங்க வெள்ளரிக்காய் சாம்பார் செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது.நான் கொஞ்சம் புளிகரைசல் சேர்த்து கொண்டேன்.இது போல வித்தியாசமான குறிப்புகள் கொடுக்கவும் நன்றி
அன்புடன் பிரதீபா

இப்பொழுது தான் பா நான் பார்த்தேன்.மிகவும் சந்தோசம் பிரதீபா , சஞ்சிதா. நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

tried ur dish today.. it came out well .. its simple and tastey... thank u...

nanriyudan