பழமொழிகள் தெரிந்ததும் தெரியாததும்

வணக்கம் தோழிகளே! நம் முன்னோர்கள் நமக்கு நிறைய பழமொழிகளை சொல்லியுள்ளார்கள்.ஆனால் நாம் அதன் உண்மையான உள் அர்த்தம் தெரியாமல் மேலோட்டமாக தெரியும் அர்த்தத்திலேயே தவறாக பயன்படுத்தி வருகிறோம்.
நமக்கு தெரிந்த பழமொழிகளின் உண்மையான அர்த்தத்தை பகிர்ந்து கொள்ளலாமே!!!

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.இதன் மேலோட்டமான பொருள் மற்றவர்கள் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் குழந்தை தானே வளர்ந்து விடும்.
உண்மையான பொருள்
ஊரான் பிள்ளை-இன்னொருவர் மகளாகிய(பிள்ளையாகிய) உன் மனைவி
தன் பிள்ளை-அவள் வயிற்றில் இருக்கும் உன் பிள்ளை
இப்போ சேர்த்து பாருங்க.கர்ப்பிணியாகிய உன் மனைவியை ஊட்டினால் அவள் வயிற்றிலிருக்கும் உன் குழந்தை தானே வளரும்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

INTHA PALAMOZHIKU MENING EPPADI THERYUM KAVI. LASTWEEK THAN SUNTV LA PHUSHPAVANAM KUPPUSAMY INTHA PALAMOZHI SOLLI KARUTHUM SONNAR.

bharathi

நிஜமாகவா?இந்த விளக்கம் பல வருடங்களுக்குமுன் என் அப்பாவோடு வேலை செய்தவர் சொன்னது

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மறுபடியும் பழமொழிகளா? இந்த பழமொழி, விடுகதை, கணக்கு இதெல்லாம் ஆரம்பிக்கும்போதே கூடவே கருத்து மாறுபாடும் வந்துவிடுகிறது பார்த்தீர்களா?!
என்னை கவர்ந்த சில பழமொழிகள்

1. கோழி மிதித்து குஞ்சு முடமாகுமா?

2. ஆற்றில் போட்டாலும் அளந்து போடவேண்டும்.

3. ஐந்தில் வளயாதது ஐம்பதில் வளையுமா?

4. ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு.

5. காக்கை உட்கார பனம்பழம் விழுந்ததுபோல.

6. புலி பசித்தாலும் புல்லை தின்னாது.

7. ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பப்பூ சர்க்கரை.

8. காய்த்த மரம்தான் கல்லடிபடும்.

9. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.

10. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும். ( பாயவேண்டும் )

மாலதி மேடம் பழமொழிகள் எல்லாம் நன்றாக இருக்கு. நீங்க சொன்ன பழமொழிக்கு விளக்கமும், அர்த்தமும் தெரிந்தால் நல்லா இருக்கும் மேடம்.

மாலதி மேடம் பாரதி எழுதியதை நான் தவறாக நினைக்கவில்லை.நான் பள்ளியில் படிக்கும் போது கேட்ட விளக்கம் இது.சென்ற வாரம் இதே விளக்கம் பாரதியும் சன்டிவியில் பார்த்திருக்கிறார்கள்.ஒரு கோஇன்ஸிடென்ஸ் அவ்வளவுதான்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹலோ கவிசிவா,நலமா?நீண்ட நாட்களாய் அறுசுவையில் காணமுடியவில்லையே?எனக்குப் பிடித்த பழமொழி,நான் அடிக்கடி உபயோகிக்கும் பழமொழி எது தெரியுமா?
விட்டால் குடுமி,சிரைத்தால் மொட்டை.என் பையன்களுக்கு அட்வைஸ் பண்ணும் பொழுது இதை அடிக்கடி உபயோகிப்பேன்.இப்பொழுது விட்டால்...என ஆரம்பித்தாலே பொதும் என்னை முடிக்க விட்டாமல் அவர்களே முடித்து வைப்பார்கள்..
ஸாதிகா

arusuvai is a wonderful website

vanakkam en peiyar ramya naan mumbaiyil vasikirean.. naanum ungal aratai arangathil kalandhu kollalaama...

vanakkam en peiyar ramya naan mumbaiyil vasikirean.. naanum ungal aratai arangathil kalandhu kollalaama...

1. ஐந்தும் மூன்றும் அடுக்காய் இருந்தால் அறியாப்பெண்ணும் கறி சமைப்பாள்.

ஐந்து - ஐந்தரைப் பெட்டியில் இருக்கும் பொருட்கள்.
மூன்று - உப்பு, புளி, மிளகாய்

இவை எல்லாம் தயாராக இருந்தால் யார் வேண்டுமானால் சமைக்கலாம்.

இப்ப பிசி. இன்னும் வரும்.

அன்புடன்
ஜெயந்தி மாமி

மேலும் சில பதிவுகள்