யாராவது உதவுங்களேன்

ஹாய் ப்ரெண்ட்ஸ் என் ஹஸ்ஸுக்கு கழுத்து வலி என்று சொன்னார்கள். நானும் தைலம் தேய்த்தால் சரியாகிடும்னு நினைத்தேன்.ஆனால் ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வந்த பின்பு தான் தெரிந்தது கழுத்து திருப்பவே முடியலை நல்ல பிடித்து இருக்கு. என்ன செய்யன்னு எனக்கு தெரியலை அயோடெக்ஸ் தேய்துவிட்டேன் அப்படி இருந்தும் வலி தாங்க முடியலை கழுத்தை திருப்ப முடியலைன்னு சொல்றாங்க எனக்கு கவலையாக இருக்கு யாராவது தயவு செய்து உங்களுக்கு தெரிந்ததை சொல்லி எனக்கு உதவுங்களேன். உங்கள் பதிலை உடனே எதிர்பார்க்கிறேன்.

அன்புடன் கதீஜா.

இப்பதான் உங்க பதிவைப் பார்த்தேன்.
நல்ல சூடான தண்ணீரில் டர்க்கி டவலை முக்கி ஒத்தடம் கொடுத்துவிட்டு பிறகு 'மூவ்' இருந்தால் தடவுங்கள். இல்லாவிட்டால் அயோடெக்ஸையே தடவுங்கள். வாழ்க வளமுடன்
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஹாய் கதீஜா, உங்க பதிவைப் பார்த்ததுமே உடனே பதில் அடிக்க நினைச்சேன். ஆனால் என்னோட சிஸ்டத்தில் தமிழ் பாண்ட் சரியா வரல. என்னால வேலை நடுவில் சிஸ்டத்தை ஷட் டவுன் பண்ணி ரீஸ்டார்ட் பண்ண முடியல. அதனால இப்ப தமிழ் அச்சடிக்க உதவும் பக்கத்தில் டைப் அடிக்கறேன். கழுத்து வலி பல காரணத்தால வருது. தொடர்ந்து கம்ப்யூட்டர் பார்ப்பதால் கூட வரலாம். முதல் நாள் இரவு நல்ல தூக்கம் இல்லாட்டியும் வரும். இல்லாட்டி சாதாரண சுளுக்காவும் இருக்கும். என்கென்னவோ நீங்க சொல்றதைப் பார்த்தால் சுளுக்கா இருக்குமோன்னு தோணுது. வோவிரான் ஜெல் அல்லது மூவ் போல எதுவும் ஆயிண்மெண்ட் தடவி நல்லா ஹாட் வாட்டர் பேக் வெச்சு ஒத்தடம் கொடுத்து பாருங்க. பெயின் கில்லரும் எடுத்துக்கலாம். எதுக்கும் தலையணை உயரமில்லாததா மாத்திப் பாருங்க. 2 நாள் பார்த்துட்டு சரியாகாட்டி டாக்டர்கிட்டப் போய் செக் பண்ணிக்குங்க.

இப்பதான் உங்கள்மெயில் பார்த்தேன். நீங்க சொன்ன மாதிரியும் காலைலயே செய்துட்டேன். யாருமே எனக்கு பதில் போடலைன்னு கஷ்டமாக இருந்தது. உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி மாமி. நான் இப்ப வெளியில் போகிறேன் நைட் வந்து மெயில் பண்றேன்.

அன்புடன் கதீஜா.

எப்படி இருக்கீங்க. எனக்காக சிரமம் எடுத்து பதில் போட நினைத்த உங்களுக்கு மிக்க நன்றி. நீங்க சொன்னது போல அவங்களுக்கு வேலை இப்ப அதிகம். ஊருக்கு போறதால சாப்பிட வர லேட் ஆகுது.காலைலயே ஹாஸ்பிடல் போய் காமித்துட்டு வந்துட்டாங்க. பிடிப்புதான்னு சொல்லி மஸாஜ் செய்து ஆயின்மெண்ட் தான் கொடுத்திருக்காங்க. அறுசுவைல இருந்து பதில் வரலைன்னு ஊருக்கு போன் செய்து கேட்டு கைமருந்துல்லாம் கொடுக்க சொன்னங்க. என் அம்மா,மாமி எல்லாம் கொடுத்துட்டேன். ஆனால் எப்பதான் பிடிப்பு சரியாகுமோன்னு கவலையா இருக்கு. அடுத்த வாரம் ஊருக்கு வேற போகிறோம் அதுக்கு முன்னாடி சரியாகிடனும்.

அன்புடன் கதீஜா.

கவலைப்படாதீங்க. கண்டிப்பா நீங்க ஊருக்கு கிளம்பறதுக்குள்ளே சரியாயிடும். இந்த மாதிரி பிடிப்புகள் சரியாக (என்னதான் வைத்தியம் செய்தாலும்) 2, 3 நாட்கள் ஆகும்.
வாழ்க வளமுடன்
அன்புடன்
ஜெயந்தி மாமி

என் ஹஸ்ஸுக்கும் இதே ப்ராப்ளம் இன்னியோட 3 நாள் ஆகிவிட்டது கழுத்து சுளுக்கு என்று தான் நினைத்து கொண்டு நானும் பெயின் பாம் போட்டு கொண்டு இருக்கேன். ரொம்பவே வலி என்று கழுத்து திருப்ப முடியாமல் கஷ்ட படுகிறார். நானும் டெய்லி ஹாட் ஷவரில் அந்த இடத்தில் ஹாட் வாட்டர் ஒத்தடம் கொடுக்கறேன்.
நன்றி தேவா, ஜேமேம் நானும் இதே முறை தான் செய்கிறேன் பார்கலாம் கவலையா உள்ளது.

கதீஜா,உங்கள் ஹஸ்க்கு கழுத்து வலி எப்படி உள்ளது?அந்த மருந்து,இந்த மருந்து என தேய்த்து விட்டு.அவஸ்த்தைப் படாமல் உடனேயே டாக்டரிடம் செல்லுங்கள்.உடனே பலன் கிடைக்கும்.தலையணைக் கோளாறு.கம்ப்யூட்டர் முன் நெடு நேரம் அமர்ந்து இருத்தல் போன்ற காரணக்களினாலும் இப்படி கழுத்து சுளுக்கு வருவதுண்டு.எனக்கும் இப்படி ஆகும்.ஒரு நாளைக்கு ஆக்ஸ் ஆயில் தேய்த்துப் பார்ப்பேன்.சரிவராவிட்டால் உடனடியாக டாக்டரிடம் தான்.இந்தியா வுக்கு கிளம்புவதற்கு முன் நல்ல படியாக ஆகி விடும் .கவலைப் படாதீர்கள்.விஜி,கதீஜாவுக்கு சொன்னதே உங்களுக்கும்.டாக்டரிடம் சென்றால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

எப்படி இருக்கீங்க.இப்ப ஹஸ்ஸுக்கு பரவாயில்லை. நான் அடுத்த வாரம் இந்தியா வருகிறேன். மர்ழியை பார்க்க கண்டிப்பாக போவேன். மர்ழியிடம் நான் உங்க போன் நம்பர் வாங்கிகொள்கிறேன்.

ஹாய் விஜி இப்ப உங்க ஹஸ்ஸுக்கு சரியாகிட்டா.இல்லைன்னா கண்டிப்பா டாக்டரிடம் போய் காமிங்க. என் ஹஸ்ஸுக்கு உடனே டாக்டரிடம் போய் இப்ப பரவாயில்லை. எப்படியும் ரெஸ்ட் எடுத்தால் தான் சீக்கிரம் சுகமாகும். ஆனால் ஊருக்கு போகும் சமயம் கண்டிப்பாக ரெஸ்ட் எடுக்க முடியாது அதனால அப்ப அப்ப லேசா வலிக்கிதுன்னு சொல்றாங்க. சீக்கிரம் உங்க கணவருக்கும் குணமாகும்.

சாதிகா அக்கா எப்படி இருக்கீங்க. என் ஹஸ்ஸுக்கு இப்ப பரவாயில்லை.டாக்டரிடம் உடனே போய் காமித்துவிட்டோம். நீங்க விசாரித்ததுக்கு நன்றி.

அன்புடன் கதீஜா.

லதா, எனக்கு 'தேனீ கடி' என்ற த்ரெட் ஓபன் ஆகலை. அதனால் வேறு இடத்தில் கொடுக்கிறேன்.
தேனி என்றில்லை. கொடுக்கு உள்ள எந்த பூச்சி கடித்தாலும், பெரிய வெங்காயத்தை குறுக்கே நறுக்கி கடித்த இடத்தில் தேய்த்தால் கொடுக்கு இருந்தால் வெளியே வந்து விடும்.

வீக்கம் இருந்தால் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்து விட்டு கடிவாயில் சுண்ணாம்பைத் தடவுங்கள்.

அன்புடன்
ஜெயந்தி மாமி

கழுத்து வலி என்று ஏதாவது தைலமோ, ஆயிண் மெண்ட்டோ அழுத்தி தேய்க்க கூடாது,
அப்பரம் அந்த இடத்தில் சொடக்கு வந்து கொண்டே இருக்கும் அதுவும் திருப்பி திருப்பி சொடக்கு விட கூடாது.
அந்த காலத்தில் கழுத்து வலிக்கு அரை படியை கழுத்துக்கு வைத்து படுப்பார்கள்.
ஆகையால் கழுத்து உள்ள இடை வெளியில் மப்ளரை நல்ல சுருட்டி வைத்து படுக்கவும் இது குளுமையால் கூட வரும். தைலம் ஆயிண் மெண்ட் எதா இருந்தாலும் மெதுவா பூபோல தேக்கனும் அது முக்கியமான நரம்பு.
இதே வலியால் நனும் அவஸ்தை பட்டுள்ளேன்.

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்