இரண்டாம் குழந்தை!

டியர் பிரண்ட்ஸ் அனைவரும் நலமா?என்னால்தான் வர முடியல..கவலை ஒரு பக்கம்..ரிட்டன் மசக்கை மறு பக்கம்..

கவலைனா என் பொண்ணை நினைத்துதான் இப்பவே என் கவலை ஆரம்பமாகி விட்டது..இவ சாப்ட ரொம்ப படுத்துவா இது அனைவருக்கும் தெரிஞ்ச ஒன்றே!அதில் என்ன கவலைன்னு கேட்கின்றீர்களா?இருக்கு தோழிகளே இப்பவே என்னால் அப்பப்ப சரிவர கவனிக்க முடியல அதை நினைத்தா ரொம்ப கஸ்டமா இருக்கு கண்ணுக்கு இமை போல பாதுகாத்து வந்தேன் இப்ப பல டைம் முடியிறதில்லை...இப்பவே இப்படினா நாள் போக போக என் கண்மணியின் நிலை?

அடுத்ததா வர இருக்கும் பிரசவ டைமில் ஒரு இரு நாளாவாது இரவு பகலாக என்னை பிரிய நேரிடுமே!அப்ப இவ நிலை?நானும் அவளை விட்டு பிரிந்ததும் இல்லை அவளும் என்னை விட்டு பிரிந்தது இல்லை...அதோட என் பொண்ணு என்னையே பொறுமை இழக்க செய்வாள் சாப்பாட்டு விஷயத்தில் எவ்லோ டைம் ஆனாலும் சரி 2 நாள் ஆனாலும் கூட சாப்பாடு வேணும் ,பால் வேனும்னு ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டாள்..நாந்தான் டைம் பார்த்து கொடுப்பேன்..

இப்படி இருக்கும் போது என் டிலிவரி டைமில் எப்படி சாப்பிட போகிறாள்?இன்று எனக்கு ஒரே மயக்கம் முழிக்க ரொம்ப டைம் ஆகிட்டு தூக்கதோட சொல்லிட்டுதான் தூங்கினேன் அம்மாவிடம் பால் கொடுத்துடுங்கம்மான்னு ஆனா ஒரு வாய் கூடகுடிக்கல நான் முழிச்ச பிந்தான் கொடுத்தேன் அவ அப்பாட்டையும் சாப்ட மாட்டா எனக்கும் ஒரே கவலை இப்படி இருக்காலேன்னு..பல முறை தனியா சாப்ட வைத்து பிராக்டிஸ் கொடுத்துட்டேன்..அவலா சாப்ட பழகினா ந்ல்லதுன்னு ஆனாலும் நோ யூஸ் ஆங்காங்கே பரத்தி வீசிடுறா இல்லை எங்காவது ஒழிச்சு வைத்துடறா..பக்கத்தில் இருந்தாலும் இப்படிதான்..பல முறை இப்படி நடந்து விட்டது..கிளீன் செதே வெறுத்துவிட்டேன்..நான் இதுக்கு மேல் என்ன செய்ய?

நான் மேலே சொல்லி இருக்கும் கஸ்டம் இரண்டாம் குழந்தையை பெற்று இருக்கும் அனைத்து தாய்மார்களுமே பட்டு இருப்பீர்கள் பிளீஸ் எனக்கு ஒரு வலி சொல்லுங்க நீங்க எப்படி சாமாளித்தீங்கன்னு விளக்கமா சொல்லுங்க..எனக்கு இந்த திரட்டை எப்பவோ திரக்கனும்னு இருந்தேன் முடியாமல் போனது இப்ப முடிவோட வந்துட்டேன் போட்டே ஆகனூம்னு...அனைவரின் அனுபவத்தையும் எதிர் பார்க்கும்....

உங்கள்
மர்ழியா

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மர்ழியா!
முதலில் வாழ்த்துக்கள் உங்களுக்கு!!!! சந்தோஷமான செய்தி...
then, உங்கள் கவலை எனக்கும் புரிகிறது.... நானும் ரெண்டாவது குழந்தை வேண்டுமா என்பதை பத்தி.. ரொம்ப யோசிக்கறேன்.... உங்களுக்கு மற்ற தோழிகள் என்ன பதில் தருவார்கள் என்று ஆவலுடன் காதிருக்கிறேன்....

அனுபவம் இல்லை என்றாலும்.. என் மனதில் பட்டது இதுதான்.... இப்பவே... மரியம் கிட்ட சொல்லுங்க.... நம்ம வீட்டுக்கு ஒரு குட்டி பாப்பா வரபோகுது.... நீ தான் அக்கா வாம்! பெரிய பொண்ணாம்! குட்டி பாப்பாவ பத்திரமா பார்த்துகிவியாம்!!!! நீ சாப்பிட்டா தான் பாப்பாவும் சாப்பிடும்.... எங்க? நீயா சாப்பிடு .. பார்ப்போம்!!! அவளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.... மேலும்.... கொஞ்சம் கொஞ்சமாக... உங்கள் அம்மாவிடம் சாப்பிட பழக்குங்கள்... மரியம் கிட்ட சொல்லுங்க... " செல்லம்... இப்போ நம்ம ரெண்டு பேருக்கும்... பாட்டி ஊட்டி விடுவாங்களாம்.... முதல்ல அம்மாக்கு! இப்போ மரியம் க்கு!!! சோ, நீங்களும் அம்மா கையால சாப்பிட மாதிரி ஆச்சு!! உங்க பொண்ணுக்கும் கொஞ்சம் பழகிடும்!!!!
பிரசவ நேரத்தை நினைத்து இப்பவே கலங்காதீர்கள்... இன்னும் நிறைய நேரம் இருக்கிறது....
இன்னொரு விஷயம்... மரியம் பற்றி மட்டுமே நினைத்து இப்படி கவலை பட்டால் எப்படி? இன்னொரு குட்டி பாப்பா வர போகிறது... அதையும் நினைத்து பாருங்கள்... நல்ல சாப்பிடுகள். ரெஸ்ட் எடுங்கள். முக்கியமாக.... மரியம் வரபோகும் குழந்தையை போட்டியாக நினைத்து விட கூடாது... குட்டி பாப்பா வந்து அம்மா தன்னோடு இருக்கும் நேரத்தை குறைத்து விட்டாள் என்ற உணர்வு வர கூடாது.. அதனால்.... இப்போது இருந்தே.... மரியமிடம் சொல்லுங்கள்... குட்டி பாப்பா வர போவதே அவளுக்காகத்தான் என்று!! உன்கூட விளையாடுவா! உன் கூட தான் சாப்பிடுவா!! உன்ன மாதிரியே அழகா இருப்பான் (இருப்பா! )......

ரெண்டு குழந்தைகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்!!! புதிய குழந்தை வந்ததால் உங்கள் அன்பும் அக்கறையும் பகிர்ந்து அளிக்க படவில்லை.... மாறாக.... உங்கள் அன்பு இருமடங்கு ஆகிவிட்டது என்றும்... மரியமிற்கு அன்பு காட்ட ஒரு குட்டி ஜீவன் வந்திருக்கிறது என்றும் புரிய வையுங்கள். முடிந்தால்... உங்கள் தோழியரில்... உறவில்.. ஏதாவது new born baby... இருந்தால் மரியமிற்கு காட்டுங்கள்... குழந்தை பருவம் பற்றி சொல்லுங்கள்.. இந்த கால பிள்ளைகள் ரொம்ப ரொம்ப ஸ்மார்ட்! சோ, மரியமும் புரிந்து கொள்வாள்.... நீங்கள் பிரசவ நேரத்தில்.. மருத்துவமனையில்.. இருக்கும் போது... சாப்பிட அடம் பிடிக்கமால், உங்களோடு இருக்க அடம் பிடிக்காமல்... குட்டி பாப்பா கூட இருக்க விரும்புவாள்!!! so, cheer up!!! take good care of ur health.
உங்கள் ரெண்டாவது செல்லம் பிறந்தவுடன்.... உங்களையும், உங்கள் ரெண்டு செல்லங்களையும் சந்திக்க வருவேன்... ( என்னோட மகனுக்கு உங்க குட்டி பாப்பாவ காட்டி அவனுக்கு புரிய வைக்கணும் இல்ல???ஹா ஹா ஹா!!!
நட்புடன்..
சிஜா தோட்டா.
life is not wat u think! It is more than that!!!

தேங்ஸ் சிஜா வாழ்த்துக்கு!ஆமாம் சிஜா புதுசா ஒரு குழந்தை வர போகுதுன்ன சந்தோசம் ஒரு பக்கம்..என் பொண்ணை நினைத்து கவலை மறு பக்கம் அவளும் வர இருக்கும் குழந்தையை பார்க்க ஆவலா இருக்கா தில் எந்த பிரட்சனையும் இல்லை பெற்றுக்கனும்னு முட்வு எடுத்தபவே சொல்லி வளர்த்துட்டேன் சோ அதில் பிராப்லம் இல்லை..இதுதான் நீங்க சொல்லிம் டிரிக்ஸ் எல்லாம் யூஸ் செய்துட்டேன் எதுக்குமே அசர மாட்டிகுறா..வாங்க சிஜா ...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

hi,
congradulations.

howz mariyam,is she going to school,?
is she comfortable in school.
thanks
jayanthi

ஹாய் மர்லியா

நிஙகள் தான் அருசுவைல் எனக்கு கிடைத்த முதல் தோழி பயோ டாட்டா பகுதியில். மிக்க நன்றி.

முதலில் எனது வாழ்த்துகள். மரிய்ம் எப்படி இருக்கிறாள்? அவளுக்கும் எனது வாழ்த்துகள் அக்காவாக போகிறாள். அவள் பள்ளிக்கு செல்கிறாளா?

செல்வி ராஜ்

உங்களுக்கு எப்பவோ பதில் போடனும்னு நினைத்துட்டே இருபேன் மறந்தே போயிடும் இப்ப அதுக்காகவே இந்த பதிவை எடுத்து வைத்துட்டு படுக்க போயிட்டேன் முழிச்சதும் போட்டுடம்னும்னு

உங்க இருவரின் பெயரும் பார்த்த நம்ம அருசுவை பழைய சீனியர்ஸ் ஜெ.மாமி, செல்விக்கா நியாபகம்தான் வருது சந்தோசமா இருக்கு உங்க இருவரின் பதிவும்

ஜெயந்தி ரொம்ப தேங்ஸ்மா ஆமா இப்ப ஒழுங்கா போறா தூங்குறப்ப பினாத்தல் பக்கத்தில் போய் பார்த்தா ரைம்ஸ் சொல்லிட்டு இருப்பா :-)

செல்வி தேங்ஸ்மா

அப்படிடியா?ரொம்ப சந்தோசம் ஆமாம் குட்டி அக்கா..ஸ்கூல் போறா!பெரிசா பட்ட படிப்பு படிச்சவளை போல ஈவ்னிங் ஆனா மம்மி ஸ்கூலுகெல்லாம் போகிறேனே வாம்மா வெளியே போகனும்னு ஆட்டம் அதிகமாகிட்டு...

மீண்டும் இருவருக்கும் தேங்ஸ் அன்பன விசாரனைக்கு!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நான் எவ்லோ பீலிங் கொட்டி இதை எழுதி இருந்தேன் சிஜா தவிர யாரூம் பதில் போடல..சாதிகா லாத்தா,அதிரா,காயு,விஜி,இப்ப ரஜினி,ஜலீலாக்கா எனக்கு தெரிஞ்சு இவங்களுக்கெல்லாம் இரு குழந்தைகள் இருப்பது தெரியும் இன்னும் யாரெல்லாம் இருக்கீங்களோ?எல்லோரோடும் காய் பதில் போடும் வரை நான் மவுன விரதம் (இப்படி போட்டாலாவது வருவீங்களான்னு பார்கலாம்)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா,
உங்கட பீலிங்கைப் பார்த்ததும் எனக்கும் பீலிங்கா இருக்குது. இந்த நேரத்தில எதற்கும் பீல் பண்ண வேண்டாம். எனக்கு ஒரே தலையிடிக்குது. படுக்கப்போகிறேன். விரைவில் என் அனுபவத்தை எழுதுகிறேன்.

அதிரா வந்திட்டாவெல்லோ இனி கவலை வேண்டாம்.... இன்னும் எமது தோழிகள் தமது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வார்கள். நீங்க நல்லா ஓய்வெடுங்க.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மர்ழி,இதில் என்னம்மா பீலிங் இருக்கிறது?எனது மூத்த மகளுக்கும் , மகனுக்கும் 8 வயது வித்தியாசம்.என் பெண் தம்பி வேண்டும் என்று ஏங்கிப் போனாள்.இத்தனை கேப் சரி அல்ல என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்து மூன்றாவது மகனை 20மாத வித்தியாசத்திலேயே பெற்று விட்டேன்.தாங்கிப் பிடிக்க பிடிக்க சுற்றம்,திடமான நம்பிக்கை இருக்கும் பொழுது என்ன கவலை?ஸோ தைரியமாக,திடமாக இருங்கள்.பிரசவ சமயத்தில் உங்கள் அன்னை உங்களை விட நன்றாகப் பார்த்துக் கொள்ளுவார்.நாம் சந்தித்த பொழுது உங்கள் தாய் மர்யமை வைத்து இருந்ததை நேரிலேயே பார்த்தேனே.ஸோ பீல் பண்ண ஒன்றுமே இல்லை.இப்படி இத்தனை புலம்புகின்றீர்கள்.இரண்டாவது பிரசவத்துக்குப் பின் விரைவிலேயே மூன்றாவதுக்கு கூடிய சீக்கிரமே ரெடியாகி விடுவீர்கள்
மர்ழி...நீங்க உருட்டுக்கட்டையை எடுக்கும் முன் நான் எஸ்கேப்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய் மரிழி
என்னக்கும் இதேதான் கவலைதான்பா , நான் தனியாக இருந்து என் பொன்னை பாக்கரதுக்குல எனக்கு போதுபோதும் ஆயிரும் , அவர் வந்தால் தான் எனக்கு சாப்பிட கூட முடியம் , இதற்கு பயந்து இரண்டாவது பற்றி யேசிக்கவே இல்லை , ஆனா உங்களுக்கு பரவலிலாய் அம்மா வீட்டுக்கு போக போரிங்க தானே அப்புறம் என்ன அவங்க பாத்துக்குங்க , இப்போவே மரியாவேய் உங்க அம்மாவேட இருக்க பழகிடுங்க, எல்லாமே இப்போ நேனச்சா பயமா இருக்கும் , ஆனா நடக்கும் போது நமக்கு கஷ்டம் தெரியாது. தெய்ரியமா இருங்க மரியம் சமத்து புரிச்சு நடந்துகுவ , கவலைய விடுங்க
[ உங்களுக்காக பதிவு போட்டன் எங்க சிரிங்க பாக்கலாம் ...:) மெளன விரதத்தை முடிங்க ]

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

மேலும் சில பதிவுகள்