தேதி: August 29, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பழுத்த சிவப்பு தக்காளி - 1கிலோ
உப்பு - 25 கிராம்
சர்க்கரை - 15கிராம்
வினிகர் - 1/2 கப்
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 6
ஏலம் - 4
பூண்டு - 6பல்
வெங்காயம் - 1
சீரகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
சிவப்பு நிற புட்கலர் - 2 பின்ச்
பொட்டாஷியம்-மெடா-பை-சல்பேட் 1/4 டீஸ்பூன்
பாத்திரத்தில் நீர் விட்டு கொதித்ததும், தக்காளியை போட்டு, தக்காளியில் வெடிப்பு வந்ததும், அடுப்பை அணைத்து விடவும்.
நன்கு ஆறிய தக்காளியை தோலுரித்து, மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த தக்காளியை பெரிய கண்ணுள்ள வடிகட்டியில் வடித்துக்கொள்ளவும்.
பட்டை, கிராம்பு, ஏலம், பூண்டு, வெங்காயம், சீரகம், பச்சைமிளகாய், மிளகு ஆகிய எட்டு பொருட்களை சிறிது நீர் விட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து வடிகட்டி, ஜூஸை மட்டும் எடுத்து, வடிகட்டிய தக்காளி கூழில் சேர்க்கவும்.
அகலமான பாத்திரத்தில் வைத்து நன்கு கிளறவும்.
நன்கு கொதித்து மூன்றில் ஒரு பாகமாக குறுகியதும் உப்பு, சர்க்கரை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
வினிகர்,பொட்டாஷியம்- மெடா- பை- சல்பேட், கலர் பொடி சேர்த்துக் கிளறி, ஆறியதும், ஈரமில்லாத பாட்டிலில் ஸ்டோர் பண்ணவும்.
குறைந்த செலவில் வீட்டிலேயே சுவையான சாஸ் தயார்.
Comments
how long can we keep it?
ur recipe is really useful. if we buy ketch up at shops, there is some expiry date. but when we make this in our home, how to fix the period? so could u suggest me the period we can keep it? (i think, it will be useful to mention the period for items like ketch up and pickles)
டொமட்டோ கெட்ச்சப்
பொட்டாசியம் மெடா பை சல்பேட் சேர்ப்பது சாஸ் கெடாமல் இருப்பதற்குத்தான்.சுமார் 8- 10 வாரங்கள் நான் வைத்து இருக்கின்றேன்.பொட்டசியம் சேர்க்காமலும் செய்யலாம்.அப்படி செய்யும் பொழுது உபயோகித்து விட்டு உடனேயே பிரிட்ஜில் வைத்து விடவேண்டும்.இது சுமார் 2 வாரங்கள் வரைதான் வரும்.
ஸாதிகா
arusuvai is a wonderful website
thank u
thank u