IFTAR மற்றும் SAGAR RECEPIES PLS

இஸ்லாமிய தோழிகளுக்கு என்னுடய சலாம், IFTAR மற்றும் SAGAR கூறிய RECEPIES கூருங்கள் pls.

ரிஸ்வானா ஷானுகானுக்கு எனது வஸ்ஸலாம்.
முதலில் சஹர்,இஃப்தார் என்றால் என்னவென்று தெரிந்திராத சகோதரிகளுக்கு விளக்கி விடுகின்றேன்.
வரும் ஒன்றாம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இஸ்லாமியர்களுக்கு புனித ரமலான் வருகின்றது.இந்த புனிதமான மாதம் முழுக்கமுழுக்க பொழுது புலர்வதற்கு முன்பிருந்து அந்தி சாயும் வரை விரதம் இருப்பார்கள்.சுமார் அதிகாலை 4மணி அளவில் சாப்பிடுவதை சஹர் என்றும்,நோன்பை முடித்துக்கொள்ளும் நேரமானமாலை சுமார்6 1/2 மணி அளவில் இஃப்தார் எனவும் வழங்குவர்.
ரிஸ்வானா,இனி உங்கள் கேள்விக்கு வருகின்றேன்.
எங்கள் வீட்டினை பொறுத்த வரை சஹருக்கு மீன்சமைக்க மாட்டோம்.சிக்கன்,மட்டன்,எப்பொழுதாவது வெஜிடேரியன்.மாசி சம்பல் அடிக்கடி இருக்கும்.கண்டிப்பாக சாப்பிட்டு விட்டு பழம்,இஞ்சி டீ சாப்பிடுவோம்.
இஃப்தாருக்கு தினமும் நோன்பு கஞ்சி.இதில் வெஜ் கஞ்சி,சிக்கன் கஞ்சி,மட்டன்கஞ்சி,போட்டி கஞ்சி என்று வெரைடியைமாற்றுவோம்.வடை சமோசா,ஸ்பிரிங் ரோல்,கட்லட்,,போண்டா,முர்தபா,பொடீஸ்,வாடா,மெதுபக்கோடா என தினமும் மாறும்.சமோசா,ஸ்பிரிங்ரோல்,கட்லட் போன்றவற்றை முன்னரே செய்து பிரீஸரில் வைத்துக்கொள்வோம்.கண்டிப்பாக சர்பத்,பழஜூஸ்,ரோஸ்மில்க் எதாவது இருக்கும்.சூட்டை தணிக்க சைனாகிராஸ் சாப்பிடலாம்.நோன்புகஞ்சியில் கண்டிப்பாக வெந்தயம் ,பூண்டு சேர்ப்போம்.இது குளிர்ச்சி தரும்.,வாய்வு தொல்லையையும் நீக்கும்.ஸ்னேகிதிகள் உங்களுக்கு தெரிந்ததை,உங்கள் வீட்டில் நடைமுறையில் உள்ளவற்றை சொல்லுங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

மேலும் சில பதிவுகள்