பொது அறிவு வளர்த்துக் கொள்வோமா?

ஹாய் அறுசுவை தோழிகளே எல்லாரும் எப்படி இருக்கீங்க? பொது அறிவு சம்மந்தமான ஒரு புதிய டாப்பிக் இதில் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். மிக முக்கியம் யார் முதலில் பதில் சொல்கிறார் என்பதுதான் ஓகே வா. நா ரெடி.. நீங்க ரெடியா....... சமையல் சம்பந்தமான இணையத்தளம் என்பதால் முதலில் உணவு சம்பந்தமான கேள்வியை கேட்கிறேன். உணவு மட்டுமல்லாமல் விளையாட்டு, அறிவியல் போன்ற கேள்விகளையும் கேட்கலாம். இங்கு இருக்கறவங்க எல்லாரும் அறிவாளிகள்னு தெரியும், எங்க எல்லாரும் ஓடி வாங்க.

பாலில் சர்க்கரை எந்த வடிவில் உள்ளது?

பாலில் சர்க்கரை திரவ வடிவில் உள்ளது. சரியா பெண்ணே!
அன்புடன்
ஜெயந்தி மாமி

பாலில் சர்க்கரை வடிவம் லாக்டோஸ் தானே. நான் அடுத்த கேள்வியை தொடரலாமா?
1.அமெரிக்க விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா, இந்தியாவில் எந்த மாநிலத்தில் பிறந்தார்?
2.உடலில் இரத்தம் ஓட்டம் இல்லாத பகுதி எது?

1. ஹரியானா மாநிலம்
2. நகம், முடி .
சரியா
அன்புடன்
ஜெயந்தி மாமி

1. ஹரியானா மாநிலம்
2. நகம், முடி .
சரியா
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஜெயந்தி மாமி முதல் கேள்விக்கு சரியான பதில் சொல்லிட்டீங்க. இரண்டாவது கேள்விக்கு இது பதில்
இல்லை.

இது ஒரு புதிர் கணக்கு.எந்த இரன்டு எண்களை கூட்டினாலும் பெருக்கினாலும் ஒரே விடையை கொடுக்கும்.
உதவிகுறிப்பு:இரண்டு எண்களில் ஒன்று முழு எண்(whole number).இன்னொன்று தசம எண்(decimal number)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் ஆண்டாள் ரத்த ஓட்டம் இல்லாத பகுதி கண்ணின் கருவிழி சரியான்னு தெரியலை எங்கோ படித்த ஞாபகம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் கவி நீங்க சொன்ன பதில் ரொம்ப சரி. உங்களோட கணக்கத்தான் யோசிகிட்டு இருக்கேன். இருங்கவிடை சொல்றேன். பொது அறிவு கேள்விய நீங்க தொடருங்க. இல்ல நானே வேறு கேள்வி கேட்கட்டா?

நம் உடலில் வியர்வை சுரப்பிகள் இல்லாத உறுப்பு எது?
ரொம்ப ஈசியன கேள்வி இல்ல?சீக்கிரமா பதில் சொல்லுங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு கவிசிவா..!
நம் உடலில் வியர்வை சுரப்பிகள் இல்லாத உறுப்பு நம் உதடுகள்தான்.....! சரியா?

மேலும் சில பதிவுகள்