குழந்தைக்கு உணவு

எனது குழந்தைக்கு ஏழு மாதங்களாகிறது. குழந்தைக்கு திட கொடுத்து எவ்வளவு நேர இடைவெளி விட்டு அடுத்த உணவு கொடுக்க வேண்டும்? எவ்வளவு தண்ணீர் ஒரு நாளைக்கு கொடுக்க வேண்டும்.

உழைப்பின்றி ஊதியமில்லை

மணி

ஹாய் மணி, உங்கள் குழந்தைக்கு திட உணவு கொடுக்கும்போது மறக்காமல் அருகில் ஒரு டம்ளரில் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாய் உணவு, ஒரு வாய் தண்ணீர் என்று மாற்றி மாற்றி கொடுங்கள். வெறும் தண்ணீராக இல்லாமல் 4 காய்ந்த திராட்சையை பிய்த்துப் போட்டு அதில் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி மூடிவிடுங்கள். கொஞ்ச நேரம் கழித்து மூடியை திறந்து அந்த தண்ணீரை வடி கட்டி, ஆறவைத்து அதனை குழந்தைக்கு கொடுங்கள். ஜீரணக் கோளாறு இல்லாமலும், சளி பிடிக்காமலும் இருக்கும். குழந்தைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி. பொதுவாக மூன்று- நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை திட உணவு கொடுக்கலாம். குழந்தைக்கு சிறு வயதிலிருந்தே தண்ணீர் குடிக்க வைத்துப் பழகிவிட்டால் பிறகு நமக்கு தொல்லை இருக்காது. நிறைய தண்ணீர் குடிப்பது அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு சின்ன சிப்பரில் தண்ணீர் கொடுத்து பழக்குங்கள். இரண்டு மூன்று சிப் குடித்தால் கூட போதும். கொஞ்சமாக சிப்பரில் தண்ணீர் ஊற்றி விளையாடக்கூட கொடுக்கலாம். குழந்தைகள் அதனை கையில் ஊற்றி குடிக்க முற்படுவார்கள். பார்க்க நன்றாக இருக்கும். சத்து மாவு கொடுக்கும்போது தண்ணீர் நிறையவே கொடுங்கள். இல்லாவிட்டால் மலச்சிக்கல் (Constipation) வந்துவிடும்.

ஹலோ தேவா மேடம்,

எப்படியிருக்கீங்க? நான் உங்க கூட பேசுவது முதல் முறை. தங்கள் பதிவுகளைப் படித்துள்ளேன். தங்கள் குறிப்புக்கு மிகவும் நன்றி.

உழைப்பின்றி ஊதியமில்லை
Mani

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

மேலும் சில பதிவுகள்