சவால்.. நீங்க ரெடியா?

வாருங்கள் தோழிகளே (தோழர்களே)..
எல்லாரும் சுதந்திர தினத்தை சந்தோசமா கொண்டாடி இருப்பீங்கன்னு நம்புறேன். இப்ப இங்க வந்து என் சவால்ல கலந்துக்கிட்டு உங்க திறமையை நிருபியுங்க பார்க்கலாம்.

"கும்பகோணத்தில் குடியிருக்கும் குடிகார குப்புசாமி குடித்துவிட்டு, குறும்புத்தனமாய் குரங்கை குச்சியால் குத்த, குத்துப்பட்ட குரங்கு குபீரென குளத்தில் குதிக்க, குளமே குழம்பியது."

இந்த மாதிரி ஒரே எழுத்துல ஆரம்பிக்கிற வார்த்தைகளை வச்சு பெரிய லைன் குடுக்கணும். வேற எழுத்துல ஆரம்பிக்கிற வார்த்தைகள் எதுவும் நடுவுல வரக்கூடாது. ரொம்ப முக்கியமா படிச்சா அதுக்கு மீனிங் இருக்கணும். எதாவது சம்பந்தம் இல்லாமல் வார்த்தையெல்லாம் சேர்க்கக்கூடாது. யார் அதிக வார்த்தைகள் யூஸ் பண்ணி பெரிய வாக்கியம் கொடுக்குறாங்கன்னு பார்க்கலாம். தேவைன்னா எப்ப வேணும்னாலும் நடுவில வார்த்தைகளை சேர்த்துக்கலாம். என்ன ரெடியா? வாங்க கலக்குங்க.

தீபா அருண்குமார்

வாஞ்சியூரில் வசிக்கும் வந்தனாவுக்கு வளைகாப்பு. வருந்தியழைத்ததினால் வந்த வயதான வரகம்பட்டி வாத்தியார் வாழையடி வாழையாய் வாழ்வாங்கு வாழ வாயார வாழ்த்த, வந்தனாவும் வாத்தியாரை வணங்கிங்கினாள். வாத்தியாரின் வாழ்க்கைதுணைவியாரும் வாழ்த்தி வந்தனாவிற்கு வளையலிட்டார்.

வரும்போது வாத்தியாரை வாசலில் வாழைப்பழத்தோல் வழுக்கிவிட்டது. வாத்தியார் வலியால் வருந்தினார். வலிமருந்திட்ட வாழ்க்கைத்துணைவியார் வாத்தியாரின் வலக்கைப்பற்றி வழிநடத்தினார். வளைகாப்புக்கு வந்த வாத்தியார் வலியால் வருந்தியதால் வந்தனாவின் வாழ்கைத்துணைவன் வரதன் வருந்தினார்.

வந்தனாவும், வரதனும் வாத்தியாருக்கு வாக்கிங்ஸ்டிக் வாங்கி வற்புறுத்தி வாங்கவிழைந்தனர். வாத்தியார் வாங்காததினால் வந்தனா வருத்தமடைந்தாள். வாத்தியார் வாங்காததினால் வருத்தமடைந்த வந்தனா வாத்தியாரின் வாழ்க்கைதுணைவியாரிடம் வற்புறுத்தினாள். வற்புறுத்தியதற்காக வாத்தியாரின் வாழ்க்கைதுணைவியார் வாங்கி வணங்கினார். வாத்தியாரும், வாத்தியாரின் வாழ்க்கைதுணைவியாரும் வாக்கிங்ஸ்டிக்கால் வழிநடந்தார்கள்.........
வாக்கிங்ஸ்டிக்கோடு வந்த வாத்தியாரையும் வாழ்க்கைத்துணைவியாரையும் வழிமறித்து வழியில் வந்த வடுகம்பட்டி வடுகநாதன் வாத்தியார் விழுந்ததிற்கு வருந்தினார். வாக்கிங்ஸ்டிக் வாங்கித்தந்த வந்தனாவை வாயாற
வாழ்த்த வங்கி வாசலில் வந்த வட்டப்பொட்டுக்காரி வனிதா வந்தனாவை வாழ்த்தி வாத்தியாரையும் வாத்தியாரின் வாழ்க்கைத்துணைவியாரையும் வாழ்த்தி வணங்கி விடைபெற வந்தாள்.

வழியில் வந்த வரதன் வருத்தத்துடன் வந்தனா வயிற்று வலியில் வருந்துவதாகச்சொல்லி வருத்தப்பட வடுகநாதன்,வனிதாவோடு வர வாத்தியாரும் வாழ்க்கைத்துணையோடு வந்த வழியே வந்தனா வீட்டுக்கு வரதனோடு வந்தனர்.வாசலிலிருந்த வந்தனாவின் வளர்ப்புத்தாயார் வாசலில் வந்த வரதன்,வாத்தியார் ,வாத்தியாரின் வாழ்க்கைத்துணைவி,வடுகபட்டி வடுகனாதன்,வட்டப்பொட்டுக்காரி வனிதாவிடம் வாய்கொள்ளாச்சிரிப்புடன் வந்தனாவுக்கும் வரதனுக்கும் வடிவானபெண் வந்துதித்திருப்பதாக வரவேற்றாள்.வந்தனாவும் வாய்கொள்ளாச்சிரிப்புடன் வழிமொழிந்தாள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

குருவி, எப்படி இருக்கீங்க? ரஜினி 2 வா நீங்க? ஓ.கே. ஓ.கே. கணக்கு விடைகள் எல்லாம் சூப்பரா கண்டு பிடிச்சுட்டீங்க. பாராட்டுக்கள்
ரஜினி 1 சூப்பராக தொடர்ந்து இருக்கீங்க வ வா. பாராட்டுக்கள். குட்டீஸ் ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க?
கவிசிவா நல்லா கத எழுதுறீங்க? 4 வரியில இருந்தத 4 paragraph மாத்திட்டீங்க. பாராட்டுக்கள் கவி

வணக்கம் கவிசிவா, கதையை கலக்கிட்டீங்க போங்க.......எல்லாரும் கவிசிவாவிற்கு ஒரு ஓ போட்டு வேகமா பலமா சத்தமா கை தட்டுங்க....கவிசிவா அப்பிடியே கொஞ்சம் ஸ்மைல் செய்ங்க...க்ளீக்.... வாவ் போட்டோ சூப்பர்...மீண்டும் சந்திப்போம்...
அன்புடன்
குருவி

ஹாய் கவிசிவா,நல்ல கதை எழுதுறீங்க, அழகா கணக்கு போடுறீங்க . அதுக்கு ஒரு ஓ........... போடுறோம்.

Can anyone guide us to make ginger chicken masala with gravy?

ஹாய் ப்ரண்ஸ் எல்லாரும் எப்பிடி இருக்கீங்க?....சவால் ம எழுத்தில்......
மாயவரம் மருதவாணனுக்கும், மாத்தூர் மல்லிகாவிற்கும் மகனான மருத்துவர் மகேஷ் ஐ, மன்னார்குடி மணிகண்டனுக்கும் மருதூர் மஞ்சுளாக்கும் மகளான மதுமிதாக்கு மணம்புரிய மனமில்லாததால் மயக்க மருந்தருந்தினாள்...மயக்க மருந்தருந்திய மதுமிதாவை மருத்துவர் மகேஷ் மயக்கம்தெளிய மருந்தளித்தார்...மயக்கம்தெளிந்த மதுமிதா மனம்திருந்தி மகேஷை மணக்க மறுக்கவில்லை...மணமகன் மகேஷ்ம், மணமகள் மதுமிதாவும் மங்களகரமான மணநாளில் மருதமலை மணமண்டபதில் மலர் மாலை மாற்றி மகேஷ் மதுமிதாக்கு மங்கள மாங்கல்ய மாலையிட்டு மணம்புரிந்தார்... மணமக்களை மணமேடையில் மகிழ்ச்சியில் மனதார மக்கள் வாழ்த்தினார்கள்....
மற்றவர்கள் தொடரவும்...
அன்புடன்
குருவி...

குருவி,
ம , மா சவாலில் "வாழ்த்தினார்கள்" எங்கே இருந்து வந்தது. -:)))))))
Rajini

உங்க வ,வா கதைய படிச்சி சிரிச்சிக்கிட்டு இருக்கேன். வாவ்!! கவித,குறும்புன்னு அசத்துறீங்க. பழய டாப்பிக் எல்லாம் படிக்கிறதுகு நல்லா இண்ட்ரெஸ்டிங்காஆ இருக்குது.!!

1 பசிக்கு பசி வந்தா பசின்னு கூட பாக்காம பசி பசின்னு பரக்கும்!

2 கவிசிவாவின் கவிதைகளை கருத்தாய் கைகளில் கனஜொராய் கொட்டி கற்பனை காளையுடன் கருக்கலில் கண்ணயர்ந்தேன்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

சூப்பர் மாமி! எல்லா இடத்துலயும் கலக்குற(எதைன்னு கேட்கக் கூடாது) ஆள் நீங்கதான் மாமி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்