வெள்ளரி சாலட் & பாலக் தக்காளி தோசை

தேதி: July 28, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

சாலட் குறிப்பு மிகவும் எளிமையானதாகவும், குறைந்த படங்களுடனும் இருப்பதால், இரண்டு குறிப்புகளை சேர்த்து ஒன்றாக வெளியிடுகின்றோம். மற்றபடி வெள்ளரி சாலட்க்கும், தக்காளி தோசைக்கும் சம்பந்தம் எதுவுமில்லை. :-)

 

<b>வெள்ளரி சாலட் செய்ய தேவையானவை</b>
வெள்ளரிக்காய் - 2 (துருவியது)
முட்டைகோஸ் - 1 கப் (நீளமாக, மெல்லியதாக நறுக்கியது)
தக்காளி - பாதி
தயிர் - 1 மேசைக்கரண்டி
லெமன் சாறு - 1 தேக்கரண்டி
மிளகுதூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
சர்க்கரை - 1 சிட்டிகை
<b>தக்காளி தோசைக்கு தேவையானவை</b>
புழுங்கல் அரிசி - 2 கப்
உளுந்து - 2 மேசைக்கரண்டி
பாலக் கீரை - 1 கப்
தக்காளி - 3
காய்ந்த மிளகாய் - 6
சோம்பு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - 1 இன்ச் துண்டு
உப்பு - தேவையான அளவு
சமையல் சோடா - 2 பின்ச்
எண்ணெய் - 50 கிராம்
வெங்காயம் - 1
கருவேப்பிலை/மல்லி இலை - சிறிதளவு


 

வெள்ளரியை துருவி வைக்கவும். கோஸை சன்னமாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியின் விதை பாகத்தை நீக்கி விட்டு பொடியாக நறுக்கவும். தேவையான இதரப் பொருட்களை எடுத்து வைக்கவும்.
முதலில் வெள்ளரியை பரிமாறும் தட்டில் பரப்பி விடவும்.
நடுவில் நறுக்கின கோஸை வைத்து, எலுமிச்சை சாறை பிழியவும்.
பின்னர் தயிர், தக்காளியை விருப்பம் போல் வைக்கவும். அதன்பிறகு உப்பு, சர்க்கரை, மிளகுதூள் தூவி பரிமாறவும்.
மதிய வேளைகளில் உணவுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும். உடலிற்கு நல்லது. குளிர்ச்சியும் கூட. மற்றும் சோர்வாக இருக்கும் போதும் சாப்பிட்டால் எனெர்ஜிடிக்காகவும் நன்றாகவும் இருக்கும். தேவையென்றால் மல்லி இலை/புதினா தூவி விருப்பம்போல் அலங்கரித்துக் கொள்ளலாம்.
அரிசியைக் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், கீரையை பொடியாக நறுக்கி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும்.
அரிசியுடன் மிளகாய், சிறிது கருவேப்பிலை, சோம்பு, சீரகம், தக்காளி, உப்பு சேர்த்து கெட்டியாக, கரகரப்பாக அரைக்கவும். அதனுடன் சமையல் சோடா சேர்த்து கலந்து 4 மணி நேரம் அப்படியே வைத்து விடவும்.
தோசை சுடுவதற்கு முன் வெங்காயம், மல்லி/கருவேப்பிலை, பாலக் கீரை ஆகியவற்றை மாவுடன் சேர்த்து கலக்கவும்.
மாவை தோசைக்கல்லில் அடையைப் போல் சற்று தடிமனாக ஊற்றி, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
சுவையான பாலக் தக்காளி தோசை ரெடி. தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி, நன்றாக இருக்கும். இதில் காரதிற்கேற்றவாறு மிளகாயை கூட்டியோ, குறைத்தோ சேர்த்துக் கொள்ளவும்.இது செய்வதற்கு மிகவும் எளிது. அரிசி ஊறவைக்கும் மற்றும் மாவை புளிக்க வைக்கும் நேரம் மட்டுமே.
அறுசுவையில் மஹிஸ்ரீ என்ற பெயரில் சமையல் குறிப்புகள் வழங்கி வரும் திருமதி. ஸ்ரீகீதா மகேந்திரன் அவர்கள் வழங்கியுள்ள செய்முறை இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

உங்க சமையல் போலவே உங்க பிரசன்டேசனும் சூப்பரா இருக்கு,மாவு 4 மணி நேரம் வைச்சா போதுமா அதுக்குள்ள புளிச்சுடுமா.

இதில் தக்காளி சேர்ப்பதால் புளிக்க தேவையில்லை.சிறிது நேரம் Fermentation-க்காக வைத்திருந்தால் போதும். அரைத்தவுடனே செய்யாமல் சிறிது வைத்திருந்து செய்தால் மென்மையாகவும்,சுவை நன்றாகவும் இருக்கும்.

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

புழுங்கல் அரிசியில்தான் இந்தத் தோசை செய்ய வேண்டுமா? அல்லது தாய் ரைசில் செய்யலாமா? ஜபானில் புழுங்கல் அரிசி கிடைக்குமா என்று தெரியவில்லை.

அன்புடன் ரிகா

இந்த தோசை தாய் ரைஸிலும் செய்யலாம். அளவில் மாற்றம் செய்யத் தேவையில்லை.

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

dear geeta,
i have done your palak tomotto dosai it come very nice.
thanks for ur receipe.
femina

femina