காராபூந்தி

தேதி: August 4, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

அரிசிமாவு - ஒரு ஆழாக்கு
கடலைமாவு - அரை ஆழாக்கு (100 கிராம்)
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நெய் - 50 கிராம்
எண்ணெய் - 200 கிராம்


 

அரிசிமாவு, கடலைமாவு இரண்டையும் சலிக்கவும். மிளகு, சீரகத்தை பொடிக்கவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து தேவையான தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பக்குவத்திற்கு, நெய்யையும் உருக்கி சேர்த்து பிசையவும்.
கடாயில் எண்ணெய் சூடானதும் பூந்திக்கரண்டியில் உள்ள துவாரத்தின் வழியாக மாவை எண்ணெயில் விழும்படி தேய்க்கவும்.
சலசலப்பு அடங்கியதும் வேறு சல்லிக்கரண்டியால் அரித்து எடுத்து விட்டு, இதேபோல் எல்லாமாவையும் மறுபடியும் தேய்த்து வேகவைத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்