Food for Preganant Lady

Hi Friends,

I am Sudha, I am conceived. I would like to know what veg and non-veg foods can I take in this time. Can I take fish in this time.

Thanks
Sudha K

மர்லி வீட்டுல பிரியாணியா... மர்லி.. சொல்லவே இல்லை...

இந்த சைட் இல்லாம ஒரு புத்தகம் இருக்கு என் நண்பர்களெல்லாம் கன்சீவ் ஆனது தெரிந்த முதல் உடனே வாங்கியது என்று சொல்வார்கள்...
"What to expect when you Expect" -->> you get this in india also...

உங்களுக்கு புக் எப்படி இருக்கும்ன்னு தெரியனுமின்னா ... பார்ன்ஸ் அண்ட் நோபிள் போய் படித்து பாருங்க... நார்மலா எல்லா ஊர் பொது நூலகத்திலும் பார்த்து இருக்கேன்... நீங்க படிக்கிறதில்லாம உங்க கணவரையும் படிக்க சொல்லுங்க... சோ அவங்களுக்கும் புரியும் நீங்க ஏன் எப்படி இருக்கீங்க... உங்களுக்குள்ள இவ்வளவு மாறுதல் நடக்குதுன்னு... உங்க அப்பாயின்மென்ட் எப்ப இருந்தாலும்... ஏதாவது டவுட் இருந்தா உங்க டாக்டரை போன் செய்து கேக்கலாம்... Because they are obligated to answer and help you even though you have not even met them once. எதாவது வலி இருந்தா இங்க டைலனால் மட்டும் எடுத்துக்க சொல்லுவாங்க...

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா நிங்க நலமா? இங்கு எந்த இடத்தில் இருக்குறிர்கள்? நான் LA வில் இருக்கிறேன். அந்த புத்தகத்தை பார்த்துட்டு சொல்றேன். Thank you.

நான் நலமே , பாஸ்டனில் இருக்கிறேன்... அட்லான்டிக் பெருங்கடல் சமீபத்தில்...

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் மேனகா, எனது சொந்த ஊரும் பாண்டிச்சேரிதான் (near employment exchange), ஹஸ் ஊருதான் கடலூர். நீங்கள் பாண்டியில் எங்கு வசித்தீர். சுதா 네 안녕하세요 (yes, Annyong haseyo) உங்களுக்கு கொரியன் மொழி தெரியுமா? நான் ஓரளவு புரிந்து கொல்லுவேன், கொஞ்சம் பேசூவேன். 안녕히 가세요 Annyonghi kasayo (Good bye).
with love,
suria

அன்புத் தோழிகளுக்கு வணக்கம்.

நான் தற்போது 12 வாரம் கர்ப்பம். எனக்கு எதுவுமே சாப்பிட பிடிக்கல. பழங்கள் ஓரளவுக்கு சாப்பிட முடியுது. மத்தபடி சாதம்,சப்பாத்தி,கலவை சாதம்,காய்கறி எதுவுமே சாப்பிட முடியல..பசி நேரத்துல கூட சாப்பாட்ட பார்த்தா பிடிக்கல...

சாம்பார் சாப்பிட்டே 3 மாதம் ஆகப்போகுது...

பொதுவா நான் நல்லா சாப்பிடற ஆள்தான். ஆனா இப்ப ஒண்ணுமே சாப்பிட முடியல. சாப்பிடாம ஜூஸ் குடிச்சாலும் ரொம்ப டயர்ட் ஆ இருக்கு :-(

எனக்கு ஏற்கனவே ஒரு தடவை டின்சி பண்ணியாச்சு. கல்யாணம் ஆகி 2 வருடம் ஆகப்போகுது...3 மாசமா நான் காய்கறியே எடுதுக்கல..

இன்னைக்கு கால்லையில சாப்பாத்தி சாப்பிட்டேன்.அப்புறம் வண்டியில வர்றப்ப மாதுளை சாப்பிட்டேன்....ஆபிஸ் வந்த உடனேயே வாந்தி எடுத்தாச்சு..அப்புறம் ஒண்ணுமே சாப்பிட முடியல. :-(

இந்த பாப்பாவ நான் நல்லபடியா பெத்துக்கணும்.. எனக்கு நல்லா சாப்பிடறதுக்கு வழி சொல்லுங்களேன்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

ஹலோ சுதா,
வாழ்த்துக்கள். எப்படியிருக்கீங்க? என் பெயர். மணி.

எனக்கு ஆரம்பத்தில் அப்படிதான் இருந்ததது. டாக்டரிடம் கேட்டதற்கு வயிறு விரிவடைவதால் முதல் 5 மாதத்திற்கு வலி இருக்கும். அதனால் பயப்படவேண்டாம் என்று கூறினார். முதல் மூன்று மாதங்களுக்கு நன்றாக ஓய்வு எடுக்கவும்.முதல் மூன்று மதங்களுக்கு உணவும் ஒரே தடவையில் எடுக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளவும்.
உழைப்பின்றி ஊதியமில்லை
மணி

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

Hai mani thanks for your tips.மேனகா,தனிஷா,சூர்யா,மர்ழி, மணிசாரா,இலா அனைவரும் நலமா? சூர்யா எனக்கும் கொரியன் மொழி தெரியாது. ஆனால் இங்கு என் தோழி இருந்தால் அவள் ஒருசில வார்த்தைகள் சொல்லிகொடுத்தால் அது தான்.How are you?, Good bye இரண்டுக்கும் ஒரே வார்த்தையாம்.அப்படியா?

Hai mani thanks for your tips.மேனகா,தனிஷா,சூர்யா,மர்ழி, மணிசாரா,இலா அனைவரும் நலமா?நான் நலம்.அடிக்கடி எனக்கு பசிக்கிறது.ஏன்? சூர்யா எனக்கும் கொரியன் மொழி தெரியாது. ஆனால் இங்கு என் தோழி இருந்தால் அவள் ஒருசில வார்த்தைகள் சொல்லிகொடுத்தால் அது தான்.How are you?, Good bye இரண்டுக்கும் ஒரே வார்த்தையாம்.அப்படியா?

கர்ப்பமாக இருப்பவக்ர்களுக்கு சிலருக்கு அடிக்கடி பசிக்கும்.. 3 தடவை சாப்பிடாமல் அதனை 6 முறை சாப்பிடுங்க.. ஒவ்வொரு மீலுக்கும் இடையில் ஒரு 3 மணி நேரம் இடைவெளி விட்டு சாப்பிடுங்க... அப்படி செய்வதால் ஹார்ட்ப்ர்ன் எனப்படும் நெஞ்செரிச்சலும் இருக்காது...
எனக்கு தெரிஞ்ச சில மினி மீல்ஸ்
பசிக்கும் போது ஒரு 4 ஆல்மன்ட்ஸும் இல்லைனா வால்நட்ஸும் ஒரு சின்ன ஆப்பிளும் சாப்பிடுங்க... நட்ஸ் சாப்பிட்டா நல்லது கூட... பச்சைபயிறு ஊரவைத்து லேசா தாளிச்சு குட்டி குட்டி ஜிப்லாக் பேகில் வச்சுக்கோங்க... கேரட் துருவியதும்+வெள்ளரிக்காய் வெட்டியது இதில் சேர்த்து லெமன் பிழிந்து சாப்பிடுங்க... இங்க கிடைக்கிற யோகர்ட் குட்டி டப்பில் 90 காலரிகள் தான்.. தாராளமா இதெல்லாம் பண்ணலாம்... பிடிக்குமென்றால் ப்ரெட் டோஸ்ட் ( டீ ரஸ்க் கூட)பீனட் பட்டர் /ஜெல்லி சான்ட்விச் ... கேரட் வித் பீனட் பட்டர் ஒரு டீ ஸ்பூன்... இதெல்லாம் கர்பிணிகளுக்கு மட்டுமில்லாம.. எல்லாருமே இப்படி சாப்பிடாலாம்...
நேத்து கூட மர்லியை கிண்டல் பண்ணினேன்..

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

சுதா நான் நலம்.நீங்க எப்படி இருகிங்க.இப்பொ வலி எப்படி இருக்கு?.ஒரு அட்வைஸ் தீபாவளிக்கு ஊர்க்கு போவதாக சொன்னிங்க.இந்த மாதிரி சமயத்தில் வேணாம்.எதுக்கும் உங்க டாக்டரிடம் போலாமா என்று கேளுங்க.அது உங்களுக்கும் உங்க பேபிக்கும் நல்லது.தப்பா எடுத்துக்காதீங்க,உங்க நல்லதுக்காக சொன்னேன்.பேபி பிறந்த பிறகு போய் வாருங்கள்.

சூர்யா நலமா?நான் நலம்.என் அம்மா வீடு அரியாங்குப்பம்,ஹஸ் வீடு லப்போர்த்வீதி.அப்போ நீங்க தட்டாஞ்சாவடியா?
ஹாய் சங்கீதா,வாழ்த்துக்கள்.ஒரு 3 மாதம் வரை வாந்தி வரும்.வாந்தி வந்தாலும் நீங்க எதாவது சாப்பிடனும்.அது உங்க பேபிக்குத்தான் நல்லது.காய்கறி கொஞ்ச கொஞ்சமாக சேஇத்து சாப்பிடவும்.சாப்பாட்டை பார்த்தா பிடிக்காது தான் ஆனால் என்ன செய்வது .ஜூஸ் குடிங்க,பழம்,சாலட் வகைகள் என்று சாப்பிடுங்க.நீங்க நல்லா சாப்பிடுங்க உங்க பாப்பாவை நல்ல படிய பெத்தெடுப்பிங்க.ஆல் தி பெஸ்ட்.

மேலும் சில பதிவுகள்