கன்டன்ஸ்டு மில்க்

கன்டன்ஸ்டு மில்க் செய்வதற்கு 1லிட்டர் பால் எவ்வளவு நேரம் அடுப்பில் வைக்க வேண்டும்,இதை சர்க்கரை போட்டுத்தான் செய்யணுமா,சர்க்கரை போட்டால் கெட்டுபோய்டாதா இதை பிரிஜ்ஜில் எவ்வளவு நாள் ஸ்டோர் பண்ணிவைக்கலாம். யாருக்காவது தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.

ஹாய் கவி, நீங்கள் கேட்பது வீட்டிலேயே செய்து வைத்துக் கொள்வது எப்படியென்றுதானே? கடைகளில் மில்க்மெய்ட் ரெடிமேடாக கிடைக்கும்போது அதனை வாங்கி உபயோகிப்பது எளிதுதானே. வீட்டில் கண்டென்ஸ்டு மில்க் செய்யும்போது ஏற்படும் எரிபொருள் செலவு, நேரம் முதலியவற்றை கணக்கிடும்போது, ரெடிமேட் உபயோகிக்க சுலபம். கண்டென்ஸ்ட் மில்க் வீட்டிலேயே செய்ய பாலை மிகக் தீயில் 45-60 நிமிடங்களாவது வைக்க வேண்டும். ஆடை விழாதவாறு கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். லேசான சிவந்த நிறத்தில் மாறும்போது அடுப்பை அணைத்துவிடுங்கள். பாலில் சீனி கலக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்குப் பதிலாக ஒரு சிட்டிகை சோடா உப்பு கலந்து வைத்தால் கெடாமல் இருக்கும். 3-4 நாள் வரையே ப்ரிட்ஜில் தாக்குப் பிடிக்கும். கோவா செய்ய இதே முறையில் பால் கெட்டியாகும்வரை வைக்க வேண்டும். இதுவும் 3-4 நாட்கள் வரையே வைத்திருக்கலாம். மில்க்மெய்ட் என்றால் டின்னை திறந்து உபயோகித்துவிட்டு மீதியை ப்ரிட்ஜில் 7 நாட்கள் வரை வைத்திருக்கலாம். சில சமயம் அதற்கு மேலும் வரும்.

ஹலோ தேவா
எப்படி இருக்கீங்க, ரொம்ப நன்றி பதில் சொன்னதற்கு,இதுதான் உங்களுடன் முதல் முறை பேசுவது,வீட்டில் சில சமயம் பால் மீதியாகிவிடுகின்றது அதுதான் கேட்டேன்.

ஹாய் தோழீஸ் எனக்கு வீட்டில் கண்டென்ஸ்ட் மில்க் செய்ய ஆசையாக உள்ளது. அதை எப்படி செய்வது. அதற்க்கு என்ன என்ன வேண்டும். தயவு செய்து யாராவது விபரமாக சொல்லுங்கள். 1லிட்டர் பாலில் எவ்வளவு சுகர் பால்மாவு போட வேண்டும். எவ்வளவு நேரம் அடுப்பில் வைக்க வேண்டும்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்