டூருக்கு ஏற்ற உணவை சொல்லுங்களேன்..

அறுசுவை தோழிகளே, எங்க முதலாமாண்டு மணநாள் ஆகஸ்டு 23, அன்று நாங்க 2 நாள் டூர் ப்ளான் பண்ணியிருக்கோம். இங்க (US) கிடைக்கிற சாப்பாடு எங்களுக்கு சுத்தமா பிடிக்காது. அதனால முடிந்தவரை வீட்டிலிருந்தே உணவு எடுத்து செல்ல யோசித்திருக்கோம்.. உங்களுக்குத் தெரிந்த 2 நாட்களுக்கு கெடாமலிருக்கும் டிஃபன் மற்றும் சாத வகைகளை எனக்கு கூறுங்களே ப்ளீஸ்..

ஹாய் வேல்விழி, தங்களுக்கு எனது இனிய முதலாம் ஆண்டு மண நாள் வாழ்த்துக்கள்.

டூருக்கு ஏற்ற சாதவகைகள் புளி சாதம், எலுமிச்சைசாதம் முதலியவை. தொட்டுக் கொள்ள துவையல்( காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பு, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, உப்பு, புளி சேர்த்து அரைக்கலாம்), சிப்ஸ், வெங்காயம் சேர்க்காத மொறு மொறுப்பான உருளைக் கிழங்கு வறுவல் ( பூண்டு, சோம்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மட்டும் போட்டு எண்ணெய் ஊற்றி மொறு மொறுவென ஆகும்வரை அடுப்பில் வைத்திருங்கள்.உருளைக்கிழங்கை வேகவைத்து சேர்க்காமல் வறுவல் செய்யும்போது சிறுது தண்ணீர் தெளித்து செய்யுங்கள். எண்ணெயிலேயே பாதி வெந்துவிடும்). வத்தல் குழம்பு செய்தும் கொண்டு போகலாம். ஆனால் சாதம் தனியாக, குழம்பு தனியாக என்று பேக்கிங் வேலை சேர்ந்து விடும். வெயில் அதிகம் இருந்தால் சாதம் வீணாகிவிடலாம்.

டிபன் என்றால் சப்பாத்தி எடுத்து செல்லலாம். சுடும் போது எண்ணெய் ஊற்றாமல், சுடு தண்ணீரில் மாவை பிசைந்து (பிசையும் போது சிறிது தயிரும் சேர்க்கலாம்), சுட்டால் சாஃப்டாக இருக்கும். சிக்கன் சாப்ஸ் எடுத்து செல்லலாம்.சிக்கனை வெங்காயம் சேர்க்காமல் உருளைக்கிழங்குக்கு சொன்னதுபோல் எல்லாம் சேர்த்து அதனுடன் இஞ்சியும், எலுமிச்சை சாறும் சேர்த்து பிசறி எண்ணெயில் மொறு மொறுப்பாக சுக்கா வறுவல்போல் செய்து எடுத்து செல்லலாம். முதல் நாள் டிபனுக்கு இட்லி, பொடி( எண்ணெய் ஊற்றி வீட்டிலேயே கலந்து கொள்ளுங்கள்), துவையல் அல்லது மிளகாய்ச் சட்னி எடுத்து செல்லலாம். இட்லியை தனியாக பேக் செய்துக் கொள்ளுங்கள். அதே போல் முதல் நாள் சாப்பாட்டுக்கு தயிர் சாதம் ( தயிர் ஒரு ஸ்பூனும், பால் மீதியும் கலந்து) ஊறுகாய் எடுத்து செல்லலாம். தயிர் சாதத்திற்கு பேக்கிங் செய்யும்போது அழகாக லீக் ஆகாத வண்ணம் செய்யுங்கள்.

கொஞ்சம் cereal வகைகள், முசிலி பார் போன்றவை எடுத்து செல்லலாம். பாலுக்கு, கடைகளில் விற்கும் டெட்ரா பேக் பால் உபயோகிக்கலாம். டீ பேக்ஸ், சுகர், கப் போன்றவையும் எடுத்து செல்லலாம். ஸ்நேக்ஸ் அயிட்டம் நிறைய எடுத்து செல்லுங்கள். டிஷ்யூ பேக், ஸ்பூன்ஸ், பிளாஸ்டிக் பிளேட், கப், சிறிய டீ டவல் போன்றவை அவசியம் தேவை. ஞாபகம் வரும்போது இன்னும் எழுதுகிறேன்.

வேல்விழி உங்களுக்கு என்னுடைய முதல் வருட திருமண நாள் வாழ்த்துக்கள்...நல்லா enjoy பண்ணிட்டு வாங்க..உங்களை என் தங்கையாகவே நினைத்து கொள்கிறேன். உங்களுக்கு சம்மதமா? ஒரு நாள் விரிவாக பேசுகிறேன்

வேல்விழி,எனது மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்.நிடூழி காலங்கள் சீரோடும் சிறப்போடும் வாழ எனது வாழ்த்துக்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

எனது மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள். இன்றும் போல் என்றும் சீரும்,சிற்ப்போடு வாழுங்கள்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

வேல்விழி,உங்களூக்கு என்னுடைய முதல் வருட திருமண நல்வாழ்த்துக்கள்.டூரா அசத்துங்க.எஞ்சாய் பன்னுங்க.தேவா மேம் சொன்ன மாதிரி எல்லா ஐட்டம்ஸ் எடுத்து போங்க.
இன்று போல் என்றும் சீரோடும்,சிறப்போடும் வாழ என் வாழ்த்துக்கள்

எல்லாருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.. நேற்றிலிருந்து எங்க வீட்ல அருசுவை சைட் ஒபன் ஆகவே ஒரு மணி நேரம் எடுக்குது.. இப்போ தான் உங்க பதிலெல்லாம் பார்த்தேன்...எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.. எனக்கு ப்ரெண்ட்ஸ்ன்னா உயிர்.. ஆனா வீட்டு மனுஷங்க , பழகினவங்க, ப்ரெண்ட்ஸ், சொந்த ஊர் எல்லாரையும் விட்டு ரொம்ப தூரம் வந்துட்டோம்.. எல்லாரோட வாழ்த்துக்களையும் வாங்கறது கஷ்டம்.. இப்போ இவ்வளவு முகம் தெரியாத ப்ரெண்ட்ஸோட வாழ்த்துக்கள் கிடைச்சிருக்கு...எனக்கு ரொம்ப ரொம்ப சந்தொஷம்...
எங்க ஒட்டு மொத்த குடும்பத்திலே நான் தான் கடைகுட்டி பொண்ணு.. எனக்கு வீட்டில் ஒரே தம்பி மட்டும் தான்.. ஆனா பெரியம்மா வீட்டு அக்காக்கள் 6... இப்போ இன்னுமொரு அக்கா தாமரை ,அருசுவை மூலமாக கிடைததில் பல டன் கணக்கில் மகிழ்ச்சி... தேவா மேடம் ஹாட்ஸ் ஆஃப் யூ.... உங்க ரெஸ்பான்ஸ் எல்லாமே ரொம்ப விளக்கமா இருக்கு... ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்... சாதிக்கா மேடம், தனிஷா மேடம், மேனகா மேடம் உங்க எல்லாரோட ஆசீர்வாதங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்...உங்க எல்லாரோட வாழ்த்துக்கள் கிடைச்சதுல ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே

தேவா மேடம்..
இரண்டு நாளுக்கு சப்பாத்தி , துவையல் , உருளை வருவல் மற்றும் எலுமிச்சை (அ) புளிசாதம் தாங்குமா..? அப்புறம் இவையெல்லாம் முதல்நாலுக்கு முன் இரவே செய்து வைக்கலாம் தானே... அப்புறம் வெங்காயம் போடாத வடை நன்றாக இருக்குமா..? தொடர்ந்த பல பல கேள்விகளுக்கு மன்னிக்கவும்

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே

ஹாய் வேல்விழி, எத்தனை கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். இதற்கு எதற்கு மன்னிப்பெல்லாம் கேக்கறீங்க. நானும் உங்க அக்கான்னு நினைச்சுக்குங்க. நீங்க கிளம்புவதற்கு முதல் நாள் இரவு இவை அனைத்தையும் செய்து விடுங்கள். புளி சாதம், எண்ணெய் போடாத சப்பாத்தி எல்லாம் 3 நாளைக்கு தாங்கும். கவலை வேண்டாம். துவையல் எடுக்க பயன்படுத்தும் ஸ்பூன் ஈரமில்லாததாக பார்த்துக் கொள்ளுங்கள். நன்றாக தேங்காயை வறுக்க வேண்டும். புளி சின்ன நெல்லிக்காய் சைசுக்கு வைத்து அரையுங்கள். கெட்டுப் போகாது.உருளைக் கிழங்கும் மொறு மொறுப்பாக இருக்க வேண்டும். க்ரேவி போல இருக்கக் கூடாது. மேலே தடவி உள்ள மசாலா நன்றாக சிவக்க வறுத்தெடுங்கள்.

வெங்காயம் போடாத வடை, நாம் எப்போதும் செய்யும் வடை போன்று சாப்டாக செய்தால் கெட்டுப் போய்விடும். உளுந்து நூல் நூலாக கெட்டுப் போனது வடையைப் பிய்க்கும்போதே தெரிந்துவிடும். அதனால் உளுந்தை அதிகம் தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து, மிளகுத்தூள், உப்பு மட்டும் போட்டு, சிறிது பொரி அரிசி மாவை, வடை தட்ட எளிதாக வருவதற்கு சேர்த்து, அந்த மாவையே தொட்டு தொட்டு தட்டடை போல தட்டி, மொறு மொறுப்பாக கோயில் வடை போல பொரித்து எடுத்தால் நிறைய நாட்களுக்கு கெடாமல் இருக்கும். பொரி அரிசி மாவு செய்ய, (புழுங்கல் -Boiled Rice)அரிசியை வெறும் வாணலியில் வறுத்து, ஆறவைத்து மிக்சியில் அரைத்து தயாரித்துக் கொள்ளுங்கள். வடையை ஒரு பெரிய பாலிதீன் பேப்பரில் எண்ணெய் தடவி, தட்டடை போலவே நிறைய தட்டி வைத்துக் கொண்டு , பிறகு பொரித்து எடுக்கலாம். எண்ணெயை காயவைத்துவிட்டு, வடையை தட்டினால் சரிவராது. டீவி பார்த்துக் கொண்டே தட்டி வைத்து விடலாம். கொஞ்ச நேரம் காயவைத்தும் பொரிக்கலாம். மசால் வடையையும் இதே போல் மெலிதாக செய்யலாம். ஆனால் பிறகு அது தட்டடை ரெசிப்பி ஆகிவிடும்.

நல்லபடியா டூருக்கு போயிட்டு வாங்க. இன்று போல என்றும் நீங்க மகிழ்ச்சியாக இருக்க என் வாழ்த்துக்கள்.

தேவா மேம்..
ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்.. நீங்க சொன்ன அயிட்டம்ஸ் எல்லாம் செய்யறேன்..
இட்லி மட்டும் முடியாது.. ஏன்னா இங்க லாங்க் க்ரெய்ன் அரிசி தான் கிடைக்குது அதில் தோசை, இட்லி ரெண்டுமே சூடா இருந்தா தான் சாஃப்ட்டா இருக்கும்.. 2 மணி நேரம் ஆனால் காய்ந்து இருகிடும்..
ஸோ சப்பாத்தி அப்புறம் மஃபின்ஸ் ,& ப்ரெட் எடுக்க ப்ளான் பண்ணியிருகேன்..
ஸ்வீட்டுக்கு அதிரசம் மாவு நேத்து ஊற போட்டுட்டேன்..
ஜாமூன் மிக்ஸ் கூட இருக்கு.. ட்ரை ஜாமூன் ரெசிப்பி தான் தேடிட்டு இருக்கேன்.. அது என்னோட ஃபேவரிட்..
உருண்டை பொரிப்பது எப்போதும் போலத்தானே.. ஜீராக்கு மட்டும் சர்க்கரை அளவு சேர்த்து போடனுமா..? யாராவது தெரிந்தால் சொல்லுங்கல்..

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே

எனக்கு 2 நாள் அறுசுவை வரவே இல்லை, அதான் உங்கள பார்க்க முடியல,எல்லாம் இன்னைக்கு prepare பண்ணிட்டு இருப்பிங்கனு நினைக்கிறேன், சந்தோசமா போய்ட்டு இருந்துட்டு வாங்க, என் குழந்தை சந்தோஷ்க்கு 2 வயசு ஆகுது, அவருக்கு கணணி வேலை...நான் ஜெர்சி சிட்டி ஹைட்சில இருக்கேன், நீங்க நியூஜெர்சினு தெரியும்,எங்கனு சரியா புரியல..இனி மேல் உங்கள தங்கைனு மட்டும் தான் சொல்லுவேன்..மீண்டும் இந்த அக்காவின் வாழ்த்துக்கள் என் ப்ரியமான தங்கைக்கு...

மேலும் சில பதிவுகள்