61 வது சுகந்திர தினத்தை கொண்டாட அனைத்து தோழி மற்றும் தோழர்கள் இங்கே வாருங்கள்...

இந்தியனாக பிறந்த அனைவரும் மிக முக்கியமாக கொண்டாடப் படவேண்டிய தினம் (ஆகஸ்ட் -
15) இன்று. நாம் நிறைய விழாக்களை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். அதே போல் இந்நாளை சிறப்பாக கொண்டாட அறுசுவை தோழிகள், தோழர்கள், மட்டும் அல்லாது பார்வையிடுகின்ற அனைவரும் சேர்ந்து கொண்டாடலாம். கொண்டாடுவது மட்டும் அல்லாமல் நம்ம சமுதயம் வரும் காலங்களில் எந்த அளவுக்கு எந்தெந்த துறையில் முன்னேற வேண்டும் என்று ஒவ்வொரு வரும் அவரவர் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாமே (குறிப்பாக நம்ம நாட்டில் திருட்டு, கொலை, ஊழல், வண்முறை இது போல் நிறைய பிரச்சனை தீரவேண்டும்). நாம் அறுசுவையில் நம்மை பற்றியும் நம்மை சார்ந்தவர்களை பற்றியும் நம் தோழிகள் ஒவ்வொரு தலைப்புக்கும் ரொம்ப அருமையாக பதில் கொடுத்து கொண்டு இருக்கிறீர்கள் அதே போல் நம் சமுதயாத்தை எந்த அளவு சரிசெய்தால் நம்ம நாடு முன்னேற முடியும் என்று கூறுங்கள்.
உதாரணமாக நாட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது கூட நம்ம கையில்தான் இருக்கிறது
சாதாரணமாக மரங்களில் இருந்து இலை உதிர்வதற்கு நம்ம காரணமாக இருக்க முடியாது ஆனால்
நாம் கடையில் ஏதாவது வாங்கி சாப்பிட்டு விட்டு அந்த பேப்பரை அப்படியே கசக்கி போடுவோம். இதே போல் ஒவ்வொருவரும் செய்யறதுதான் ரோடு முழுவதும் மாசு அடைகிறது. இது ஒரு தனிமனித செயல் தானே இதை மற்றலாமே. இது மட்டுமல்லாமல் இது போன்ற ஒவ்வொரு செயலிலும் தனி மனித மாற்றம் வர வேண்டும். இல்லை எத்தனை EXNORA போன்ற அமைப்புகள் வந்தாலும் நாட்டை தூய்மைப்படுத்த முடியாது. இந்தியா தங்கம் வென்றதும் நம்ம எந்த அளவு சந்தோஷம் அடைந்தோம். அதே போல் நம் சமுதாயம் சீர்கேடுவதையும், நம்மால் முடிந்த வரை சரிசெய்ய வேண்டும். இந்திய குடிமகன்கள் மற்றும் குடிமகள்கள் அனைவருக்கும் சுகந்திர தின நல்வாழ்த்துகள்.

ஜெய்ஹிந்த்
தீபா அருண்குமார்

சுதந்திர தினநல்வாழ்த்துக்கள்!!
ஹாய் அனைத்து சகோதர சகோதரிக்களுக்கும்,நமது அட்மின் பாபு அண்ணா அவர்களுக்கும் 61-வது சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.ஜெய் ஹிந்த்!!வந்தே மாதரம்!!.

16-08- 2008 அன்று,பாண்டிச்சேரியில் வசிக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் பாண்டிச்சேரியின் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.
ஜெய் ஹிந்த்!!ஜெய் ஹிந்த்!!ஜெய் ஹிந்த்!!

தோழியர், தோழர்கள் அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.

தீபாஅருண்குமார்
நல்லதொரு சிந்தனையை முன் வைத்திருக்கிறீர்கள்.

அன்புடன்
ஜெயந்தி மாமி

எல்லாருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்...
சுதந்திர தினம் என்றாலே பள்ளி ஞாபகம் தான்!!! ஒவ்வொரு வருசமும் பேசுவேன்...( மேடையில!) அப்புறம்.. நாடகம்!! சட்டையில தேசிய கொடிய குத்திக்கறது.... விழா முடிஞ்சு போகும்போது.. குடுக்கற மிட்டாயி....

அப்புறம்... காலேஜ் ல.... பெரிசா ஒன்னும் பண்ணல .... எல்லாரும் வழ்திக்கொள்வோம்... then, university ல நான் ஹாஸ்டல் மாணவி. ஆதனால... துணைவேந்தர் கொடி எத்துமபோது துணைக்கு எங்களையும் கூப்பிட்டு கொள்வார். அழகா கொடி பாடல், தேசிய கீதம் எல்லாம் பாடி கொடி ஏத்திட்டு, ஒரு காப்பி குடிச்சிட்டு வந்திருவோம். ஹாஸ்டல் ல அன்னைக்கி கேசரி தான்! :)

அப்புறம்... வேலைக்கு போன போது கூட வாழ்த்துக்களும்.. ஸ்வீட் -ம உண்டு!!! கல்யாணமாகி இல்லத்து அரசி யா வீட்டுல இருக்க ஆரம்பிச்சதில் இருந்து.... சுதந்திர தினம் னா, டிவி னு ஆயி போச்சு!!!!
வருங்கால தூணாக இருந்து கொண்டாடிய நாள்கள்.... பசுமையான நினைவுகள் தான்! இப்போதான்... நான் அடுத்த வருங்கால தூணை உருவாக்கி, பார்த்து கொண்டு இருக்கிறேனே!! (என் மகனை சொல்கிறேன்!)

என்னை மாதிரியே..... வீட்டில் இருந்து வருங்கால தூண்களை உருவாக்கும் மற்றும் வேலைக்கு சென்றுகொண்டே உருவாக்கும்... அனைத்து இல்லத்து அரசிகளுக்கும்.... இனிய சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்களுடன்..
சிஜா தோட்டா.
life is not wat u think! It is more than that!!!

தீபா நன்றாக இருக்கு இந்த் த்ரெட். முதலில் எல்லாருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்.ஆடுவோமே பள்ளி பாடுவோமே ஆனந்த சுதந்திரம்......
நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஏன் நம்ம நாட்டில் அதுவும் நம்ம தமிழ் நாட்டில் சன் டிவி, மற்ற சானல்கள் எல்லார்ம் ஏன் இப்படி சுதந்திர தினந்தன்று ஒரே பட்டி மன்றம் அதுவும் சாலமன் பாப்பையா, அப்புறம் சினிமா ஸ்டார்களின் பேட்டி, புது படங்கள் பற்றி இதே மாதிரி நிகழ்ச்சிகளை போட்டு மனிதர்களின் அந்த சுதந்திர தினத்தை மறக்க செய்துவிட்டார்கள், இதற்க்கு பதிலாக அந்த நிகழ்ச்சிகளை எல்லாம் மாற்றி நல்ல சுதந்திர தினந்தை நினைவு கூறும் வண்னம் சுதந்திரதினத்திற்க்கா பாடுபட்டவர்களை அல்லது அது சம்பந்தமா, அவங்களை போய் பேட்டி எடுத்து போடலாமே( மாறுதலாக சினி ஸ்டார்க்ளை வைத்தே அவங்களை போய் பார்த்து பேட்டி எடுத்து போட்டால் ரொம்ப நன்றாக இருக்கும்)பிறகு இப்ப நடக்கிற காஷ்மிர் ப்ரச்னை நடக்கிற இடங்களில் எவ்வளவு பேர் உயிர் விடுகிறார்கள் விடுதலை வீரர்களின் குடும்பங்களை எல்லாம் போய் பேட்டி எடுத்து போடலாம், மற்றும் இப்போ நம்ம நாடு எவ்வளவு முன்னேறி இருக்கு என்னவெல்லாம் இன்னும் சாதிக்க வேண்டும் என்று எவ்வளவோ இருக்கு அதை எல்லாம் விட்டு எப்ப பாரு ஒரு பட்டி மன்றம், சினிமா, பாட்டு டான்ஸ், ஒரு சுதந்திர தினம் விடுமுறை மாதிரி இல்லாமல் பொழுதுபோக்கு தினமாக் மாறி கொண்டு வருவதை நினைத்து வருத்தமா இருக்கு.
நாம மட்டும் நினைத்தால் போதாது இல்லையா? எல்லாரும் இதே மாதிரி நினைத்தால் நன்றாக நம்ம நாட்டை எங்கேயோ கொண்டு போய் இருக்கலாம். முதலில் நம்ம மிடியாககள் தான் இதை மக்களுக்காக எடுத்து சொல்ல வேண்டும், அது சம்பந்தமா டெலி சிர்யல்கள், படங்கள், பேட்டிகள், போட்டிகள், வைத்தால் நன்றாக இருக்கும். இதே மாதிரி ஒவ்வொரு இந்திய குடிமகன்/குடிமகள் நினத்து செயல்பட்டால் நல்ல நாடு வளர்ச்சியடையலாம். நாங்கள் இன்றும், காஷ்மிர், மற்றும் தேசத்துக்காக பாடுபட்ட விடுதலை வாங்கிகுடுத்த மூத்தவர்களை பற்றி தெரிந்து கொண்டு இருக்கிறோம் எங்க குட்டிஸ்களுக்கும் கற்று கொடூக்கிறோம். மேலும் நாங்க சின்ன சின்ன உதவிகளும் செய்து கொண்டு இருக்கோம் என்று நான் கூறிகொள்கிறேன். பாரத சமுதாயம் வாழ்கவே.

எல்லோருக்கும் சுதந்திர தின நல் வழ்த்துக்கள்.

கழ்டப்பட்டு சுதந்திரம் வாங்கி கொடுத்த தியாகிகளை கொஞ்சமாவது நினைத்து பாருங்கள் எல்லோரும்.அவர்களை எல்லாம் நினைத்து பார்க்கும் வண்ணம் ஏதாவது போடலாம்.
ஸ்கூலில் தான் கொடி ஏற்றி லைனில் நின்று மிட்டாய் வாங்கி சாப்பிட்ட ஞாபகம். இப்ப எங்க டீவில் தான் பார்க்கமுடியும் மெரினா பீச்சின் ஊர்வலத்தை எல்லாம்.
கரெக்டா சொன்னிங்க விஜி அப்பதான் புதுபடம் ரீலிஸ், நடிகைகள் பேட்டி அதற்கும் இதற்கும் சம்மந்தமே இருக்காது.
உடனே ஒரு விளம்பரம் சுதந்திர தினத்தை முன்னிட்டு திரைக்கு வந்த பல மாதங்களே ஆன புத்தம் புது திரைபடம் என்று வேறு.

ஜலீலா

Jaleelakamal

நான் பிறப்பதற்கு 25 வருசம் முன்னலயே சுதந்திரம் கிடைச்சாச்சு, சுதந்திர நாள் என்றால் லீவு,மிட்டாய் `ed`1மட்டும்தான் தோணுது சின்ன வயசுல, இப்போ வளர்ந்ததும் நாம இப்போ இருக்கிற சந்தோசத்திற்கும், சுதந்திரத்திற்கும் காரணமாக இருந்த காந்தி போன்ற எல்லா தலைவர்களுக்கு நன்றி சொல்லிட்டு அடிமைத்தனதிலிருந்து விடுபட்ட நாளை சந்தோசமாக கொண்டாடி அதே நேரத்தில் இந்த நிமிடம் குடும்பத்தை பிரிந்து எல்லையில் பாதுகாப்பில் இருக்கும் எல்லா ராணுவதினருக்கும் நன்றி சொல்வோம்..என்றுதான் சுதந்திர தினம் கொண்டனும், ஆனால் இப்போ அப்டியா பண்றோம்? டிவி ல என்ன புதுபடம்? அப்பாடா ஒரு நாள் லீவு இது பெரியவங்க..குழந்த வந்து Anty ஸ்கூல்ல நான் மன்மத ராசா பாட்டுக்கு டான்ஸ் பண்ண போறேன் சொல்லுதுங்க, எதுக்குமா டான்ஸ் பண்ண போறேன்னு கேட்டா ஏதொ ஸ்கூல்ல சுதந்திர தினம் கொண்டாடுறாங்கனு சொல்லுதுங்க. In fact children dosnt know what is Independance day, and why we are celebrating? Happy independance for all our friends...

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் எனது சுதந்திரதின வாழ்த்துக்கள்.
நல்ல திரெட் ஆரம்பித்த தீபா அவர்களுக்கு நன்றி.நமது நாட்டில் விவசாய நிலங்கள் அழிந்து வருவதை தடுக்க முயற்சி செய்ய வேண்டும்.இந்த நிலைமை நீடித்தால் உண்வு தட்டுப்பாடு இன்னும் அதிகமாகிவிடும்.சாலையோரங்களில் மரம் வளர்க்க வேண்டும்.அதிக மரங்கள் இருந்தால் ம்ழையின் அள்வு அதிகரிக்கும்.நமது நாட்டின் வளமும் உயரும்.
கவிதா.

kavitha

திரெட் ஆரம்பித்த தீபா அவர்களுக்கு நன்றி

அனைவருக்கும் எனது சுதந்திரதின வாழ்த்துக்கள்

சிஜா தொட்டே உங்களே மாதிரித்தான் பள்ளி கல்லுரிகளில் இருந்த கொண்டாடம் இப்போ இல்லை ஆனா சுகந்திர தினத்தே நினைத்தலே விஜி சொன்னது போல் ஆடுவோமே பள்ளி பாடுவோமே ஆனந்த சுதந்திரம்...... பாடல் நினைவில் வந்துவிடும் , நம் நாட்டுக்க எவ்வளவோ போர் பாடுபட்டார்கள் , ஆனால் அவர்களே நினைக்க ஒரு நாளாவது உள்ளதே என்பத இல்லை, எல்லாரும் அன்று டிவி முன்னால் உக்கர்துவிடுகிரர்கள் என்பத , அடிமைத்தனதிலிருந்து விடுபட்டதே எதோ டிவி பார்க்கத்தான் என நினைத்துவிடுகி்ர்கள் , அதே விட்டு எதோ நம்மால் ஆனா உதவிகளே மற்றவர்களுக்கு செய்யலாம் , நம்மே சுற்றி இருக்கும் இடத்தே துய்மேய்யாக வைத்து இருந்தாலே நம் நாடு முன்னேறி விடும் , இது ஒவ்வுறு குடிமகனுக்கும் இருக்கும் கடமை

ஜெய்ஹிந்த்

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

சுதந்திரதின வாழ்த்துக்கள்

அனைவருக்கும் எனதினிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.

என்ன பலபேர் கோபத்தோடுதான் சுதந்திரதின வாழ்த்துக்கள் சொல்கிறீங்கள், ...... இந்த வருடம் தங்கத்தோடு தானே சுதந்திரதினமும்..... சந்தோஷமாகக் கொண்டாடுங்கள். என்றும் எப்பவும் எல்லோரும் சுதந்திரமாக இருக்க இறைவன் துணைவரட்டும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் எல்லோருக்கும்
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

தீபா நல்ல திரெட் ,உங்களுக்கு என் பாராட்டுக்கள்.

தோழிகள் அனைவரும் உறுதிமொழி என்ற தலைப்பை பார்வையிட வேண்டுகிறேன்.

கருத்துக்களைஉம் பதிவு செய்யவும்.

ASIMS
PEACE BE ON EARTH

hhijk

மேலும் சில பதிவுகள்