என்னுடைய குழந்தை பிறந்து 45 நாட்கள் ஆகின்றன.அவளுடைய நாக்கில் வெள்ளை நிறத்தில் பால்
சேர்ந்துள்ளது.அதை கட்டாயமாக எடுத்தே ஆக வேடுமா ??இல்லை என்றால் பேச்சு சரியாக வராதா??தெரிந்தவர்கள் தயவு செய்து பதில் கூறவும்
என்னுடைய குழந்தை பிறந்து 45 நாட்கள் ஆகின்றன.அவளுடைய நாக்கில் வெள்ளை நிறத்தில் பால்
சேர்ந்துள்ளது.அதை கட்டாயமாக எடுத்தே ஆக வேடுமா ??இல்லை என்றால் பேச்சு சரியாக வராதா??தெரிந்தவர்கள் தயவு செய்து பதில் கூறவும்
ஹாய் ஜெய ஸ்ரீ,
ஹாய் ஜெய ஸ்ரீ,
முதலில் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.தினமும் குளிக்கவைப்பதற்க்கு முன்பும் மெல்லிய காட்டன் துணியால் நாக்கு மற்றும் ஈறுகளை சுத்தம் செய்யுங்கள்.இது குழந்தையின் ஆரோக்கியத்திற்க்கு நல்லது.நாம் சுத்தமாக வைத்துக்கொன்டால் சின்னசின்ன நோயிலிருந்து பாதுகாக்கலாம்,பேச்சுக்கும் இதற்க்கும் சம்மந்தம் இருக்கா என்று எனக்கு தெரியவில்லை.
அன்புடன்
சுதா
hi charunetha
thanks a lot for ur reply.i tried to insert the cloth into her mouth ....but she is crying.i cant bare this.how to clean her without making her to cry
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ
ஜெயஸ்ரீ
ஹாய் ஜெயஸ்ரீ என்னுடைய வாழ்த்துக்கள்.எனக்கு இன்னும் இந்த அனுபவம் இல்லாததால் உங்கள் கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லை.சுதா கூறியுள்ளார்கள் பாருங்கள் மற்றும் நம் மற்ற தோழிகளும் வந்து ஆலோசனை கூறுவார்கள்.நீங்களும் உங்கள் குழந்தையின் உடம்பையும் பார்த்து கொள்ளுங்கள்
அன்புடன் பிரதீபா
நாக்கில் உள்ள வெள்ளையை நீக்க
ஹாய் ஜெயஸ்ரீ, உங்க குட்டிப் பாப்பாவின் நாக்கில் வெண்மையான மாவுப் போல படிந்திருப்பதை நீக்க ஒரு மெல்லிய காட்டன் துணியில் ஒரு 2 சொட்டு நல்லெண்ணெய் தொட்டு அதனைக் கொண்டு மெல்ல நாக்கை வழிக்கவும். இதனால் குழந்தைக்கு வலிக்காது. என் பையனுக்கு நான் அப்படித்தான் செய்தேன். எங்க வீட்டில் எல்லா குழந்தைக்கும் அப்படித்தான் செய்வோம். அதனை நீக்காவிட்டால் குழந்தைக்கு பால் குடிக்க பிடிக்காது, டேஸ்ட் தெரியாது என்று சொல்வார்கள். அவர்களுக்கு எது நல்லதோ அதைத்தானே செய்கிறோம். அழுதாலும் செய்ய வேண்டியது நமது கடமைதானே. அதனால் மனசு கஷ்டப்படாம மென்மையாக செஞ்சுப் பாருங்க.