கோவக்காய் பொரியல்

தேதி: August 9, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோவக்காய் - கால் கிலோ
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 50 கிராம்
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி


 

கோவக்காயை வட்டமாகவும், லேசாகவும் நறுக்கி, மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசறி 10 நிமிடம் வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் வதக்கி கோவக்காயை பிழிந்து போட்டு கிளறவும்.
கோவக்காய் ஊறிய தண்ணீரை கீழே ஊற்றவும். மிளகாய் தூள் போட்டு சிறு தீயில் சிறிது நேரம் கிளறி தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும். வெந்தவுடன் சுருள கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

THANK U MADAM KOVAKKA PORIYAL NANDRAGA IRUNTHATHU

உங்க முறைப்படி இன்று கோவக்காய் பொரியல் செய்தேன். செய்வதற்கு எளிமையாக, சுவையான ஒரு பொரியலாக இருந்தது. தயிர் சாதத்திற்கு பெஸ்ட் மேட்ச்சாக இருந்தது. குறிப்புக்கு நன்றி.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ